Tamilnadu
அப்பாவி தமிழர்களை சுட்டுக்கொன்ற கர்நாடக வனத்துறை.. எல்லை மீறும் கர்நாடகாவுக்கு குவியும் கண்டனம்!
கர்நாடக மாநிலம் சாம்ராஜநகர் பகுதியில் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது மரியமங்கலம் என்ற கிராமம். இந்த சூழலில் நேற்று (ஆக.16) இந்த பகுதியைச் சேர்ந்த ஒரு சிலர் காட்டுக்குள் வேட்டையாடச் சென்றதாக சாக்யா பகுதி வன அலுவலர்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் வனத்துறையினர் காட்டுக்குள் சென்று பார்த்தபோது, அங்கே ஒரு சிலர் இருந்துள்ளனர்.
இதையடுத்து அவர்களுக்கும் வனத்துறையினருக்கும் ஏற்பட்ட பிரச்சினை துப்பாக்கி சூட்டில் முடிந்துள்ளது. கர்நாடக வனத்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் அந்தோணிசாமி (50), ஜான்ரோஸ் பீட்டர் (42), குமார் (33) ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். மேலும் மகிமைதாஸ் (48) என்பவர் படுகாயமடைந்துள்ளார்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பூதகரமாய் வெடித்துள்ள நிலையில், உயிரிழந்த 3 பேரும் தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்டவர்கள் என்பதால், ஹானூர் சுற்றுப்பகுதியை சேர்ந்த பல கிராமங்களில் உள்ள தமிழ் பேசும் மக்களும் ஹானூர் வனத்துறை அலுவலகம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து கர்நாடக வனத்துறையினர் தரப்பில் இருந்து, உயிரிழந்தவர்கள் மான் வேட்டையில் ஈடுபட்டதாகவும், அவர்களிடம் இருந்து இறைச்சி மற்றும் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், "வனத்துறை அதிகாரிகளின் தரப்பில் குளறுபடிகள் உள்ளன. துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு எந்தக் காரணமும் இருக்கவில்லை. இதற்கு உயர் அதிகாரிகள் அனுமதி அளிக்கவில்லை," என்று ஹானூர் எம்.எல்.ஏ மஞ்சுநாத் தெரிவித்துள்ளார். இதனிடையே உயிரிழந்த 3 பேரின் உறவினர்களும் தங்களுக்கு நியாயம் கிடைக்கும் வரை, உடலை வாங்க மாட்டோம் என்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஏற்கனவே கர்நாடகாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையே மேகதாது, காவிரி பிரச்சினை பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், கர்நாடகாவில் வாழும் தமிழர்களுக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவத்துக்கு தமிழ்நாட்டில் இருந்து பல்வேறு அரசியல் கட்சிகள் தங்கள் வலுத்த கண்டனங்களை பதிவு செய்து வரும் நிலையில், இது குறித்து இதுவரை தமிழ்நாடு அரசு தரப்பிலோ, தவெக தரப்பிலோ யாரும் வாய் திறக்கவில்லை.
குற்றம் செய்தவராயினும், அவரது உயிரை பறிக்க யாருக்கும் உரிமை இல்லை என்று கர்நாடகாவுக்கு, பல்வேறு தரப்பினரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
திமுக வழக்கறிஞர் அணி கூட்டம் : நிறைவேற்றப்பட்ட 6 தீர்மானங்கள் என்ன? - விவரம் உள்ளே!
-
மாத கணக்கில் அறுந்து கிடந்த மின் ஒயர்.. மின்வாரியத்தின் அலட்சியத்தால் பறிபோன உயிர்.. காஞ்சியில் சோகம்!
-
“கழகத்தின் முதுகெலும்பு சட்டத்துறை.. பாசிச தவெக.. அமைச்சர்களைக் கூட தெரியாத முதல்வர்” : உதயநிதி பேச்சு!
-
90% நிறைவடைந்த முதல்வர் விஜய் அறை மாற்ற வேலை : புதிய டெண்டர் விட்ட அரசு... சர்ச்சையில் பொதுப்பணித்துறை!
-
“திருவொற்றியூரில் மாணவர் கொலை.. கோமாளி சர்க்கார் மீது பயமில்லை” : உதயநிதி ஸ்டாலின் காட்டம்!