Tamilnadu

“உதயா அண்ணன் வாராரு...” - உதயநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான பாடல் - விவரம்!

திமுக இளைஞர் அணி செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள் நாள், நாளை (நவ.27) கொண்டாடப்பட உள்ள நிலையில், கழக தொண்டர்கள் பலரும் வாழ்த்துகளையும், நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் "உதயா அண்ணன் வாராரு" என்கிற தலைப்பில் பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது. திமுக இளைஞரணி மாநில துணைச் செயலாளர் எஸ். ஜோயல் அவர்களின் பாடல் வரிகளில் பி. மாரிசக்தி அவர்கள் இசையில் வந்துள்ள இந்தப் பாடலை முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் வெளியிட, அதனை அன்பகம் செந்தில்குமார் பெற்றுக்கொண்டார்.

தொடர்ந்து பாடல் திரையிடப்பட்ட நிலையில், மாற்றுத்திறனாளிகள் உட்பட திமுகவினர் கைதட்டி பாடலை ரசித்தனர். அதனைத் தொடர்ந்து பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் அவர்களுக்கு முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்தார். தொடர்ந்து முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களுக்கு திமுக இளைஞரணி துணைச் செயலாளர் ஜோயல் அவர்கள் கலைஞர் சிலையினை நினைவுப் பரிசாக வழங்கி சிறப்பித்தார்.

தொடர்ந்து இளைஞர் அணி சார்பில் ஏராளமான மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் திமுக இளைஞரணி மாவட்ட, பகுதி, ஒன்றிய, வட்ட, பாக அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர்.

Also Read: நேற்று DGP... இன்று ஆளுநர்.. தவெக MLA விவகாரத்தில் உதயநிதி கொடுத்த புகாரில் இருந்தது என்ன? - முழு விவரம்!