Tamilnadu

நூல் கொள்முதல் முறைகேடு - 6000 புத்தகங்கள் இடைச்செருகல் : போலிஸார் விசாரணையில் வெளிவந்த பீகர் தகவல்!

கோவை பெரியார் அறிவுலக நூலகத்துக்கு புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் போலியான நூலாசிரியர்களின் பெயர்களில் புத்தகங்கள் வாங்கப்பட்டதாகவும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப மூலம் உருவாக்கப்பட்ட நூல்கள், போலியான தகவல்கள் இடம்பெற்ற புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

’நூல் பரிந்துரைக் குழு, நூல் தேர்வுக் குழு, நூல் விலை பேச்சுவார்த்தைக் குழு, இறுதி செய்யப்பட்ட புத்தகங்களை வாங்க ஆணைகளை வழங்கும் உயர்நிலைக்குழு’ ஆகியவற்றில் இடம்பெற்றிருந்தவர்கள், சர்ச்சைக்குரிய அந்த புத்தகங்களை வாங்க பரிந்துரை செய்யவில்லை என்று கூறிவிட்டனர்.

இதனால், அதிகாரிகள் அளவிலேயே குளறுபடி நடந்துள்ளது என்று லஞ்ச ஒழிப்புத்துறை சந்தேகம் கொண்டது. அதை உறுதி செய்யும் வகையில் விசாரணையில் பல தகவல்கள் கிடைத்துள்ளது.

உரிய அனுமதி இல்லாமல் 6000 புத்தகங்கள் இடைச்செருகலாக வாங்கப்பட்டிருப்பது தமிழக ஊழல் தடுப்புத் துறையின், முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த குற்றசாட்டில் முதற்கட்டமாக 5 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

1.எஸ். காமாட்சி - தலைமை நூலகர் மற்றும் தகவல் அலுவலர் (பொறுப்பு), துணை தலைமை நூலகர், அண்ணா நூற்றாண்டு நூலகம், சென்னை.

2. தினேஷ் குமார் – தலைமை நூலகர் மற்றும் தகவல் அலுவலர் (பொறுப்பு), கலைஞர் நூற்றாண்டு நூலகம், மதுரை.

3. வி. சந்தானகிருஷ்ணன் – நூலகர் மற்றும் தகவல் அலுவலர், கலைஞர் நூற்றாண்டு நூலகம், மதுரை மற்றும் பெரியார் நூலகத்தின் பொறுப்பாளர்.

4. எஸ். சந்தான கார்த்திகேயன் – நூலகர் மற்றும் தகவல் அலுவலர், அண்ணா நூற்றாண்டு நூலகம், சென்னை.

5. ஜே. ஜூலியட் – தலைமை கணக்கு அலுவலர், பொது நூலக இயக்ககம்.

இவர்களில் காமாட்சி, ஜூலியட் ஆகியோர், கோவை பெரியார் அறிவுலக நூலகத்துக்கு, நூல் வாங்கும் நூல் விலை பேச்சுவார்த்தைக் குழுவில் இடம் பெற்று இருந்தனர்.

அடுத்தடுத்து, பலர் சிக்க இருக்கும் நிலையில், எதிர் கட்சி மீது வீண் பழி போடுவதை விட்டு விட்டு உண்மையான குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இனி, நூல் கொள்முதல் வெளிப்படையானதாகவும், தரமான புத்தகங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையிலும் நடைபெறுவதை த.வெ.க அரசு உறுதிப்படுதக வேண்டும்.

தி.மு.க மீது பழி போட்டதற்கு என்ன பதில் சொல்லப்போகிறது த.வெ.க அரசு?

Also Read: அமைச்சர் ஜெகதீஸ்வரி நிகழ்ச்சியில் மின்வெட்டு.. மின்வாரிய அதிகாரி பணியிடை நீக்கம்: தங்கம் தென்னரசு கண்டனம்