Tamilnadu
சாதி பெயரை கூறி இழிவு செய்யப்பட்ட Delivery Boy : புகார் கொடுக்க சென்ற இளைஞரை தாக்கிய போலீஸ்!
சென்னை அசோக் நகர் பகுதி சேர்ந்தவர் 23 வயது இளைஞர், உணவு டெலிவரி செய்யும் வேலை செய்து வருகிறார். இந்த சூழலில் நேற்று (ஜூலை 12) இரவு சுமார் 10.30 மணியளவில் சென்னை ஆதம்பாக்கம் பார்த்தசாரதி கோயில் தெருவில் உணவு டெலிவரி செய்வதற்காக சென்றுள்ளார்.
அப்போது அங்கு உணவு டெலிவரி செய்யும்போது உணவு ஆர்டர் செய்த நபர் மேல் சட்டை அணியாமல் டெலிவரி செய்ய வந்த இளைஞரின் பெயரை திமிராக கேட்டுள்ளார். உடனே இந்த இளைஞரும் தனது பெயரை கூறவே, அவரை குறித்தும் அவரது பெயரை குறித்தும் விமர்சனம் செய்துள்ளார். மேலும் அந்த இளைஞரின் குலம் என்னவென்றும், அவரது தகுதி என்னவென்றும் அவரது தாயாரிடம் கேட்டு தெரிந்துகொள்ளுமாறும், என்றும் கொச்சையாக பேசியுள்ளார்.
இதனால் பெரும் மன உளைச்சலான அந்த இளைஞர், CPI மாணவர் அமைப்பில் செயல்படும் காரணத்தினால், இதுகுறித்து தென்சென்னை மாவட்ட செயலாளர் மணியிடம் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக ஆதம்பாக்கம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் கொண்டு புகார் தெரிவிக்க சென்ற மாணவர் அமைப்பினரை காவல் நிலையத்தில் பணியில் இருந்த காவல் ஆய்வாளர் வீராசாமி அவமதித்துள்ளார்.
மேலும் 'இது ஒரு புகாரே அல்ல..' என்று தெரிவித்த காவல் ஆய்வாளர், புகாரை பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுக்க முடியாது என்றும் திமிராக பேசியுள்ளார். அதோடு மாணவர் சங்கத்தினையும் இழிவுபடுத்தும் வகையில் பேசிய காவல் ஆய்வாளர், தென்சென்னை மாவட்ட செயலாளர் மணியை தாக்கியுள்ளார். காவல்துறையினர் தாக்கியதால் காயமடைந்த மணி, சிகிச்சைக்காக கிண்டி முத்தமிழறிஞர் கலைஞர் பண்ணோக்கு சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து அகில இந்திய மாணவர் பெருமன்றம் (AISF) 30-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் காவல் நிலையத்திற்கு வருகை புரிந்து காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது சென்னையில் ஆதம்பாக்கம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யக் கூடிய நபர்களையும் சட்டவிரோதமாக மதுபானங்களை விற்பனை செய்யக் கூடிய நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்காத காவல்துறை பாதிக்கப்பட்டு புகார் தெரிவிக்க வந்த பொதுமக்களை தாக்குவது கேவலமான ஒரு செயல் என கூறி முழக்கங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் இந்த சம்பவம் குறித்து அறிந்து காவல் நிலையத்திற்கு வருகை புரிந்த உதவி ஆணையர் அகில அகில இந்திய மாணவர் பெருமன்றத்தை சேர்ந்தவர்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட ஆய்வாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் மாணவர் அமைப்பினர் கலந்து சென்றனர்.
காவல் நிலையத்திற்கு பாதிக்கப்பட்ட மாணவன் புகார் தெரிவிக்க வந்த நிலையில், புகார் எடுக்க மறுத்து புகார் அளிக்க வந்த மாணவர்களை காவல் காவல்துறையை சார்ந்தவர்களே தாக்கிய சம்பவத்தால் அப்பகுதி முழுவதும் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியில் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்கக்கூடிய காவல்துறையினரே புகார் அளிக்க வந்த பாதிக்கப்பட்டவர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பொதுமக்கள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
மதுரை அருகே அதிகாலையில் நடந்த பயங்கரம் : நேருக்கு நேர் மோதிக் கொண்ட பேருந்துகள் - 6 பேர் பலி!
-
கரூர் கொடுந்துயரம் : சாட்சிகளை அச்சுறுத்தும் விஜய் - உச்சநீதிமன்ற கண்காணிப்புக் குழுவிடம் தி.மு.க. மனு!
-
41 பேர் பச்சைப் படுகொலைக்கு காரணமாக இருந்து விட்டு... : வஞ்சக விஜய்யின் பேச்சுக்கு முரசொலி கடும் தாக்கு!
-
“ஓடி ஒளியும் அவசியம் தி.மு.க.வினருக்கு என்றுமே கிடையாது!” : சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடா எ.வ.வேலு!
-
வியட்நாமில் கவிழ்ந்த சுற்றுலாப் படகு.. 10 தமிழர்கள் பலி.. மகிழ்ச்சியான இடத்தில் நிகழ்ந்த அசம்பாவிதம்!