Tamilnadu
டம்மியின் இடைத்தேர்தல் பிரச்சார ஸ்கிரிப்ட் ரெடியா virtual abusers? : DMK IT WING கேள்வி!
சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு "தி.மு.க. அரசு அதைச் செய்யவில்லை, இதைச் செய்யவில்லை" எனக் குற்றச்சாட்டுகளைச் சுமத்திய விஜய், இன்று முதலமைச்சர் ஆன பிறகுகூடத் தனது பொறுப்பைத் தட்டிக்கழித்து, இப்போதும் தி.மு.க. மீதே குற்றம் சாட்டிவருகிறார்.
மின்வெட்டு ஏன் ஏற்படுகிறது என்று மக்கள் கேட்டால் "தி.மு.க.வின் சதி" என்று சொல்கிறார். சட்டம் - ஒழுங்கு சீர்குலைவு பற்றிக் கேட்டால் அதற்கும் தி.மு.க.வையே கைகாட்டுகிறார்கள்.
"இதைச் சொல்வதற்கா உங்களுக்கு நாங்கள் வாக்களித்தோம்?" என்று மக்கள் கேட்டால்... வாய்மூடி மௌனமாகத் தலைமைச் செயலகத்தில், கடற்கரையைப் பார்த்தவாறு அமைந்திருக்கும் தனது அறையின் அலங்கார வேலைப்பாடுகளை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார்.
நடந்து முடிந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில்கூட, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எழுப்பிய 16 கேள்விகளில் ஒரு கேள்விக்குக்கூடப் பதில் சொல்ல முடியாமல், ஊர் அறிந்த சர்க்காரியா கமிஷனை எடுத்துக்காட்டுகிறார்.
நாம்தான் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்பதை மறந்து, இன்றும் தேர்தல் பிரச்சார பாணியிலேயே சுற்றிக்கொண்டிருக்கும் விஜய், தற்போது குதிரைப்பேரத்தால் நடக்கவிருக்கும் இடைத்தேர்தலுக்காகப் பிரச்சாரம் செய்யப் புறப்பட்டிருக்கிறார்.
இந்நிலையில் டம்மியின் இடைத்தேர்தல் பிரச்சார ஸ்கிரிப்ட் ரெடியா virtual abusers? என தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி கேள்வி எழுப்பியுள்ளது.
இது குறித்து DMK IT WING வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், ”தமிழ்நாடு முதலமைச்சர் என்ற பொறுப்போடு கண்ணியத்தோடு பேசுவாரா? இல்லை, எப்போதும் போல அந்தக் கண்றாவி மேனரிசத்துடன் தான் காற்றில் கம்பு சுற்றுவாரா?
தவெக குதிரை பேரத்தில் அதிமுக எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கியதால் தானே இந்த இடைத்தேர்தலே மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது என்று கடுகளவாவது மனசாட்சிக்கு உறுத்தவில்லையா?
மின்வெட்டு, சட்ட ஒழுங்கு சீர்கேடு, விலையேற்றம் போன்ற தனது அப்பட்டமான நிர்வாகத் தோல்விகளுக்கு இப்போதாவது accountability எடுப்பாரா?அல்லது "எல்லாம் திமுக சதி" என எப்போதும் போல Victim Card எடுப்பாரா?
ஓட்டுக்கு பணம் கொடுத்துக் கையும் களவுமாக மாட்டிய பின்பும், எவ்விதக் கூச்சமும் இல்லாமல் "நாங்கள் காசு தரமால் ஜெபிப்போம்" என மேடையில் எப்போதும் போலப் பச்சையாகப் பொய் சொல்வாரா?
ஜெம் வீரமணி வழக்கில் நீதியரசர் பத்மா அவர்கள் உத்தரவிற்கு கிடைக்க வேண்டிய கிரெடிட்டைத் திருடிப் 'பெண்கள் பாதுகாப்பு' குறித்து ரீல்ஸ் விடுவதற்கு முன்பு, சொந்தக் கட்சிப் பெண்களையே கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளிகளுக்கு உதவிய திருவைகுண்டம் தவெக எம்.எல்.ஏ-வுக்கு 24 மணி நேரத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு கொடுத்து மட்டுமல்லாமல், கேவலமாகச் சமரசம் பேசி காப்பாற்றியது குறித்துத் திருவாய் திறப்பாரா? என கேள்வி எழுப்பியுள்ளது.
Also Read
-
மர்ம காய்ச்சலால் 1 வயது குழந்தைக்கு நேர்ந்த துயரம் : சோகத்தில் மூழ்கிய கிராமம்!
-
காலை உணவுத் திட்டம் : பல்லி விழுந்த சாப்பாடு.. தவெக அரசின் அலட்சியத்தால் 40 மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்!
-
‘துரோகியே வெளியில் போ‘... தலைதெறிக்க ஓடும் த.வெ.க. வேட்பாளர்கள் : முரசொலி தலையங்கம்!
-
போராட்டம் ஒரு புறம் - ரீல்சிற்காக ஆய்வு மறுபுறம்! : மின்வெட்டிற்கான தீர்வை தட்டிக்கழிக்கிறதா த.வெ.க?
-
கனிமொழி எம்.பி-யின் ஒற்றைப் பதிவு.. சமூக வலைதளங்களில் படு வைரல்!