Tamilnadu
கூலித் தொழிலாளிக்கு மறுவாழ்வு அளித்த கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை : நடந்தது என்ன?
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில், அரசு மருத்துவமனைகள் நவீன தரத்துடன் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. தனியார் மருத்துவமனைகளுக்கு நிகராக, சவாலான சிகிச்சைகள் கூட இங்கு எளிய மக்களுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன.
இதன் ஒரு பகுதியாக, 'Malignant Bone Tumor' எனும் வீரியம் மிக்க எலும்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பிரபாகரன் என்ற கூலித் தொழிலாளிக்கு மார்புப் பகுதியில் இருந்த சுமார் 5 கிலோ எடை கொண்ட புற்றுநோய் கட்டி வெற்றிகரமாக அகற்றப்பட்டது.
பிறகு, விலா எலும்புகள் இல்லாத இடத்தில் உடலுக்குத் தீங்கு விளைவிக்காத, வலிமையான டைட்டானியம் உலோகத்தினால் ஆன பிரத்யேகச் செயற்கை விலா எலும்புகளைப் பொருத்தி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
இந்த சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளில் பல லட்சம் ரூபாய் செலவாகக்கூடிய இந்த உயர்தரச் சிகிச்சை, தமிழ்நாடு அரசின் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டது.
உயிர் பிழைக்க 50% மட்டுமே வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்ட நிலையில், அரசு மருத்துவர்களின் அர்ப்பணிப்பான முயற்சியால் பிரபாகரன் தற்போது நலமுடன் உள்ளார். இச்சம்பவம் அரசு மருத்துவமனைகளின் மீதான நம்பிக்கையை மக்களிடையே மேலும் அதிகரித்துள்ளது.
Also Read
-
“மாற்றம் எனச் சொல்லி.. அண்டப் புளுகை, ஆதவ் அர்ஜுனா புளுகாக மாற்றிவிட்டார்களோ?” : இ.பரந்தாமன் கண்டனம்!
-
ஒரே நாளில்... கோவையை தொடர்ந்து மதுரை.. கொலை நகரமாகும் தூங்கா நகரம்... வேடிக்கை பார்க்கும் தவெக அரசு!
-
விபரீதமான விளையாட்டு... வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் 8 பள்ளி மாணவர்கள் கைது.. கள்ளக்குறிச்சியில் பரபர!
-
“ஒன்னு மின்வெட்டு, இரண்டு அரிவாள் வெட்டு.. இதான் தவெக ஆட்சி” : முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“வேங்கைவயல் விவகாரத்தில் நீலிக்கண்ணீர்... மன்னிப்புக் கேட்க தயாரா?” : வன்னி அரசுக்கு கோவி.செழியன் கேள்வி!