Tamilnadu

“த.வெ.க கொள்கை பரப்பு செயலாளர் மாணிக்கம் தாகூர்” : கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி!

வ.உ.சிதம்பரனார் அவர்களின் நினைவு தினத்தையொட்டி அவரது சிலைக்கு தி.மு.க சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. பிறகு கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய ஆர்.எஸ்.பாரதி,” வ.உ.சி. அவர்களுக்கு பெருமை சேர்க்கின்ற வகையில் பல நிகழ்ச்சிகள் நடைபெற்றிருக்கிறது. தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுடைய ஆட்சி காலத்தில் தான் இங்கே வ.உ.சி. அவர்களுக்கு இந்த சிலை அமைக்கப்பட்டு, இன்றைக்கு இந்த நினைவு நாள் நிகழ்ச்சியிலே திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் கலந்து கொண்டு மறைந்த அந்த தியாகி அவர்களுக்கு வீர வணக்கம் செலுத்துகிறோம். வ.உ.சி. அவர்களுடைய தியாகம் எத்தகையது என்பதை இன்றைய இளைய சமுதாயம் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.

சுதந்திர இந்தியாவினுடைய சுதந்திர வெள்ளிவிழா நடைபெற்றபோது, அன்றைக்கு ஆட்சியிலே இருந்த முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் கோவையிலே சிதம்பரனார் அவர்கள் இழுத்த செக்கை நாட்டு மக்கள் அனைவரும் காண வேண்டும் என்பதற்காக இன்றைக்கு இருக்கின்ற ஓமந்தூரார் வளாகத்தில், அன்றைய ராஜாஜி மண்டபத்துக்கு பக்கத்தில் அந்த வ.உ.சி. அவர்கள் இழுத்த செக்கை கொண்டு வந்து சென்னை மாநகரத்திலே, தமிழ்நாட்டினுடைய தலைநகரத்திலே வைத்து எல்லோரும் பார்த்து அந்த தியாகிக்கு வீர வணக்கம் செலுத்துகின்ற நிகழ்ச்சி நடைபெற்றது. திமுக சார்பில் வீர வணக்கம் செலுத்துவதிலே நான் பெருமைப்படுகிறேன்” என்றார்.

பின்னர் செய்தியாளர் கேள்விக்கு பதிலளித்த ஆர்.எஸ்.பாரதி, ”விலைவாசி பற்றி அவங்களுக்கு தெரிய நியாயம் இல்லை. காரணம் என்னன்னா அவர்கள் அரண்மனை வாழ்க்கை நடத்துகிறார்கள். பாமர மக்களைப் பற்றி அவர்களுக்கு கவலை இல்லை. ஆனா ஓட்டு போட்ட பாமர மக்கள் தான் பரதேசியாகும் நிலை இருக்கிறது. தமிழ்நாடே பேங்கரப்ட் ஆகக்கூடிய நிலைமைக்கு வந்து கொண்டிருக்கிறது. எல்லா தொழிலும் ஆந்திராவுக்கு போய்க்கொண்டிருக்கிறது. உணவுப் பொருள்கள் விண்ணை முட்டுகிறது. சின்ன வெங்காயம் காலையிலேயே கேட்டேன் 240ரூபாய் ஆகி இருக்கு.

அரசினுடைய அஜாக்கிரதையால் இது போன்ற விலைவாசியில் இருக்கிறது. அதேபோல அரிசி விலை மூட்டைக்கு ₹1,000 ரூபாய் கிட்டத்தட்ட உயர்ந்திருப்பதாக சொல்லுகிறார்கள். இதெல்லாம் அவர்கள் கவலைப்படவில்லை. அவர்களுக்கு என்ன ரசிகர்கள் பாருங்க, டிவில கூட சொல்றாங்க. பெற்ற குழந்தை ஐசியுவில் இருக்க, நான் போய் விஜய் பார்த்துவிட்டு வரப்போறேன் சொல்லக்கூடிய அளவுக்கு பாமர மக்கள் இருக்கிற காரணத்தினால்தான் இது போன்ற நிகழ்வெல்லாம் நடக்குது. இதைப் பற்றி அரசாங்கம் கவலைப்படாமல் இருக்கு. காரணம், இப்படிப்பட்ட மக்கள் இருக்கிற வரைக்கும் நமக்கு தைரியமாக இருக்கலாம் என்ற தைரியத்தில்தான். இவ்வளவு நாள் வாயைத் திறக்காத சீப் மினிஸ்டர் இதைப் பற்றி ஒரு வார்த்தை சொல்லிருக்காரா? சொல்லல.

கேள்வி : சார், சோனியா காந்தியினுடைய புத்தக வெளியீட்டு விழாவிற்கு திமுக தலைவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், ஆனால் அந்த அழைப்பை அவர் ஏற்கல அப்படின்னு ஒரு தகவல் வருது. ?

அழைப்பு ஏற்கிறது, ஏற்கிறது எங்களுடைய விருப்பம். அதை யாரும் கட்டாயப்படுத்த...

கேள்வி : ஆனா அழைப்பு வந்ததா சார்?

அது தெரியல, கேக்கணும். எனக்கு தெரிஞ்சு எங்களுக்கு வந்திருக்கலாம். ஏன்னா சோனியா காந்தியைப் பொறுத்தமட்டிலும் தளபதி மீது மிகுந்த மரியாதை உள்ளவர். அவரை நாங்கள் மதிக்கிறோம். ஆகவே எங்கள் மரியாதை என்பது வேறு. ஆனால் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது என்பது வசதிக்கு ஏற்ப, சூழ்நிலைக்கு ஏற்ப கலந்து கொள்வோம். இது ஒரு பிரச்சனை அல்ல.

செய்தியாளர் கேள்விக்கு பதில் :

மேகதாது பிரச்சனை பற்றி டெல்லிக்குப் போனவர் ஒரு வார்த்தை கூட வாயைத் திறக்கல. இன்னைக்கு அதுதான் எல்லாருமே பேசி இருக்காங்க. இன்னைக்கு கர்நாடகா முதல்வர் சிவக்குமார் வந்து தைரியமா சொல்றார். எந்த தைரியத்துல பேசுறாருன்னா, இங்க ஒரு அரசாங்கமே இல்ல. ஆள் இல்லாத கேட்ல போய் அடிபட்டு சாவுற மாதிரி, ஆயிப்போச்சு தமிழ்நாடு. ட்ரெயின் வருதுன்னா போய் அடிச்சு சாவுற மாதிரி நிலைமை தமிழ்நாட்டுக்கு. அங்க போறாரு, காங்கிரஸ்காரங்கள பாக்குறாரு, ராகுல் காந்திய சந்திக்கிறாரு. ஆனா மேகதாது பிரச்சனையை மட்டும் தீர்க்க முடியாம இருக்குறதுக்கு என்ன காரணம்? அவருக்கு ஒன்னும் தெரியலன்னு அர்த்தம்.

மாணிக்கம் தாகூர் பற்றிய கேள்வி:

மாணிக்கம் தாகூர் வந்து த.வெ.க கொள்கை பரப்பு செயலாளர் ஆகிட்டார்.

Also Read: “த.வெ.க ஆட்சி தானாகவே கவிழும்” : முன்னாள் அமைச்சர் ரகுபதி திட்டவட்டம்!