Tamilnadu
வெட்டி ஒட்டிய அட்ரெஸ் ; பொய் மேல் பொய் பரப்பி வரும் தரங்கெட்ட தவெக தற்குறிகள் - தி.மு.க ஐடி விங் பதிலடி!
கோவை பெரியார் அறிவுலகம் நூலகத்தில் போலியாகப் பல புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டு மிகப்பெரிய முறைகேடுகள் நடந்துள்ளதாகப் புகார் எழுந்துள்ளது. அதிலும் திரிஷா விஜய் என்ற பெயரில் ஓர் எழுத்தாளர் இருக்கிறார் என்பதெல்லாம் தற்போது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், முந்தைய தி.மு.க. அரசு மீது வீண்பழி போடும் த.வெ.க. அரசுக்குத் தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளது. குறிப்பாக, ஊர் பேர் தெரியாத அகல்விளக்கு பதிப்பகம் பற்றியும் அரசாணை குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.
இதற்கு ஆதாரத்தை வெளியிடுகிறேன் என்ற பெயரில், த.வெ.க. ஐ.டி. விங் வெட்டி ஒட்டப்பட்ட ஓர் அரசாணையை வெளியிட்டுள்ளது. ஆதாரம் கேட்டால் அதற்கு ஆதாரத்தை வெளியிட வேண்டும். அதற்குப் பதில் வழக்கம் போல் பொய்யைப் பரப்பியிருக்கிறது த.வெ.க. ஐ.டி. விங்.
இதனைத் தொடர்ந்து, 'பொய் மேல் பொய் பரப்பி வரும் தரங்கெட்ட த.வெ.க. தற்குறிகள்' எனத் தி.மு.க. ஐ.டி. விங் பதிலடி கொடுத்துள்ளது.
தி.மு.க ஐடி விங்-கின் சமூகவலைதள பதிவில், ’ரெண்டே ரெண்டு பேருக்கு நடுவுல தான் போட்டியே, ஒன்னு தவுட்டு தற்குறிகள், இன்னொன்னு தரங்கெட்ட தற்குறிகள்!
போட்டோஷாப்பில் ஏதோ கிண்டி எடுத்து வந்துள்ள தற்குறிகள் மண்டை மேல் உள்ள கொண்டையை மறப்பதைப் போல அட்ரெஸை கவனிக்க தவறிவிட்டனர்.நூலகத்தில் சீல் வைக்கப்பட்டதில் உள்ள அட்ரெஸ் மடிப்பாக்கம் என உள்ளது.
ஆணை என இவர்கள் வெட்டி ஒட்டி போட்டுள்ளதில் அட்ரெஸ் கொடவாசல் என உள்ளது.
காசிமேடு மீனவர்கள் பிரச்சனை, சட்டம் ஒழுங்கு, எல்லாத்துக்கும் மேல நேற்று இரவு த.வெ.க.வுக்கு ஏற்பட்ட பின்னடைவை திசைதிருப்ப பொய் மேல் பொய் பரப்பி வருகின்றனர் தரங்கெட்ட த.வெ.க தற்குறிகள்” என தெரிவித்துள்ளது.
Also Read
-
இதற்கு த.வெ.க கட்சியின் Emcee ராஜ்மோகனின் பதில் என்ன? : தி.மு.க ஐடி விங் சரமாரி கேள்வி
-
திரிஷா விஜய், விஜய் பாலு.. அதிர்ச்சியளிக்கும் பெரியார் அறிவுலக நூல்கள்,ஆசிரியர்கள் : திமுக சுளீர் கேள்வி!
-
தென்காசி : விவசாயத் தோட்டத்தில் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட பெண்.. தவெக ஆட்சியால் சுரண்டயில் பரபர!
-
“ஹைதராபாத்துல நடந்தது போல இங்கையும் நடக்கணுமா?” - விஜயின் உத்தரவுக்கு இ.பரந்தாமன் கண்டனம்!
-
கிழியும் முகத்திரை... போதை வேண்டும்? அரசியல் வேண்டாமா.. - விஜயை விளாசிய முரசொலி!