Tamilnadu
வெட்கமில்லாமல்... : சோனியாகாந்தியின் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற விஜய்க்கு அப்பாவு கண்டனம்!
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியாகாந்தியின் புத்தக வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் விஜய், பங்கேற்றதற்கு, முன்னாள் சபாநாயகர் அப்பாவு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அப்பாவு வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், ”காங்கிரஸ் கட்சியின் ஆதரவோடு ஆட்சி அமைத்து, முதல்வரான விஜய், காங்கிரஸ் தலைமையில் இருக்கிற இந்தியா கூட்டனியில் அங்கம் வகிப்பதாக அறிவிக்காமலும் கூட்டணி சார்பாக டெல்லியில் நடைபெற்ற போராட்டம் ஆர்பாட்டத்தில் கலந்துகொள்ளாமலும் ராகுல்காந்தியை பிரதம வேட்பாளராக ஏற்றுக்கொள்ளாமலும், இன்று டெல்லியில் சோனியாகாந்தி அவர்கள் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க வேண்டிய கட்டாயம் ஏன் ஏற்பட்டது CM சார்?
விஜய் பொறுப்பேற்ற நாள்முதல் பா.ஜ.க உத்தரவுக்கு இணங்க ஒன்றிய – மாநில உறவுகள் குறித்த முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையிலான குழுவை ரத்து செய்தும்,சென்னை விமான நிலையத்தை அதானிக்கு தாரை வார்க்க கடிதம் எழுதியும் ,பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை ரத்து செய்தும் , கன்னியாகுமரி கடற்கரை மீனவ மக்களின் எதிர்ப்பையும் மீறி தாது மணல் எடுக்க அனுமதித்தும் , தமிழ்நாட்டில் மு க ஸ்டாலின் அவர்களால் கொண்டுவரப்பட்ட SC,ST ஆணையத்திற்கு முன்னாள் மணிப்பூர் தலைமை நீதிபதியாக இருந்து SC ,ST மக்களுக்கு விரோதமாக தீர்ப்பு வழங்கி இன்று வரை மணிப்பூரை பற்றி எரிய தீர்ப்பு வழங்கி உள்ள நீதி அரசர் முரளிதரனை ஆணைய தலைவராக நியமித்தது உட்பட அனைத்தும் பா.ஜ.க ஆட்சியால் செய்ய முடியாததை கூட 6 மாதத்தில் தமிழக மக்களுக்கு எதிராக செய்து கொண்டு இருப்பதை மக்கள் மன்னிப்பார்களா CM சார்.
தமிழக சிறுபான்மை முஸ்லீம், கிறிஸ்தவ மக்களின் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக நீதி மன்ற உத்தரவை பெற்று பாஜக சிறுபான்மையினற்கு எதிராக செய்ய முடியாத துரோகத்தை உங்கள் ஆட்சியில் செய்ததை மறைப்பதற்கும் வருகின்ற சட்டமன்ற இடைத்தேர்தலை கருத்தில் கொண்டும் சோனியா காந்தி அவர்களின் புத்தக வெளியீட்டு விழாவிற்கு வெட்கமில்லாமல் செல்கிறீர்களா CM சார்?" என விமர்சித்துள்ளார்.
Also Read
-
சூரசம்ஹாரம் : “இதுதான் திராவிட மாடலுக்கும் ரீல்ஸ் மாடலாக உள்ள வித்தியாசம்” - சேகர்பாபு தாக்கு!
-
எந்தக் கொம்பனாலும் மேகதாதுவில் அணை கட்ட முடியாது; விஜய் அமைதி காப்பது ஆபத்து : துரைமுருகன் அதிரடி பேட்டி!
-
நூல் கொள்முதல் முறைகேடு - 6000 புத்தகங்கள் இடைச்செருகல் : போலிஸார் விசாரணையில் வெளிவந்த பீகர் தகவல்!
-
அமைச்சர் ஜெகதீஸ்வரி நிகழ்ச்சியில் மின்வெட்டு.. மின்வாரிய அதிகாரி பணியிடை நீக்கம்: தங்கம் தென்னரசு கண்டனம்
-
தமிழ்நாடு முழுவதும் காணாமல் போனவர்கள் எத்தனை பேர்? : DGP-க்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!