Tamilnadu
“நாளை விவசாயிகளுக்கு ஆதரவாக கேள்வி எழுப்புவேன்..” - கர்ஜித்த உதயநிதி.. போலீசை ஏவிய தவெக அரசு!
தவெக அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து தமிழ்நாட்டுக்கு எதிராக பல்வேறு விஷயங்களை செய்து வருகிறது. மக்களின் கருத்து சுதந்திரத்தை முடக்க நினைப்பதோடு, எதிர்க்கட்சியினரின் மீது வீண் பழி போட்டு கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. தவெக அரசுக்கு எதிராக பேசுபவர்களை தொடர்ந்து டார்கெட் செய்து அவர்களை போலீசாரை வைத்து மிரட்டி வருகிறது.
ஒவ்வொரு முறையும் அவதூறு பேசுவதாக கூறி கைது செய்யப்படுவர்களை நீதிமன்றமே விடுவித்து வருவதோடு, தவெக அரசுக்கு குட்டும் வைத்து வருகிறது. எனினும் விஜய் அரசு திருந்தியபாடில்லை. மேலும் ஒரு பிரச்சினையை நேருக்கு நேர் சந்திக்க திராணி இல்லாத விஜய் அரசு, அதனை ஒவ்வொரு முறையும் திசைத்திருப்பும் நோக்கத்திலேயே செயல்பட்டு வருகிறது.
அந்த வகையில் அண்மையில் தமிழ்நாட்டில் பூதாகராமாக வெடித்துள்ள காவிரி பிரச்சினை குறித்து தவெக அரசு இதுவரை வாயை திறக்கவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக அந்த துறை அமைச்சரான புஸ்ஸி ஆனந்த் இதுகுறித்து ஒரு முறை கூட செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளிக்காமல் சிரித்து மட்டுமே மழுப்பி அந்த இடத்தில் இருந்து தப்பித்து வருகிறார்.
காவிரி மேலாண்மை தீர்ப்பையும் மீறி, தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என்று பிடிவாதம் காட்டும், கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு எதிராக ஒரு கண்டன குரலை கூட தவெக அரசு எழுப்பாமல், வழக்கம்போல் திமுக மீது தேவையில்லாத குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறது.
காவிரி நீர் இல்லாத காரணத்தினால் விவசாயிகள் பெரும் சங்கடத்தில் இருக்கின்றனர். இந்த சூழலில் நேற்று (ஆக.03) தஞ்சையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் பேசிய உதயநிதி ஸ்டாலின், காவிரி விவகாரத்தில் வாயை மூடி வேடிக்கை பார்க்கும் தவெக அரசுக்கும், விஜய்க்கும் கடுமையான கண்டனங்களை தெரிவித்தார். தொடர்ந்து விவசாயிகள் படும் வேதனை குறித்து சட்டப்பேரவையில் கேள்வி எழுப்புவதாகவும் உறுதியளித்தார்.
இந்த சூழலில் நாளை சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பக்கூடாது என்ற நோக்கத்தில், சென்னை நீலாங்கரையில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வீட்டில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் அவரது பேச்சை அவதூறாக பரப்பி அவருக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரத்தை மேற்கொள்ளும் தவெக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியை கைது செய்ய திட்டம் தீட்டி அதற்கான செயலில் ஈடுபட்டு வருகிறது. தவெக அரசின் இந்த அராஜகத்திற்கு எதிராக திமுக தொண்டர்கள் திரண்டுள்ளனர். எதிர்க்கட்சிகளை தொடர்ந்து குறிவைத்து முடக்க பார்க்கும் விஜய்க்கு தற்போது கண்டனங்கள் குவிந்து வருகிறது.
Also Read
-
காவிரி விவகாரம் : “கர்நாடகாவை பார்த்தாவது கற்றுக் கொள்ள வேண்டாமா?..” : விஜயை Left Right வாங்கிய முரசொலி !
-
“கடந்த 5 ஆண்டுகளாக தண்ணீர் வந்தது... ஆனால் இந்த ஆண்டு?” - விஜயை வறுத்தெடுத்த உதயநிதி ஸ்டாலின்!
-
காவிரி விவகாரம்.. முதலமைச்சர் உறக்கம் கலைத்து திருவாய் மலர்வது எப்போது?- முன்னாள் அமைச்சர் ரகுபதி கேள்வி!
-
“விவசாயிகளுக்காக தஞ்சையில் திரண்ட கழகம்.. கோரிக்கை நிறைவேறாவிட்டால்” : மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!
-
‘இதுவே தி.மு.க. ஆட்சியில் நடந்திருந்தால்...?’ : தவெக-வின் அட்டூழியத்தை அடுக்கி கேள்வி எழுப்பிய முரசொலி!