Tamilnadu
பா.ஜ.க என்ற வார்த்தையை சொல்ல பயம் எதற்கு ? பாசிச பாயசம் இனிப்பதாலா ? : விஜய்க்கு தி.மு.க IT WING கேள்வி!
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைப் பெற்றிருந்தாலும், ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை கிடைக்கவில்லை. இருந்தும் கடந்த 6 நாட்களாக ஆளுநர் மாளிகைக்கு சென்று, தனக்கு பதவிப்பிரமானம் செய்து வைக்க வேண்டும் என விஜய் ஆளுநரிடம் கோரிக்கை வைத்து வருகிறார்.
ஆனோல் ஆளுநரோ, 118 உறுப்பினர்களின் ஆதரவு இருக்கிறதா? அப்படி இல்லை என்றால் ஆதரவு கடிதத்துடன் வாங்கள் என்று விஜயிடம் கூறி வழி அனுப்பியுள்ளார். இருந்தும் விஜய் தினமும் ஆளுநரின் கதவை தட்டிக் கொண்டே இருக்கிறோர். அவரும் இன்று போய் நாளை வா கதையா அனுப்பிவைத்துக் கொண்டு இருக்கிறார்.
இப்படி விஜயை, அரசியல் அமைப்பு சட்டப்படி பதவியேற்கவைத்து சட்டசபையில் அவரது ஆதரவை நிரூபிக்க வைக்க வழி வகை செய்வது ஆளுநரின் கடமை. ஆனால் ஆளுநரோ 118 உறுப்பினர்களின் ஆதரவு கடிதம் கட்டாயம் வேண்டும் என விஜய்க்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்.
இந்த நிலையில் கூட ஆளுநரை எதிர்த்து ஒருவார்த்தை கூட விஜய் பேசாமல் மவுனம் காத்து வருகிறார். தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கூட, புதிய ஆட்சி அமைப்பதற்குரிய நடவடிக்கைகளை ஆளுநர் அவர்கள் உடனடியாக எடுத்திட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். தேர்தலில் தோற்றால் கூட, தமிழ்நாட்டின் நலனுக்காக குரல் கொடுத்து வருகிறது தி.மு.க
ஆனால் முதலமைச்சராகத் துடிக்கும் விஜய், கடந்த ஆறு நாட்களுக்கும் மேலாக மௌனம் காத்து வருகிறார். இந்த நிலையில், "பாசிசப் பாயசம் இனிப்பதாலா?" என தி.மு.க ஐடி விங் (IT Wing) கேள்வி எழுப்பியுள்ளது.
இது குறித்து தி.மு.க ஐடி விங் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்:“புதிய அரசு அமைப்பதற்கான நடைமுறைகளைத் தொடங்க வேண்டும் என எங்கள் கழகத் தலைவர் அவர்கள் நேற்று முன்தினமே ஆளுநரை வலியுறுத்திவிட்டார். ‘நீங்கள் என்ன முடிவு எடுத்தாலும் நான் ஆதரிக்கிறேன்’ என்று தனது கூட்டணிக் கட்சிகளையும் அழைத்துச் சொல்லிவிட்டார்.
இன்று ஆட்சி அமைக்க உரிமை கோரும் ‘குதிரை பேரம்’ த.வெ.க, இதுவரை எதற்காக ஆளுநர் குறித்தோ அல்லது பா.ஜ.க குறித்தோ ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை? பாசிசப் பாயசம் அவ்வளவு இனிப்பதாலா? எங்கள் தலைவர் தனது நிலைப்பாட்டைத் தெளிவாகச் சொன்ன பிறகும், த.வெ.க இன்னும் குதிரை பேரம் நடத்துவது ஏன்? ‘பா.ஜ.க’ என்ற வார்த்தையைச் சொல்ல விஜய் பயப்படுவது ஏன்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளது.
Also Read
-
“ஆளும்கட்சியின் மிரட்டலுக்கெல்லாம் அஞ்சிடும் இயக்கம் அல்ல திமுக” : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அதிரடி!
-
கொலை நகரான தலைநகரம் : சென்னை தியாகராயநகரில் அடுத்தடுத்து இரண்டு கொலைகள்!
-
கோவையில் அத்துமீறல்: காவல் நிலையத்தையும் விட்டுவைக்காத த.வெ.க.வினரின் விளம்பர மோகம்!
-
இதைக்கூட சரி செய்ய துப்பு இல்லாமல் எதற்கு முதலமைச்சர் நாற்காலி : முரசொலி கடும் தாக்கு!
-
“ரீல்ஸ் முதலமைச்சரே... அடக்குமுறைக்கு கழக இளைஞர்கள் அஞ்சமாட்டார்கள்!” : தி.மு.க இளைஞர் அணி கண்டனம்!