Tamilnadu

Part Time Job : விளம்பர பதாகை வைத்த நந்தனம் கல்லூரி மாணவருக்கு நேரந்த சோகம்!

திருவண்ணாமலை மாவட்டம் வளவழியனூர் பகுதியைச் சேர்ந்த ஆனந்த் என்பவரின் மகன் ஜெயச்சந்திரன் (18). இவர் சென்னை நந்தனம் அரசு கல்லூரியில் இயற்பியல் 2-ம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்த சூழலில் தனது குடும்ப சூழ்நிலையை புரிந்த இவர், தான் செலவை தானே பார்த்துக்கொள்ள வேண்டும் என்று, அவ்வப்போது Part Time வேலை செய்து வந்துள்ளார்.

ஒவ்வொரு விடுமுறை தினங்களன்றும் தனது நண்பர்களுடன் இது போன்ற Part Time வேளைக்கு சென்று வருவார். அந்த வகையில் 2 நாட்கள் விடுமுறை என்பதால் தனது நண்பர்களோடு வேலைக்காக சென்றுள்ளார். குறிப்பாக விளம்பர பதாகைகளை சாலை ஓரத்தில் உள்ள மரங்கள் சுவர்களில் மாட்டி வைக்கும் வேலைக்காக சென்றுள்ளனர்.

இந்த சூழலில் தனியார் நிறுவன விளம்பர பதாகைகளை சாலை ஓரத்தில் உள்ள மரங்கள் மற்றும் சுவர்களில் வைப்பதற்காக நேற்று இரவு தனது நண்பர் யுவராஜ் என்பவரோடு சென்றுள்ளார். இன்று அதிகாலை 3 மணி அளவில் காந்தி மண்டபம் சாலை மற்றும் சர்தார் பட்டேல் சாலை சந்திப்பு பகுதியில் உள்ள சாலை ஓரத்தில் இருந்த மின் கம்பத்தில் விளம்பர பதாகையை மாட்டும் பொழுது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி தூக்கி எறியப்பட்டார்.

இதனை கண்டு மிகுந்த அதிர்ச்சியடைந்த அவரது நண்பர் யுவராஜ், உடனடியாக அவரை ஆட்டோ மூலமாக இராயப்பேட்டை அரசு மருத்துவமனை அழைத்துச் சென்றபோது சம்பவ இடத்திலேயே ஜெயச்சந்திரன் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து கோட்டூர்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Also Read: “கே.என்.நேரு மீதான DVAC சோதனை.. பூச்சாண்டிகளுக்கெல்லாம் அஞ்சமாட்டோம்” : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!