Tamilnadu
பீரோவைத் திறந்தபோது... துணிகளுக்கு இடையே 3 அடி நாகப்பாம்பு!
கடலூர் மாநகரின் மையப்பகுதியான வெளிச்செம்மண்டலத்தைச் சேர்ந்தவர் சடையப்பன். இவர் இன்று காலை வேலைக்குச் செல்வதற்காகத் தனது வீட்டில் உள்ள அலமாரியைத் திறந்துள்ளார். அப்போது, துணிகளுக்கு இடையே நாகப்பாம்பு ஒன்று இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், குடும்பத்தினருடன் வீட்டை விட்டு வெளியேறினார்.
இது குறித்து கடலூர் மாநகரப் பகுதியில் பாம்பு பிடிக்கும் தன்னார்வலரான செல்லா என்பவருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செல்லா, அலமாரியைச் சோதனை செய்தபோது, அங்கு சுமார் 3 அடி நீளமுள்ள நாகப்பாம்பு இருப்பதை உறுதி செய்தார். நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு, அந்தப் பாம்பை லாவகமாக உயிருடன் பிடித்தார்.
பிடிக்கப்பட்ட நாகப்பாம்பு, கடலூர் வெள்ளி கடற்கரை அருகே உள்ள காப்புக்காட்டில் பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டது.
சம்பவம் குறித்துப் பேசிய செல்லா, "கோடை வெப்பம் அதிகரித்து வருவதால், பாம்புகள் குளிர்ச்சியான இடங்களைத் தேடி குடியிருப்புப் பகுதிகளுக்கு வருவது வழக்கம். குறிப்பாக, வீடுகளில் தேவையற்றப் பொருட்கள் மற்றும் குப்பைகளைச் சேர்த்து வைப்பதாலேயே பாம்புகள் அங்கு வந்து தஞ்சமடைகின்றன.
எனவே, பொதுமக்கள் தங்கள் வீடுகளையும் சுற்றுப்புறத்தையும் சுகாதாரமாக வைத்துக்கொள்வது பாதுகாப்பானது," எனத் தெரிவித்தார்.
Also Read
-
'ஜனநாயகன்' தயாரிப்பாளருக்கு பதவி... மேகதாது விவகாரத்தில் குரல் கொடுப்பாரா? - திருச்சி சிவா கேள்வி!
-
வைரலாகும் வீடியோ... அமைச்சர் சரத்குமார் மீது போதைப் பொருள் பயன்படுத்தியதாக சந்தேகம்?
-
FIFA உலகக் கோப்பை: தோற்றாலும் போராடுவோம்; அமெரிக்காவை வீழ்த்தி பெருமையுடன் விடைபெற்ற துருக்கி!
-
“மாரத்தான் ஓடுபவர்கள் புலம்பித் தவிக்கின்றனர்... இது கேவலமான செயல்!” : திமுக ஐ.டி விங் கடும் விமர்சனம்!
-
மொகரம் பண்டிகை : 350 ஆண்டுகளாக தொடரும் இஸ்லாமியர்கள் மற்றும் இந்து மக்கள் திருவிழா!