Tamilnadu
தமிழ்நாட்டிற்கு வந்து மிரட்டல் விடுக்கும் பா.ஜ.க முதலமைச்சர் : தமிழச்சி தங்கபாண்டியன் MP ஆவேசம்!
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழச்சி தங்கபாண்டியன், கலாநிதி வீராசாமி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது அவர்கள் கூறியது வருமாறு:-
மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொள்கை வழிகாட்டுதல்களை வெளியிட்டார். அதன் முக்கியக் கட்டங்கள்:
பிப்ரவரி 20, 2023: 31 கி.மீ நீளப் பாதைக்கான சாத்தியக்கூறு அறிக்கை சமர்ப்பிப்பு. பிப்ரவரி 19, 2024: ₹11,368 கோடி மதிப்பிலான விரிவான திட்ட அறிக்கை (DPR) மத்திய அரசிடம் சமர்ப்பிப்பு. செப்டம்பர் 2024: NHAI மற்றும் CMRL இடையே நிலவிய தொழில்நுட்பச் சிக்கல்கள் தீர்க்கப்பட்டு பணிகள் துரிதப்படுத்தப்பட்டன.
நவம்பர் 18, 2024 அன்று ஒன்றிய அரசு, மதுரை மற்றும் கோவை மெட்ரோ திட்டங்களுக்கான விரிவான திட்ட அறிக்கையைத் திருப்பி அனுப்பியுள்ளது. இதற்கு 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, குறிப்பிட்ட நகரங்களின் மக்கள் தொகை 20 லட்சத்தை எட்டவில்லை என்ற காரணத்தை ஒன்றிய அரசு கூறியுள்ளது.
இருப்பினும், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் போன்ற பா.ஜ.க ஆட்சி செய்யும் குறைந்த மக்கள் தொகை கொண்ட நகரங்களுக்கு மெட்ரோ திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்திற்கு மட்டும் இந்த விதியைக் கூறுவது ஒருதலைப்பட்சமானது
இந்த நிலையில் தமிழ்நாட்டிற்கு தேர்தல் பரப்புரைக்காக வந்துள்ள 'மகாராஷ்டிர மாநிலத் முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னவிஸ் பா.ஜ.க வெற்றி பெற்றால்தான் மெட்ரோ ரயில் திட்டத்தை கொண்டு வருவோம் என்று கூறுவது அப்பட்டமான மிரட்டல் அரசியலாகும். இது ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் இழைக்கப்படும் துரோகம்.
போன்ற பிற மாநிலத் தலைவர்கள் தமிழகம் வந்து வாக்குறுதிகளை அளிப்பது மக்களை ஏமாற்றும் செயல். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளது போல, இந்தத் தேர்தல் என்பது வெறும் கூட்டணிகளுக்கு இடையிலான மோதல் அல்ல, இது டெல்லிக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையிலான தேர்தல் ஆகும்.
இந்த விவகாரம் வெறும் திட்டங்களுக்கானது மட்டுமல்ல; இது நாக்பூரை (RSS தலைமையகம்) மையமாகக் கொண்ட இந்துத்துவா அரசியலுக்கும், கீழடியை மையமாகக் கொண்ட தமிழ்நாட்டின் பண்பாட்டிற்கும் இடையிலான மோதல்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
வயிற்று வலியை தீர்க்கும் : கஞ்சா செடி வளர்த்து விற்பனை - தந்தை மகன் கைது!
-
”அடுத்தடுத்த அரிவாள் வெட்டு.. அச்சத்தில் மக்கள்.. தறிகெட்டுப் போன சட்டம் ஒழுங்கு” : முழு விவரம்!
-
நடிகர் அஜித்குமார் தாயார் காலமானார் : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
-
”சறுக்கலை சந்தித்த முதல்வர் விஜயின் டெல்லி பயணம்.. செய்தியாளர்களா.. பதறிய விஜய்” : முரசொலி தலையங்கம்!
-
ஆசிரியப் பெருமக்களைப் பாதுகாக்கும் பணியில் உடனே இறங்குங்கள்! வீரவசனம் வேண்டாம் : அன்பில் மகேஸ் பொய்யாமொழி