Tamilnadu
தமிழ்நாடு தேர்தல் வரலாற்றில் புதிய சாதனை.. 84% தாண்டிய வாக்குப்பதிவு!
தமிழ்நாட்டில் 17-வது சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. மாநிலம் முழுவதும் 5.63 கோடி வாக்களர்கள், 75,064 வாக்குச் சாவடிகளில் வாக்களிக்க ஏற்பாடு . இன்று மாலை 6 மணி வரை பொதுமக்கள் தங்களது வாக்குகளை செலுத்தலாம்.
தமிழ்நாடு முழுவதும் இன்று (ஏப்.23) 17-வது சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாதக, தவெக ஆகிய 4 கட்சிகள் நேரடியாக களம் காணும் நிலையில், இந்த தேர்தல் இந்திய அளவில் பெருமளவு கவனத்தை ஈர்த்துள்ளது.
மாநிலம் முழுவதும் 5.63 கோடி வாக்களர்கள், 75,064 வாக்குச் சாவடிகளில் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி இன்று காலை 7 மணிக்கு தமிழ்நாடு முழுவதும் வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், பொதுமக்கள், பெண்கள் என பலரும் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.
இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு, மாலை 6 மணியோடு நிறைவடைந்தது. அதன் படி மாலை 5 மணி நிலவரப்படி தமிழ்நாடு முழுவதும் 82.24% வாக்குகள் பதிவாகிய நிலையில், மொத்தமாக 85% வாக்குகள் பதிவாகி புதிய வரலாறை படைத்துள்ளது தமிழ்நாடு தேர்தல். இதில் அதிகமாக கரூர் மாவட்டம் 91.86% வாக்குகள் பெற்றுள்ளது. மேலும் மாவட்டம் குறைவான வாக்குகளை பெற்றுள்ளது.
Also Read
-
“முதல்வர் விஜய்க்கு ஏன் ஈகோ.. அமைச்சர் நிர்மல்குமார் திமுக-வைப் பற்றி பேசினால்”: எச்சரித்த பரந்தாமன்!
-
தமிழ்நாட்டு விவசாயிகள் நாக்பூரில் கைது.. நடுவழியில் ரயிலில் இருந்து இறக்கம் : உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
“நிஜமான கேள்விகளைக் கண்டால் இப்படிப் பயந்து ஓடத்தான் முடியும்” : அமைச்சர் ஆனந்துக்கு DMK IT WING கண்டனம்!
-
“மின்கட்டண குளறுபடிகளை சரிசெய்ய வக்கற்ற த.வெ.க அமைச்சர்” : அனிதா ராதாகிருஷ்ணன் கடும் விமர்சனம்!
-
“தமிழ்நாட்டின் உயிர்ப் பிரச்சினை காவிரி.. முன்பே கணித்துதான் எச்சரித்தோம்” : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!