Tamilnadu
துவரம் பருப்பு கொள்முதல் விவகாரம் : வழக்கம்போல் திமுக மீது பொய் பழி... ஸ்டிக்கர் ஒட்டும் தவெக... விவரம்!
தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் மக்களுக்கு வழங்கப்படும் துவரம் பருப்பு கொள்முதல் செய்வதற்கு, ஒவ்வொரு காலாண்டிலும் (3 மாதங்களுக்கு ஒரு முறை) தமிழ்நாடு அரசு சார்பில் டெண்டர் விடப்படும். இந்த டெண்டர் விலையானது அப்போதைய பருப்பு விலை உள்ளிட்டவைகளை கணக்கில் கொண்டு நிர்ணயிக்கப்படும்.
இந்த சூழலில் தற்போது தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் மக்களுக்கு வழங்கப்படும் துவரம் பருப்பைக், கடந்த காலங்களைக் காட்டிலும் குறைவான விலையில் கொள்முதல் செய்து ரூ.187 கோடியை தவெக அரசு மிச்சம் பிடித்திருப்பதாக குடிமைப் பொருள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது. வழக்கம்போல் இதிலும் தவெக ஸ்டிக்கர் ஒட்டி கொள்ள முனைப்பு காட்டி வரும் நிலையில், உண்மை என்ன என்பதை இதில் பார்க்கலாம்.
அதாவது, ஒவ்வொரு முறையும் டெண்டர் கோரப்படும்போது, தேவைப்படும் சுமார் 60,000 மெட்ரிக் டன்னும் ஒரே டெண்டராகக் கோரப்படுவது வழக்கம். அந்த வகையில் ஜூலை - செப்டம்பர் மாதங்களுக்கான பருப்பை ரூ.77.89-க்கு கொள்முதல் செய்துள்ளதாகவும், இதனால் இந்த ஆட்சியில் கொள்முதல் விலை ரூ.31 வரை குறைந்து, அரசுக்கு ரூ. 750 கோடி மிச்சமாகும் என்றும் தவெக அரசு தெரிவித்துள்ளது.
அதோடு மட்டுமல்லாமல், கடந்த திமுக ஆட்சியில் ரூ.109 வாங்கிய துவரம் பருப்பை ரூ.77.89-க்கு தவெக அரசு வாங்கியுள்ளதாகவும், தவெக அரசு கொள்முதல் விலையை ரூ.31 வரை குறைந்ததாகவும் போலியாக பெருமிதம் தேடி கொண்டுள்ளது தவெக அரசு.
ஆனால் இங்கே உண்மை என்னவெனில், கடந்த திமுக ஆட்சியின்போது, 2026 பிப்ரவரி மாதத்திலேயே ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.77.99-க்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 2026 மே 2ம் தேதி (கடந்த திமுக ஆட்சியின் தொடர்ச்சி) ரூ.77.89-க்கு கொடுக்கப்பட்டுள்ளது. தெளிவாக சொல்ல சொன்னால், டெண்டர் கோரப்பட்ட மற்றும் கொள்முதல் செய்யப்பட்ட விலையில் வெறும் 10 பைசா வித்தியாசமே இடம்பெற்றுள்ளது. மொத்தமாக ரூ.467 கோடிக்கு கொள்முதல் செய்யயப்பட்டுள்ளது.
ஆனால் தவெக-வோ வழக்கம்போல் போலி செய்தியை பரப்பியதோடு, திமுக ஆட்சியில் நிகழ்த்தப்பட்டதை தாங்கள் நிகழ்த்தியதாக ஸ்டிக்கர் ஒட்டி கொண்டுள்ளது. மேலும் 2024 நவம்பரில் ரூ.112.69 ஆக இருந்த கொள்முதல் விலையை, படிப்படியாக 2026 பிப்ரவரியில் ரூ.35 வரை குறைத்து, ரூ.77.99 ஆகக் கொண்டு வந்தது திமுக அரசு தான்.
இதனை எல்லாம் மறைத்துவிட்டு தவெக வெளியிட்டுள்ள செய்தியை அப்படியே சில தவெக ஆதரவு ஊடகங்களும் எதையும் ஆராயாமல், அப்படியே வெளியிட்டுள்ளது. ஒருவேளை தவெக சொல்வது உண்மையென்றால், குறைந்த விலையில் கொள்முதல் செய்த தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் (TNCSC) மேலாண் இயக்குநர் 2026 ஜூலை 13 அன்று ஏன் மாற்றப்பட்டார்?
அதுமட்டுமின்றி தற்போது ரூ.467 கோடிக்கு கொள்முதல் செய்த தவெக அரசு, மே மாதம் ரூ.584.17 கோடிக்கு கொள்முதல் செய்தது ஏன்? கிட்டத்தட்ட இரண்டு டெண்டருக்கும் இடைவெளி ரூ.120 கோடியாகும். இப்படியிருக்கும் சூழலில் தவெக வழக்கம்போல் எல்லாவற்றுக்கும் திமுக மீது பழியை போட்டு தப்பிக்கொள்ளவே முனைப்புக்காட்டி வருகிறது.
தமிழ்நாட்டில் விஜய் ஆட்சி அமைந்ததில் இருந்தே திராவிட மாடல் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அநேக திட்டங்களுக்கு பெயர் மாற்றி ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டும், தாங்கள் ஆட்சியில் இருப்பதை மறந்து, சட்டம் ஒழுங்கு சீர்கேடுக்கு திமுக மீது பழியை சுமத்தி வருவதுமே அரங்கேறி வருகிறது. அதோடு தாங்கள் ஊழலற்ற ஆட்சி என்று வாய்ச்சவடால் அடித்துக்கொள்ளும் விஜய் அரசின் ஊழலும் ஒவ்வொன்றாய் அம்பலமாகி வருகிறது.
அந்த வகையில், கடந்த திமுக ஆட்சியில் கோரப்பட்ட துவரம் பருப்பு டெண்டர் விலையை, தாங்கள் தான் முதல்முறையாக கொண்டு வந்தோம் ஸ்டிக்கர் ஒட்டியும், திமுக ஆட்சியில் ரூ.109-க்கு துவரம் பருப்பு கொள்முதல் செய்யப்பட்டதாக போலி பிரச்சாரம் செய்தும் தவெக வழக்கம்போல் வாழ்க்கையை ஓட்டி வருவதற்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.
Also Read
-
தமிழ்நாட்டின் உள்நாட்டு பொருளாதாரம் ஏன் தேய்கிறது? : த.வெ.க அரசுக்கு தங்கம் தென்னரசு கேள்வி!
-
🔴LIVE UPDATES: இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிலவரம் - வாக்குச்சாவடியில் முறைகேடு செய்யும் தவெக!
-
செவிலியர்களின் உண்மைக் கண்ணீரைத் துடைக்க மறுப்பது ஏன்? : விஜய்க்கு எதிர்க்கட்சி தலைவைர் உதயநிதி கேள்வி!
-
“செவிலியர்கள் முதுகில் குத்தும் த.வெ.க. அரசு” : தவெக அரசுக்கு, மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!
-
“நாளுக்கு நாள் அதிரித்து வரும் தூய சக்தியின் துர்நாற்றம்” : வெளுத்து வாங்கிய முரசொலி தலையங்கம்!