Tamilnadu
இந்தி influencers-களுக்காக.. இந்தியில் மாற்றப்படும் தமிழக ஊர் பெயர்கள்.. வெளிவந்த விஜயின் உண்மை முகம்!
தமிழ்நாட்டில் தற்போது இருக்கும் தவெக அரசு தமிழ்நாட்டை பின்னோக்கி இழுத்து செல்கிறது. பணவீக்கத்தில் (விலைவாசி உயர்வு) தமிழ்நாடு 2-வது இடத்தில் இருக்கும் நிலையில், 3 மாதங்களுக்குள் ரூ.20 ஆயிரம் கோடி புதிதாக கடன் வாங்கிய, தமிழ்நாட்டை மேலும் கடனாளியாக மாற்றியுள்ளது விஜயின் தவெக அரசு.
இதுமட்டுமின்றி சட்டம் ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு என தமிழ்நாடு தொடர்ந்து கடந்த 4 மாதங்களாக மோசமாகி வரும் நிலையில், விவசாயிகள், மீனவர்கள், தூய்மை பணியாளர்கள் என அடுத்தடுத்து பொதுமக்களை தவெக அரசு கொடுமை செய்து வருகிறது. இதுமட்டுமின்றி பல்வேறு துறைகளை தனியாருக்கு கொடுக்கவும் தவெக அரசு திட்டமிட்டு வருகிறது.
இதற்கு பல்வேறு கண்டனங்கள் எழுந்து வரும் நிலையில், தற்போது தமிழ்நாட்டை இந்துமயமாக்க விஜய் அரசு மும்முரம் காட்டி வருவது அப்பட்டமாக தெரியவந்துள்ளது. இந்தி திணிப்புக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் இருந்து வரும் நிலையில், மாநில அரசே இந்தியை திணிக்கும் நோக்கில் செயல்பட்டுள்ளது.
தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை துறை சார்பில் அனைத்து பகுதிகளில் வழிகாட்டி பலகை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள வழிகாட்டி பலகையில் இருக்கும் ஊர்களின் பெயர்கள் தமிழ், இந்தி, ஆங்கிலம் என மூன்று மொழிகளில் இடம்பெற்றுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இருமொழிக் கொள்கையை பின்பற்றும் தமிழ்நாட்டில், இதுவரை அரசு துறைகளின் கீழ் இயங்கும் அனைத்து விவகாரங்களிலும் தமிழ் மற்றும் ஆங்கிலம் மட்டுமே இடம்பெற்றிருக்கும். இப்படியான சூழலில் ஊர்களின் பெயர்கள் இந்தியிலும் இடம்பெற்றுள்ளது, அதுவும் இரண்டாவது இடத்தில் இடம்பெற்றுள்ளது தவெக அரசுக்கு தொடர்ந்து கண்டனங்களை எழுப்பி வருகிறது.
ஏற்கனவே இணையத்தில் ரீல்ஸ் மூலம் பிரபலமாகி, போலி செய்திகள் மூலம் தற்போது விஜய் முதலமைச்சராகியுள்ள நிலையில், வட மாநில influencers-களுக்கு பணம் கொடுத்து போலி பிரச்சாரம் செய்து வருகிறது தவெக-வின் ரூட் மாஃபியா. தமிழ்நாட்டில் தவெக ஆட்சிக்கு வந்து வெறும் 4 மாதங்களே ஆகியுள்ள நிலையில், இரண்டு மாதத்திலேயே வட மாநில influencers-கள், தமிழ்நாடு மிகப்பெரிய வளர்ச்சியை விஜய் கொண்டு வந்ததாக பொய் பிரச்சாரம் செய்தது.
இப்படியான சூழலில் வட மாநிலத்தவர்களை கவரும் நோக்கிலும், பாஜகவின் கொள்கைகளில் ஒன்றான இந்துமயமாக்குவதையும் தற்போது தவெக கையில் எடுத்து செயல்படுத்தி வருவதாக இணையவாசிகள் விமர்சித்து வருகின்றனர்.
Also Read
-
“பேச தகுதி இருக்கா...? அவ்வளவு ரோஷம் இருந்தால்...” - விஜயை வெளுத்து வாங்கிய முரசொலி தலையங்கம்!
-
“விஜய்க்கு சொல்புத்தியும் இல்லை சுயபுத்தியும் இல்லை” : தாராபுரத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேச்சு!
-
Party Fund வாங்கிய த.வெ.க?; நீதிமன்றத்தில் அம்பலப்பட்ட மெகா ஊழல் : ஆர். எஸ்.பாரதி அறிக்கை!
-
முடங்கியுள்ள பொருளாதாரம் ; த.வெ.க அரசு என்ன பதில் சொல்லப் போகிறது? - தங்கம் தென்னரசு கேள்வி!
-
“பணத்தைக் கொடுத்து ஓட்டுகளையும் விலைக்கு வாங்க தூய சக்தி விஜய்” : DMK IT WING விமர்சனம்!