Tamilnadu
வேளாண் பட்ஜெட்டிலும் ஸ்டிக்கர் ஒட்டிய த.வெ.க அரசு : பல திட்டங்களுக்கு நிதியும் குறைப்பு!
முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க அரசு, நேற்று தனது முதல் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தது. திக்கித் திணறி 2:30 மணி நேரம் பெருமூச்சு விட்டு வாசித்து முடித்தார் நிதியமைச்சர் மரிய வில்சன். அவர் பெருமூச்சு விட்டு வாசித்தாலும், மக்களுக்குக் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளான மகளிர் உரிமைத் தொகை ரூ. 2500, 6 சிலிண்டர்கள் மற்றும் இலவசப் பேருந்து குறித்த அறிவிப்புகள் ஒரு வார்த்தைகூட இடம் பெறவில்லை.
வாக்களித்த மக்களுக்குச் சினிமாவில் ஒரு வசனம் வருவது போல "பிம்பிளிக்கா பிலாப்பி" என ஏமாற்றியுள்ளது த.வெ.க அரசு. அதோடு, கடந்த தி.மு.க ஆட்சியில் மக்களுக்காகச் செயல்படுத்தப்பட்ட பல முக்கிய திட்டங்களின் பெயர்களை மாற்றிப் புதிய திட்டம் போல் அறிவித்துள்ளது.
இந்நிலையில்தான் இன்று வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார். இதிலாவது விவசாயிகளுக்குப் பயன் கிடைக்கும் என்று பார்த்தால், காவிரியில் எப்படி நமக்குத் தண்ணீர் கிடைக்கவில்லையோ, அதுபோல் விவசாயிகளுக்கும் இவர்கள் அறிவித்துள்ள திட்டத்தால் எந்தப் பயனும் கிடைக்காத நிலையே ஏற்பட்டுள்ளது.
வேளாண் பட்ஜெட்டிலும், தி.மு.க-வின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டியுள்ளது. இந்த பட்ஜெட் முழுவதுமே கடந்த நிதியாண்டில் தி.மு.க தாக்கல் செய்த பட்ஜெட் போலவே இருக்கிறது.
உழவன் செயலி ➡️ AI உழவர் செயலி
மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் ➡️ மண்வள பாதுகாப்பு இயக்கம்
மாடித்தோட்டத் தொகுப்பு ➡️ 'வெற்றி இல்லத்தரசி வீட்டுத் தோட்டம்
தென்னை மேம்பாட்டுத் திட்டம் ➡️ தென்னை சிறப்புத் திட்டம்
இப்படி தி.மு.க-வின் திட்டங்களுக்கு வெட்கமே இல்லாமல் ஸ்டிக்கர் ஒட்டி, கம்பீரமாகக் கோட் சூட் போட்டுத் தலைமைச் செயலகத்தில் வலம் வந்துகொண்டு இருக்கிறார் முதலமைச்சர் விஜய்.
அதோடு திட்டங்களுக்குத்தான் பெயர் மாற்றுகிறார்கள் என்று பார்த்தால், நிதியையும் குறைத்துள்ளார்கள். உதாரணத்திற்கு, மக்காச்சோள உற்பத்தி மேம்பாட்டுத் திட்டத்திற்குத் தி.மு.க ஆட்சியில் ரூ. 40.25 கோடி நிதி ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது இத்திட்டத்திற்குத் த.வெ.க அரசோ ரூ. 36 கோடி நிதியை மட்டுமே ஒதுக்கீடு செய்து நிதியைக் குறைத்துள்ளது.
இப்படிப் பல திட்டங்களுக்கு நிதியைக் குறைத்து, நாங்கள் விவசாயிகளுக்கு விரோதமான அரசு எனத் தாங்களே தங்களை அறிவித்துக் கொள்கிறார்கள்.
Also Read
-
உதயநிதி ஏற்படுத்திய எழுச்சி : தனக்குத் தானே ‘சூனியம்' வைத்துக் கொண்ட முதலமைச்சர் விஜய்!
-
“தவெக ஆதரவு.. அமைச்சர் பதவி ஆசை.. ராஜினாமா செய்ய வைகோ நிர்பந்தித்தார்” : மதிமுக எம்.எல்.ஏ-க்கள் பேட்டி!
-
“மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 பற்றி ‘பேச்சு - மூச்சே’ இல்லை!” : தங்கம் தென்னரசு விமர்சனம்!
-
“மாற்றம் என சொன்னது பெயர் மாற்றம் தானா?.. இதற்கு எதற்கு முதலமைச்சர்?”: வெளுத்து வாங்கிய உதயநிதி ஸ்டாலின்!
-
“Blast இல்லை Waste .. முக்கிய வாக்குறுதிகள் பற்றி மூச்சே விடாத பட்ஜெட்” : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!