Tamilnadu
மறந்துட்டியா..?! - வெற்றி சான்றிதழை மறந்த தவெக பெண் அமைச்சர்.. பதவியேற்காமல் அனுப்பி வைக்கப்பட்ட சோகம்!
நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று, தற்போது திமுக கூட்டணி ஆதரவோடு பெரும்பான்மையை நிரூபித்து தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முதலமைச்சராக பதவியேற்றுள்ளார். மேலும் திமுக கூட்டணி 68 தொகுதிகளை கைப்பற்றி எதிர்க்கட்சியாக உருவாகியுள்ளது.
இந்த சூழலில் இன்று (மே 11) 17-வது தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்றது. இந்த கூட்டத்தொடரில் அனைத்து உறுப்பினர்களும் சட்டமன்ற உறுப்பினர்ளாக தற்காலிக சபாநாயகர் முன்பு பதவியேற்ற நிலையில், தவெக பெண் அமைச்சர் கீர்த்தனா சான்றிதழை மறந்துவிட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
அதாவது சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்கும் உறுப்பினர்கள், தாங்கள் வெற்றி பெற்ற சான்றிதழை, சட்டப்பேரவை செயலாளரிடம் காண்பித்து, அதன்பிறகு உறுதி மொழி ஏற்று பதவியேற்பர். ஆனால் தன்னை பொலிட்டிகேள் STATICS படித்த அதிமேதாவி என்று பீத்திக்கொள்ளும் தவெக பெண் அமைச்சர் கீர்த்தனா, தான் வெற்றி பெற்ற சான்றிதழை கூட பேரவைக்கு எடுத்து வரவில்லை.
இதனால் அவர் பதவி ஏற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இவரை தொடர்ந்து ஒரு சில தவெக எம்.எல்.ஏ-க்கள் கூட தாங்கள் வெற்றி பெற்ற சான்றிதழை எடுத்து வராமல் இருந்த காரணத்தினால், அவர்களால் பதவியேற்க முடியவில்லை. இந்த நிகழ்வால் தற்போது சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
Also Read
-
“விவசாயிகளுக்கு நிதி இல்லை; ஆனால், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு கார்!” : தஞ்சையில் உதயநிதி கண்டனம்!
-
த.வெ.க ஆட்சியில் சட்டமன்றமே ‘ரீல்’சிற்காகத்தான் நடத்தப்படுகிறது! : கனிமொழி எம்.பி விமர்சனம்!
-
டெஸ்ட் போட்டியில் வரலாறு படைத்த வங்கதேசம்.. ஸ்டார்க்கின் அதிரடி.. Come Back கொடுத்த ஆஸ்திரேலியா!
-
தமிழ்நாட்டிற்கான ரூ.2,087 கோடி நிதியை நிலுவையில் வைத்திருக்கும் பாஜக அரசு! : RTI மூலம் வெளியான உண்மை!
-
அருப்புக்கோட்டையில் அரசு அலுவலகங்களை ஆட்டிப்படைக்கும் த.வெ.க.வினர்! : கடும் அதிருப்தியில் மக்கள்!