Tamilnadu
🔴|2026 சட்டமன்றத் தேர்தல்: உடனுக்குடன் வாக்குப்பதிவு நிலவரம்!
தமிழ்நாட்டில் 17வது சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. மாநிலம் முழுவதும் 5.73 கோடி வாக்களர்கள், 75,064 வாக்குச் சாவடிகளில் வாக்களிக்க ஏற்பாடு. இன்று மாலை 6 மணி வரை பொதுமக்கள் தங்களது வாக்குகளை செலுத்தலாம்.
சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. மாவட்டம் முழுவதும் 28.93 லட்சம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
தமிழ்நாட்டில் இன்று காலை 9 மணி நிலவரப்படி 17.69 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக திருப்பூர் மாவட்டத்தில் 20.38 சதவீதம் வாக்குகள் பதிவு.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பிற்பகல் 1 மணி நிலவரப்படி 56.81 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளது.
கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு வாக்குப்பதிவு சதவீதம் மிகவும் வேகமாக உயர்ந்து வருகிறது.
Updated at: April 23, 2026 at 1:56 PM
Also Read
-
ஆய்வு, ஆராய்ச்சி என்ற பெயரால் படுகுழிக்கு பல்லாக்கு தூக்குவதா? : முரசொலி தலையங்கம் சாடல்!
-
“பேப்பர் படிச்சிருந்தா தெரிஞ்சிருக்கும்... தரம் தாழ்ந்து பேசுவதா?”: சிஎம் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் பதிலடி!
-
“ஜெம் வீரமணி வழக்கை முடிவுக்கு கொண்டுவர வாதிட்டது த.வெ.க அரசுதான்!” : தி.மு.க எம்.பி பி.வில்சன் தகவல்!
-
பள்ளி வளாகத்திலேயே பெண் குழந்தைக்கு பாதுகாப்பற்ற சூழல் உருவாகியிருக்கிறது : தமிழச்சி தங்கபாண்டியன் MP!
-
“இது யாருக்கான ஆட்சி? கேடுகெட்ட ஆட்சியை தவெக நடத்திக் கொண்டிருக்கிறது” : கனிமொழி எம்.பி கடும் கண்டனம்!