Tamilnadu
‘வெற்றிப் பயணம்’ திட்டம் : புறக்கணிக்கப்படும் மாற்றுத்திறனாளிகள்? - தவெக அரசின் பதிவில் வெளிவந்த உண்மை!
கடந்த திராவிட மாடல் ஆட்சியில், முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் அவர்கள் கையெழுத்திட்ட 5 கோப்புகளில் ஒன்றுதான் மகளிர் கட்டணமில்லா பேருந்து பயணம் (விடியல் பயணம்). இந்த பயணத்தின் மூலம் பெண்கள் கட்டணமின்றி பயணம் செய்ய முடியும். இந்த சூழலில் இந்த திட்டத்தின் தொடர்ச்சியாக தற்போது முதல்வர் விஜய் பெயரை மாற்றி 'வெற்றி பயணம்' திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார்.
இந்த திட்டத்தில் டீலக்ஸ், LSS, Express ஆகிய பேருந்துகளிலும் பெண்கள் கட்டணமின்றி பயணம் செய்யலாம். முன்னதாக இந்த திட்டம் குறித்து சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியான போது, அதில் மாற்றுத்திறனாளிகள் இடம்பெறவில்லை என்ற சர்ச்சை எழுந்தது. இதையடுத்து அப்போதே மாற்றுத்திறனாளிகளுக்கும் ‘வெற்றிப் பயணம்’ திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த சூழலில் இன்று இது தொடர்பான அரசு சார்பில் வெளியான செய்திக்குறிப்பில் மாற்றுத்திறனாளிகள் குறித்து எவ்விதக் குறிப்பும் இடம்பெறாதது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இது தொடர்பாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாற்றுத்திறனாளிகள் அணியின் மாநிலச் செயலாளர் பேராசிரியர் தீபக் நாதன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கை வருமாறு :-
“மாற்றுத்திறனாளிகளுக்கும் ‘வெற்றிப் பயணம்’ திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட பின்னரும், இன்று நடைமுறைக்கு வரும் இத்திட்டம் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில் மாற்றுத்திறனாளிகள் என்ற வார்த்தையே இடம்பெறாதது மிகுந்த அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் அளிக்கிறது.
சட்டமன்றத்தில் அழுத்தம் ஏற்பட்ட பின்னர் மாற்றுத்திறனாளிகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று அறிவித்துவிட்டு, நடைமுறைக்கு வரும் நாளில் வெளியிடப்படும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் அவர்களைப் பற்றி குறிப்பிடாமல் இருப்பது, அந்த அறிவிப்பு வெறும் கண்துடைப்புக்காக வழங்கப்பட்டதா என்ற கேள்வியை எழுப்புகிறது.
மாற்றுத்திறனாளிகளும், அவர்களுக்கு உதவி செய்யும் குடும்பத்தினரும் அரசுப் பேருந்துகளைப் பயன்படுத்தித்தான் பயணம் செய்கிறார்கள். அவர்களுக்கும் கட்டணமில்லா பயண வசதியை வழங்குவதால் தமிழக அரசுக்கு என்ன பெரிய நிதிச்சுமை ஏற்படப்போகிறது?
மாற்றுத்திறனாளிகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும் என்ற நம்பிக்கையை சட்டமன்றத்தில் ஏற்படுத்திவிட்டு, தற்போது அவர்களைப் பற்றிய எந்தக் குறிப்பும் இல்லாமல் திட்டத்தை செயல்படுத்துவது நியாயமற்றது.
மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் குறித்து அறிவிப்புகளை வெளியிடுவது மட்டுமல்லாமல், அவற்றை நடைமுறைப்படுத்துவதிலும் அரசு உறுதியுடன் செயல்பட வேண்டும். இல்லையெனில், சட்டமன்றத்தில் வழங்கப்படும் அறிவிப்புகள் வெறும் வாக்குறுதிகளாகவே மாறிவிடும்.
மாற்றுத்திறனாளிகளை மீண்டும் மீண்டும் புறக்கணிக்கும் வகையிலான நடவடிக்கைகள் தொடருமானால், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையை அரசு எந்த அளவுக்கு முன்னுரிமையுடன் நடத்துகிறது என்ற கேள்வி எழுவது இயல்பானது.
எனவே, சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டபடி ‘வெற்றிப் பயணம்’ திட்டத்தை மாற்றுத்திறனாளிகளுக்கும் உடனடியாக விரிவுபடுத்த வேண்டும். அதற்கான தெளிவான அரசாணை அல்லது அதிகாரப்பூர்வ நடைமுறை அறிவிப்பை தமிழக அரசு உடனடியாக வெளியிட வேண்டும்.
மாற்றுத்திறனாளிகளுக்கு அளிக்கப்பட்ட அறிவிப்பு செயல்படுத்தப்படுகிறதா அல்லது வெறும் அறிவிப்பாகவே நிற்கப்போகிறதா என்பதை தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும்.”
Also Read
-
வெட்கமில்லாமல்... : சோனியாகாந்தியின் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற விஜய்க்கு அப்பாவு கண்டனம்!
-
சூரசம்ஹாரம் : “இதுதான் திராவிட மாடலுக்கும் ரீல்ஸ் மாடலாக உள்ள வித்தியாசம்” - சேகர்பாபு தாக்கு!
-
எந்தக் கொம்பனாலும் மேகதாதுவில் அணை கட்ட முடியாது; விஜய் அமைதி காப்பது ஆபத்து : துரைமுருகன் அதிரடி பேட்டி!
-
நூல் கொள்முதல் முறைகேடு - 6000 புத்தகங்கள் இடைச்செருகல் : போலிஸார் விசாரணையில் வெளிவந்த பீகர் தகவல்!
-
அமைச்சர் ஜெகதீஸ்வரி நிகழ்ச்சியில் மின்வெட்டு.. மின்வாரிய அதிகாரி பணியிடை நீக்கம்: தங்கம் தென்னரசு கண்டனம்