Tamilnadu
சோறா.. இட்லியா.. கல்லா.. சமூகநீதி விடுதியில் மாணவர்களுக்கு நேரும் அவலம் - நடவடிக்கை எடுப்பாரா வன்னியரசு?
தவெக ஆட்சி அமைந்ததில் இருந்து தமிழ்நாட்டு மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அண்மையில் கூட தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கான நிதியையும் குறைவாக ஒதுக்கீடு செய்தது தவெக அரசு.
அதோடு பேரவையில் மக்களுக்கான பிரிச்சினையை குறித்து கேள்வி எழுப்பினால், அதற்கு உரிய பதிலை அளிக்காமல், Diversion உத்தியை கையாள்கிறது. மேலும் ரீல்ஸ் மூலம் மக்களுக்கு தேவையான விஷயங்களை செய்து கொடுப்பதாகவும் பொய்யான பிம்பத்தை உருவாக்கி வருகிறது தவெக-வினர்.
எல்லாவற்றுக்கும் மேலாக பாடம் சொல்லிக்கொடுக்கப்படும் பள்ளிகளில், மாணவர்களை வைத்து ரீல்ஸ் வெளியிடுவது என தொடர்ந்து அட்ராசிட்டிகளில் ஈடுபட்டு வருகின்றனர் தவெக-வினர். இதோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல், கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சூழலில் மாணவர்கள் நலனில் தவெக அரசு அக்கறைகாட்டுவதாக தவெக-வினர் உருவாக்கிய பொய்யான பிம்பம் தற்போது உடைக்கப்பட்டுள்ளது. சமூக நீதி விடுதியில் மாணவர்களின் உணவு தரம் குறித்த வீடியோ வைரலாகி கண்டனங்களை எழுப்பி வருகிறது.
கரூர் மாவட்டம் காந்தி கிராமத்தில் சமூக நீதி மாணவர் விடுதி செயல்பட்டு வருகிறது. இதில் SC சமூகத்தை சேர்ந்த மாணவர்கள் தங்கி பயின்று வருகின்றனர். இந்த சூழலில் இங்கு மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு வாயில் வைக்க முடியாத அளவுக்கு இருப்பதாக வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. மேலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் சாப்பாடானது, தரமும் மிகவும் குறைந்த அளவில் உள்ளது.
இதையடுத்து இதுகுறித்து தற்போது இணையத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், மாணவர்கள் தங்கள் குமுறல்களை தெரிவித்துள்ளனர். அதோடு இதுகுறித்து சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு உரிய எடுக்க வேண்டும் எனவும் மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
அந்த வீடியோவில், பாத்திரத்தில் இருந்த உணவை மாணவர்கள் எடுத்து காண்பித்து "இது கல்லு போல் இருக்கிறது." என்று கூறியுள்ளனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பேசுபொருளாகியுள்ளது.
இதுகுறித்து இந்திய மாணவர் சங்க நிர்வாகி சிவா கூறுகையில், "கரூரில் உள்ள 7 மாணவர் விடுதிகளிலும் உணவின் தரம் இதுபோன்றுதான் உள்ளது. மாணவர்கள் வெளியில் சொல்லக்கூடாது என்று அவர்களை மிரட்டுகின்றனர். எனவே இது குறித்து வெளிப்படையாக மாணவர்கள் புகார் அளிக்க மறுக்கின்றனர்" என்றார்.
மாணவர்கள் நலனில் அக்கறை காட்டுவது போல் ஒரு பிம்பத்தை தவெக அரசு ஏற்படுத்தியுள்ள நிலையில், மாணவர்கள் வெளிப்படையாக புகாரளிக்க பயந்து, இதுபோன்ற விஷயங்களை சகித்து கொள்வது தற்போது அம்பலமாகியுள்ளது.
Also Read
-
சிவகங்கையில் அமைச்சர் நிர்மல் குமாரை கண்டித்து ஒட்டப்பட்ட சுவரொட்டிகள்! : நாவடக்கம் தேவை என அறிவுறுத்தல்!
-
“இது நீதியா? நியாயமா? மனிதாபிமானம் கொண்டு பார்த்தால்தான் நீதி தெரியும்!” : பெ.சண்முகம் கண்டனம்!
-
“விவசாயிகளுக்கு நிதி இல்லை; ஆனால், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு கார்!” : தஞ்சையில் உதயநிதி கண்டனம்!
-
த.வெ.க ஆட்சியில் சட்டமன்றமே ‘ரீல்’சிற்காகத்தான் நடத்தப்படுகிறது! : கனிமொழி எம்.பி விமர்சனம்!
-
டெஸ்ட் போட்டியில் வரலாறு படைத்த வங்கதேசம்.. ஸ்டார்க்கின் அதிரடி.. Come Back கொடுத்த ஆஸ்திரேலியா!