Tamilnadu
Welcome On Board... இந்தா வச்சுக்கோ... அரசுப் பதவிகளில் ஆதிக்கம் செலுத்தும் விஜய் படக்குழுவினர்!
விஜய் தலைமையிலான தவெக தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்ததில் இருந்தே சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு போயுள்ளது. குறிப்பாக பெண்கள் பாதுகாப்பு பெருமளவு கேள்விக்குள்ளாகியுள்ளது. ஆங்காங்கே சிறுமிகள் முதல் வயதான பாட்டிகள் வரை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு வரும் சம்பவம் ஒரு புறம் மக்களை உலுக்க, மற்றொரு பக்கம் கொலை, கொள்ளை உள்ளிட்ட சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இப்படியான சூழலில் சட்டம் ஒழுங்கை சரி செய்யாமல், மக்களுக்கான நலத்திட்டங்களில் கவனம் செலுத்தாமல், திமுக மீது விமர்சனம், பொய் குற்றச்சாட்டு, கைது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதும், குதிரை பேரம் மூலம் மற்ற கட்சியினரை தங்கள் கட்சிக்கு இழுப்பதிலும் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார் விஜய்.
அது மட்டுமின்றி அரசு சார்ந்த துறைகளுக்கு, தனது திரைப்படத்தை சார்ந்தவர்களுக்கு பதவி வழங்கி வருகிறார் விஜய். இதற்கு தொடர்ந்து கண்டனங்கள் எழுந்து வந்தாலும் அதனை எல்லாம் துளியும் மதிக்காமல் தனக்கு தோன்றியதை தான் செய்வேன் என்ற நோக்கத்திலேயே விஜய் செயல்பட்டு வருகிறார்.
=> இதுவரை விஜய் தனது திரைத்துறை சார்ந்த நண்பர்களுக்கு வழங்கிய அரசுப் பதவிகளின் விவரம் வருமாறு : -
1. வெங்கட நாராயாணா - தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி - (ஜனநாயகன் திரைப்பட தயாரிப்பாளர்)
2. ஜெகதீஷ் பழனிசாமி - முதலமைச்சரின் தனிச் செயலாளர் - (விஜய் PR மேனேஜர் மற்றும் லியோ திரைப்பட தயாரிப்பாளர்)
3. அர்ச்சனா கல்பாத்தி - கோயில்களுக்கான அறங்காவலர் நியமன குழுவில் பதவி - (பிகில், GOAT திரைப்படங்களின் தயாரிப்பாளர்)
4. மனோஜ் பரமஹம்சா - தமிழ்நாடு அரசின் திரைப்பட பயிற்சி நிறுவனத்தின் தலைவர் - (நண்பன், Beast, லியோ திரைப்படங்களின் ஒளிப்பதிவாளர்)
=> மேலும் விஜய் தனது நெருங்கிய நண்பர்களுக்கு வழங்கிய பதவிகள் விவரம் : -
1. புஸ்ஸி ஆனந்த் - விஜய் ரசிகர் மன்ற முன்னாள் தலைவர் - நீர்வளத்துறை அமைச்சர்
2. ரிக்கி சக்திவேல் பண்டிட் - விஜயின் தனிப்பட்ட ஜோதிடர் - அரசு ஆலோசகர் (சர்ச்சையான நிலையில், திரும்பபெறப்பட்டது)
3. விஷ்ணு ரெட்டி - விஜய் நண்பர் - முதலமைச்சரின் அரசியல் ஆலோசகர்
4. ஜான் ஆரோக்கியசாமி - விஜய் கட்சியின் தேர்தல் வியூக வகுப்பாளர் - முதலமைச்சரின் அரசியல் ஆலோசகர்
5. ஸ்ரீநாத் - விஜயின் நெருங்கிய நண்பர் - மீன்வளத்துறை அமைச்சர்
Also Read
-
“உண்மையை தெரிந்துகொள்ளுங்கள் அமைச்சரே” : த.வெ.க-வுக்கு பதிலடி கொடுத்த சக்கரபாணி!
-
“அறிவாலயத்தின் அறிவாயுதமான முரசொலியின் பயணம் நூறாண்டுகள் கடந்தும் தொடர்க!” : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு முதலில் விதை போட்டது கலைஞர் : பேரவையில் கோவி.செழியன் எம்.எல்.ஏ பேச்சு!
-
“Delimitation-ன் தொடக்கத்தில் கோலம் போட்டு விளையாடிக் கொண்டு இருந்தவர்தான் விஜய்!” : முரசொலி விமர்சனம்!
-
“நீட் தேர்வு எனும் உயிர்க் கொல்லியை ரத்து செய்ய வேண்டும்!” : தி.மு.க மாணவர் அணிச் செயலாளர் வீரமணி!