Tamilnadu

“த.வெ.க ஆட்சிக்கு எச்சரிக்கை மணி அடுத்திருக்கும் தமிழ்நாட்டு பெண்கள்” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!

த.வெ.க ஆட்சியில் அதிகரித்துள்ள சட்டம் - ஒழுங்கு சீர்கேடு, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பற்ற சூழல், விலைவாசி உயர்வு ஆகியவற்றைக் கண்டித்து இன்று (அக்.31) தமிழ்நாடு முழுவதும் தி.மு.க மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் “ஏறிப்போச்சு.. ஏறிப்போச்சு.. விலைவாசி ஏறிப்போச்சு.. பனையூர் சார்.. பனையூர் சார்.. பருப்பு விலை தெரியுமா சார்.. அதிகரிக்குது.. அதிகரிக்குது பா*யல் குற்றங்கள் அதிகரிக்குது.. பயமா இருக்குது.. பயமா இருக்கு.. பெண்கள், குழந்தைகள் வெளியே வரவே பயமா இருக்கு..” என ஆவேசமாக பெண்கள் முழக்கங்களை எழுப்பினர்.

இந்நிலையில், த.வெ.க ஆட்சிக்கு தமிழ்நாட்டு பெண்கள் இன்று எச்சரிக்கை மணி அடுத்துள்ளனர் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், ”தமிழ்நாடெங்கும் இன்று தி.மு.க மகளிர் அணி

நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில், கட்சி சார்பற்ற மகளிரும் பெருந்திரளாகக் கலந்துகொண்டு தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

தங்கள் வீடுகளின் EB Bill-ஐயும் மளிகை Bill-ஐயும் பார்த்து, இந்த ஆட்சி மீது பெண்கள் பெரும் கோபத்தில் இருக்கின்றனர். விலைவாசி ஏற்றத்தால் ஏழை மக்கள் விக்கித்து நிற்கிறார்கள்.

போதாக் குறைக்கு, பெண்களுக்கு எதிரான குற்றங்களும் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன. தங்கள் வீட்டுப் பிள்ளைகளை வீட்டுக்கு வெளியே விளையாட விடவே அச்சப்படும் அளவுக்குச் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப் போயுள்ளதையும் அவர்கள் செய்திகளில் தினம்தினம் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.

விமர்சனம் செய்வோரை வேட்டையாடுவதிலும், இடைத்தேர்தல் நடக்கவுள்ள தொகுதிகளில் Show காட்டுவதிலும் முதலமைச்சருக்கு இருக்கும் கவனம் ஆட்சி நிர்வாகத்திலும் இருக்க வேண்டும் என்பதற்கான எச்சரிக்கை மணியைத் தமிழ்நாட்டுப் பெண்கள் அடித்துவிட்டனர்.அவர்களின் WakeUp Call-க்குச் செவிசாய்ப்பது அரசின் கடமை” என தெரிவித்துள்ளார்.

Also Read: Inky Pinky Ponky போட்டு தப்பிக்கும் கைதிகள்.. ‘மெத்’ அரசின் மெத்தனப்போக்கு : உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!