Tamilnadu
அசாமிலிருந்து கொண்டுவரப்பட்ட 5 யானைகள் : வெளிச்சத்திற்கு வந்த பா.ஜ.க - த.வெ.க-வின் ரகசியக் கூட்டு!
அசாமில் இருந்து தமிழ்நாட்டு கோவில்களுக்கு 5 யானைகளைக் கொண்டு வருவதற்கு, த.வெ.க அரசு ஒப்புதல் வழங்கிய விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
கொண்டு வரப்பட்ட யானைகளின் உண்மையான உரிமையாளர்கள் யார், அவை சட்டப்பூர்வமாகப் பிடிக்கப்பட்டவையா அல்லது வளர்க்கப்பட்டவையா என்ற விவரங்கள் மற்றும் அவற்றின் பிறப்பிடம் குறித்த தெளிவான தகவல்கள் இல்லை என்ற கேள்விகள் தற்போது எழுந்துள்ளன.
மேலும், சாமில் உள்ள ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையிலான பா.ஜ.க அரசு இந்த இடமாற்றத்திற்கு ஒப்புதல் அளித்த நிலையில், த.வெ.க அரசும் எவ்வித தாமதமும் இன்றி அவசரமாக இதற்கான தடையில்லா? சான்றிதழ்களை வழங்கியது எப்படி என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.
'ஜுடிஷியல்' கிருஷ்ணமூர்த்தி என்பவரின் மனைவி அனுராதா சுப்பிரமணியன் நடத்தி வரும் 'சேவா டிரஸ்ட்' மூலமாகவே இந்த யானைகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
மேலும், யானைகள் மாற்றத்திற்காக மார்டின் ரூ.6 கோடி செலுத்தினார் என்று அசாம் காங்கிரஸ் குற்றச்சாட்டு ஒன்றையும் முன்வைத்துள்ளது. இந்த மார்டின் மருமகன்தான் த.வெ.க ஆட்சியில் அமைச்சராக இருக்கும் ஆதவ் அர்ஜூனா.
இந்நிலையில்தான் அசாமில் இருந்து யானைகளை எடுத்து வரும் விவகாரத்தில், த.வெ.க அரசு பா.ஜ.க-வின் கைப்பாவையாக செயல்பட்டுள்ளது என்ற ஐயம் எழுந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, பா.ஜ.க-வுக்குச் சேவை செய்யும் த.வெ.க அரசைக் கேள்வி கேட்க வக்கில்லாமல், சந்தர்ப்பவாதக் கூட்டணிக் கட்சிகள் வாய்மூடிக் கிடக்கின்றன என தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி கேள்வி எழுப்பியுள்ளது.
இது குறித்து தி.மு.க ஐடி விங் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில் ”அசாமில் இருந்து யானைகளை எடுத்து வரும் விவகாரத்தில், தவெக அரசு பாஜகவின் கைப்பாவையாகச் செயல்பட்டது வெட்டவெளிச்சமாகியுள்ளது! சாதாரண மக்கள் ஒரு சான்றிதழ் வாங்க மாதக்கணக்கில் அலைய வேண்டும். ஆனால், பாஜகவுக்கு நெருக்கமான ஒருவருக்காக (Judicial Krishnamoorthy) வெறும் 8 மணிநேரத்தில் தவெக அரசு யானை இடமாற்றத்திற்கு அனுமதி கொடுத்திருக்கிறது!
பாஜகவுக்குச் சேவை செய்யும் தவெக அரசைக் கேள்வி கேட்க வக்கில்லாமல், சந்தர்ப்பவாதக் கூட்டணிக் கட்சிகள் வாய்மூடிக் கிடக்கின்றன. "ஆர்.எஸ்.எஸ் பெற்றெடுத்த பிள்ளை விஜய்" என்று கூட்டணிக் கட்சித் தலைவர் சொன்னதை இப்போது நிரூபித்துவிட்டது தவெக அரசு! பாஜகவின் ஒவ்வொரு செயலுக்கும் தவெக துணை போகிறது, அதை சந்தர்ப்பவாத கூட்டணிக் கட்சிகள் கை கட்டி வாய் பொத்தி வேடிக்கை பார்க்கின்றன” என விமர்சித்துள்ளது.
Also Read
-
அடிமாட்டு விலைக்கு கொடுக்க நினைப்பது அச்சமா? (அ) ஆந்திராரெட்டி கேங்கின் திட்டமா CM Sir?: அப்பாவு கேள்வி!
-
தவெக நிர்வாகி சி.விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்.. அம்பலமான தூயசக்தி தவெக நாடகம்?
-
பறவைக் காய்ச்சல் பரவல்? : கடலூரில் 10,000-க்கும் மேற்பட்ட கோழிகள் திடீரென உயிரிழப்பு!
-
மன்னிப்புக்கேள்..! இதுதான் ஒழுக்கத்தைப் போதிக்கும் முறையா? : அமைச்சர் ஜெகதீஸ்வரி பேச்சுக்கு SFI கண்டனம்!
-
“இளைஞர்களின் அரசு வேலை என்ற கனவையே சிதைக்கும் முதலமைச்சர் விஜய்” : முரசொலி தலையங்கம் ஆவேசம்!