Tamilnadu
”வெளியான 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்.. எகிறிய தேர்ச்சி விகிதம்.. அசத்திய மாணவிகள்” - முழு விவரம்!
வ்2025-2026ம் கல்வியாண்டிற்கான 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 11ம் தேதி முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்விற்கான முடிவுகளை இன்று (மே 20) பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது.
மாநிலம் முழுவதும் மொத்தமாக 8,70,643 பேர் தேர்வுகளை எழுதினர். இதில், மாணவர்கள் 4,35,396 பேரும், மாணவியர்கள் 4,35,247 பேரும் தேர்வுகளை எழுதினர். மொத்த மாணவர்களில் 11,174 தேர்வுகளை எழுதவில்லை.
மொத்த தேர்வர்களில் 8,21,105 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். இதன் தேர்ச்சி சதவீதம் 94.31 ஆக பதிவாகியுள்ளது. மேலும், 96.47 சதவீதத்துடன் 4,19,891 மாணவியர்களும், 92.15 சதவீத தேர்ச்சியுடன் 4,01,214 மாணவர்களும் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களை விட 4.32 சதவீதம் மாணவிகள் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு 0.51 சதவீதம் தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது.
மாற்றுத்திறனாளி மாணவர்கள் 13,292 பேர் தேர்வெழுதிய நிலையில், 11,416 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 85.89 ஆக பதிவாகியுள்ளது.
அதேபோல், 397 சிறைவாசிகள் தேர்வெழுதிய நிலையில், அதில் 354 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 95.68 சதவீதமாக பதிவிவாகியுள்ளது.
மேலும், 24,353 தனித்தேர்வர்கள் தேர்வெழுதிய நிலையில் இதில் 8,744 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அதிகபட்சமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் 97.57 சதவீதம் தேர்ச்சி விகிதம் பதிவாகி முதலிடம் பிடித்துள்ளது. 97.54 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் சிவகங்கை 2ம் இடத்திலும், 97.41 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் தஞ்சாவூர் மாவட்டம் 3வது இடத்திலும், 97.31 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் திருச்சி மாவட்டம் 4ம் இடத்திலும், 97.31 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கன்னியாகுமரி மாவட்டம் 5வது இடத்திலும் உள்ளது.
அரசுப்பள்ளிகளைப் பொறுத்தளவு, 97.42 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் சிவகங்கை மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் புதுக்கோட்டை மாவட்டம் 2ம் இடமும், 96.89 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் தஞ்சாவூர் மாவட்டம் 3ம் இடமும், 96.78 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் இராமநாதபுரம் மாவட்டம் 4ம் இடமும், 96.48 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் திருச்சி மாவட்டம் 5ம் இடமும் பிடித்துள்ளது. மொத்த மாவட்டங்களில் 86.58 சதவீத்துடன் மிகவும் குறைந்த தேர்ச்சி அளவில் ராணிப்பேட்டை மாவட்டம் கடைசி இடத்தில் உள்ளது.
அரசுப்பள்ளிகளைப் பொறுத்தளவில், 1931 அரசுப்பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சியைப் பெற்றுள்ளன. மாநிலம் முழுவதும் 511 அரசு உதவிபெறும் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சியைப் பெற்றுள்ளன.
பாடவாரியாக தமிழ்ப் பாடத்தில் 34 பேர் 100/100 மதிபெண்களைப் பெற்றுள்ளனர். ஆங்கிலத்தில் 92 பேரும், கணிதத்தில் 3,194 பேரும், அறிவியலில் 10,476 பேரும் மற்றும் சமூக அறிவியலில் 3,336 பேரும் 100/100 மதிப்பெண்களைப் பெற்று அசத்தியுள்ளனர்.
தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மே 22ம் தேதி முதல் பெறலாம் எனவும், விடைத்தாள் நகலைப் பெற மே 22ம் தேதி முதல் 25ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கு ஜூன் 17 முதல் ஜூன் 19ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வுகளில் தோல்வியடைந்த மாணவர்களுக்கான துணைத் தேர்வுகள் ஜூலை 8ம் தேதி முதல் ஜூலை 15ம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மே 26ம் தேதி முதல் ஜூன் 9ம் தேதி வரை துணைத் தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்தான முழு வழிகாட்டுதலும் விவரங்களும் சில நாட்களில் வெளியாகும் என கூறப்படுகிறது
கடந்த 5 ஆண்டுகாலம் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில், பள்ளிக்கல்வித்துறை உச்சகட்ட வளர்ச்சியைப் பெற்றுள்ளது. குறிப்பாக கடந்த கால தேர்ச்சி சதவீதமும் தொடர்ந்து உயர்ந்து வருவதையே புள்ளி விவரங்களும் சுட்டிக் காட்டுகிறது.
Also Read
-
“இனி நீதிமன்றங்கள் முன்புதான் மக்கள் போராடுவார்கள்” : சென்னை உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டுவது என்ன?
-
அதிக விலைக்கு மின்சாரத்தை வெளிச்சந்தையில் வாங்குவது ஏன்? : த.வெ.க அரசுக்கு மு.வீரபாண்டியன் கேள்வி!
-
“தூக்கத்திலிருந்து வெளியே வாங்க முதலமைச்சர் விஜய்.. மக்கள் கஷ்டப்படுகிறார்கள்” : இ.பரந்தாமன் காட்டம்!
-
10, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு.. தேர்வு தேதிகள், முடிவுகள் வரை! : முழு விவரம் உள்ளே!
-
“CJP-க்கு தி.மு.க துணை நிற்கும்!” : பா.ஜ.க.வைக் கண்டித்து, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதி!