Tamilnadu
காலை உணவுத் திட்டம் : பல்லி விழுந்த சாப்பாடு.. தவெக அரசின் அலட்சியத்தால் 40 மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்!
தமிழ்நாட்டில் தவெக அரசு ஆட்சி அமைந்ததில் இருந்து மக்கள் நலன் சார்ந்து எந்தவொரு திட்டத்தையும் அறிவிக்கவில்லை. மாறாக மக்களை ஏமாற்றும் விதமாக டம்மி திட்டங்களையும், கடந்த திராவிட மாடல் ஆட்சியில் தொடங்கப்பட்ட அற்புதமான திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டியும் வருகிறது விஜய் அரசு.
அதில் பிரதானமான ஒன்று தான், கடந்த ஆட்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொன்டு வந்த 'முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்'துக்கு, 'முதலமைச்சர்' என்ற சொல்லை நீக்கி விட்டு, 'காமராஜர் காலை உணவுத் திட்டம்' எனப் பெயர் மாற்றம் செய்துள்ளது ரீல்ஸ் அரசு.
பெயர் மாற்றியதையடுத்து நேற்று (செப்.23) காலை உணவுத் திட்டம் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. முதல் நாளான நேற்று முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்த நிலையில், அந்த நிகழ்ச்சியில் வைக்கப்பட்ட பேனரில் திட்டத்தின் பெயரில் உள்ள காமராஜர் புகைப்படம் ஒரு ஓரத்தில் கூட இடம்பெறாமல், விஜயின் புகைப்படமே பெரிய அளவில் இடம்பெற்றிருந்தது.
அதோடு குழந்தைகளுக்கும், விஜய்க்கும் இடையே கூட அவ்வளவு இடைவெளி விட்டு அமர்ந்திருந்த நிலையில், பல பள்ளிகளில் ரீல்ஸ்-க்காக மாணவர்களுக்கு குறைந்த அளவிலேயே உணவு செயப்பட்டுள்ளது. இதனால் கடையில் இருந்து மாணவர்களுக்கு வாங்கி கொடுக்கும் அவலம் ஏற்பட்டது. இதற்கு முன்னதாக விஜய் வருகையை முன்னிட்டு, பள்ளி குழந்தைகளை அச்சுறுத்தும் வகையில், புத்தக பைகளில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதில் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இந்த நிலையில், திருவள்ளூர் அருகே அரசு நடுநிலைப் பள்ளியில் பல்லி விழுந்த காலை உணவு சாப்பிட்ட 40 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆளும் தவெக அரசின் அலட்சியத்துக்கு பெற்றோர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கொட்டையூர் ஊராட்சியில், அரசுப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 40-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்த சூழலில் இன்று (செப்.24) காலை, பள்ளியில் மாணவர்கள் காலை உணவு சாப்பிட்டுள்ளனர். அப்போது திடீரென குழந்தைகளுக்கு வாந்தி ஏற்பட்டுள்ளது. பிறகு என்ன என்று ஆய்வு செய்ததில், குழந்தைகளுக்கு பரிமாறப்பட்ட சாம்பாரில் பல்லி இறந்து கிடந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து மாணவர்கள் ஒவ்வொருவரும் அடுத்தடுத்து வாந்தி, மயக்கம் என மாணவர்கள் சரிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.
தொடர்ந்து விரைந்து வந்த ஆம்புலன்சில் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அனைவரும் திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், குழந்தைகள் உயிருடன் விளையாடும் ரீல்ஸ் தவெக அரசுக்கு பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
‘துரோகியே வெளியில் போ‘... தலைதெறிக்க ஓடும் த.வெ.க. வேட்பாளர்கள் : முரசொலி தலையங்கம்!
-
போராட்டம் ஒரு புறம் - ரீல்சிற்காக ஆய்வு மறுபுறம்! : மின்வெட்டிற்கான தீர்வை தட்டிக்கழிக்கிறதா த.வெ.க?
-
கனிமொழி எம்.பி-யின் ஒற்றைப் பதிவு.. சமூக வலைதளங்களில் படு வைரல்!
-
“தவெக பெயரை குறிப்பிடாதது ஏன்?” - பண மோசடியில் சிக்கிய வர்ஷினி வெங்கட் விவகாரத்தில் திமுக கேள்வி!
-
“இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி வகிக்க ஞானேஷ் குமார் தகுதியற்றவர்!” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!