Tamilnadu
குறுக்கு வழியில் ஓப்பன் டெண்டர் : த.வெ.க அரசின் ஊழல் ஒழிப்பு லட்சணம் இதுதான்? - பகீர் கிளப்பும் தகவல்கள்!
தமிழக அரசின் நிதித்துறையின் கொள்முதல் பிரிவு சார்பில், ’’அரசு ஒப்பந்தப்பணிகள் அனைத்தும் தமிழ்நாடு ஒளிவுமறைவற்ற ஒப்பந்தப்புள்ளிகள் (டெண்டர்) சட்டம் மற்றும் அதன் விதிகள் படியே மேற்கொள்ள வேண்டும் ” என்று உத்தரவிடப்பட்டது. அதன்படி, டெண்டர் அறிவிப்பு வெளியிடுவதும் முதல், ஒப்பந்தம் வழங்குவதற்கான ஆணை பிறப்பிப்பது வரை அனைத்து நடவடிக்கைகளும் தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையத்தளமான https://tntenders.gov.in மூலமாகவே மேற்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து கடந்த ஜூன் 30 ஆம் தேதி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை இயக்குநர் மற்றும் டி.ஆர்.டி.ஏ ஆணையர் அமுதவள்ளி, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடிதம் அனுப்பினார். அதில், தமிழ்நாடு ஒளிவுமறைவற்ற ஒப்பந்தப்புள்ளிகள் சட்டம் மற்றும் 2000 ஆம் ஆண்டு விதிகளை எவ்வித விலகலும் இன்றி கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் டெண்டர் நடைமுறைகளில் விதிமீறல்கள் ஏற்பட்டால் கடுமையாகக் கருதப்படும் என்றும் எச்சரித்து இருந்தார்.
ஆனால், இத்தகைய எழுத்துப்பூர்வ அறிவுறுத்தல்கள் நடைமுறையில் இருக்கும் போது, நவம்பர் 11 ஆம் தேதி அதிகாரிகளுக்கு இடையே நடைபெற்ற காணொலிக் கூட்டத்தில் ரூ.10 லட்சம் வரையிலான பணிகளுக்கு திறந்த ஒப்பந்தப்புள்ளி (Open Tender) கோரியே பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று வாய்மொழியாக உத்தரவிடப்பட்டது. இதை வலியுறுத்தி கடிதமும் அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம், ‘’ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஆணையரின் கடிதம், கடித எண் 41303/2021/UT3, நாள்: 16.08.2026’ என்பதை தெளிவுப்படுத்தச் சொல்லி கடிதம் எழுதியுள்ளனர். அதில், ‘’ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் ரூ.10 லட்சம் வரையிலான திட்டப் பணிகளுக்கு குறைந்த மதிப்பிலான கொள்முதல் (Low Value Procurement) நடைமுறையின் கீழ் திறந்த ஒப்பந்தப்புள்ளி (Open Tender) கோரும் நடைமுறையை செயல்படுத்துவது தொடர்பாக விளக்கம் கோருதல் தொடர்பாக -’’ என்று கூறப்பட்டுள்ளது.
தமிழக அரசின் டெண்டர் விதிகளை மீறும் வகையில் திடீரென்று அமைச்சர் ஆனந்த், துறையில் இப்படி ஒரு அறிவிப்பு வெளியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசின் கொள்கைகளுக்கு எதிராக உள்ளாட்சித்துறையின் செயல்பாடு இருப்பது உள்ளாட்சித்துறையிலும் ஒப்பந்தக்காரர்கள் மத்தியிலும் கடும்மையான எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. ’’டெண்டர் விதிமுறைகளை மீறினால், கடுமையான நடவடிக்கை எடுப்போம் என்று எச்சரித்து விட்டு, குறுக்கு வழியில் ஒப்பன் டெண்டர் என்ற புதிய முறையை கொண்டு வருவது ஏன்?’’ என்று அத்துறை பணியாளர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
’’ஓபன் டெண்டர் முறையில் டெண்டர் ஆவணங்களில் நிபந்தனைகளை தங்களுக்கு சாதகமாக வடிவமைத்தல், சிறு சிறு தொகைகளாகக் பணிகளைத் துண்டு துண்டாக்குதல், பணிகளை தொடங்கிய பின்னர் டெண்டர் விடுதல், ஒப்பந்தக்காரர்கள் கூட்டணி அமைத்தல், மறைமுகப் போட்டி, கமிஷன் பேரம் போன்ற ஊழல் வாய்ப்புகளை உருவாக்கும்’’ என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஊழல் செய்ய, குறுக்கு வழியில் ஓப்பன் டெண்டர்.. த.வெ.க அரசின் லட்சணம் இதுதான்.
Also Read
-
“நம் மண்ணில் வ.உ.சி பதித்த கொள்கைத் தடம் என்றும் அழியாது!” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!
-
“மருந்தும் மதுவும் ஒரே கூரையில்... த.வெ.க.வின் புதிய சுகாதாரக் கொள்கை!” : தி.மு.க கடும் கண்டனம்!
-
மேகதாது விவகாரம்: அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டுவதில் என்ன பிரச்சினை? - துரைமுருகன் சாடல்!
-
“பொய் சொல்லும் டி.கே.சிவக்குமார்... தீர்ப்புகளை மதிக்காத கர்நாடகம்!” : முரசொலி தலையங்கம் விமர்சனம்!
-
வேட்பாளரிடம் பணம் பெற்றுகொண்டு சீட்... தவெக IT Wing நிர்வாகியின் வீடியோவால் பரபரப்பு!