Tamilnadu
“வெற்றி ஒன்றே இலக்கு” : கழக நிர்வாகிகள் மற்றும் வேட்பாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!
தமிழ்நாட்டில் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்தத் தேர்தலில் ஆளும் தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கும், அ.தி.மு.க.விற்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
இந்நிலையில் தி.மு.க மற்றும் அ.தி.மு.க வேட்பாளர்கள் ; கூட்டணி கட்சி வேட்பாளர்கள் தங்களது தொகுதிகளில் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கழக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.
அதேபோல் கழக இளைஞரணி செயலாளர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் தனது தேர்தல் பரப்புரையை தொடங்கியுள்ளார். மற்ற அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது தேர்தல் பரப்புரையை தொடங்கிவிட்டார்கள்.
இந்நிலையில் தி.மு.க நிர்வாகிகள் மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள்; வேட்பாளர்களுடன் கழக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலியில் ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போதுவெற்றி ஒன்றே இலக்கு என வலியுறுத்தியுள்ளார்.
பின்னர் சமூகவலைதளத்தில் ”வெற்றி ஒன்றே இலக்கு! ஓய்வின்றி உழைக்கும் கழகத்தின் செயல்வீரர்களுக்குப் பாராட்டுகள்! நேற்றிரவு கோவையில் முதற்கட்டப் பரப்புரைப் பயணத்தை நிறைவுசெய்துவிட்டு, சென்னைக்குத் திரும்பினேன்.
இன்று காலை, தமிழ்நாடு முழுவதும் களப்பணியாற்றி மக்களின் நம்பிக்கையை வாக்குகளாக உறுதிசெய்து வரும், கழகச் செயல்வீரர்களுடன் உரையாடி, ஊக்கப்படுத்தினேன். மாலை, பாளைங்கோட்டையில் இரண்டாம்கட்டப் பரப்புரைப் பயணத்தைத் தொடரப் புறப்படுகிறேன்." என தெரிவித்துள்ளார்.
Also Read
-
ரூ.50 ஆயிரம் மாமுதல் கேட்டு மிரட்டும் தவெக நிர்வாகி : புதிதாக வீடு கட்டி வரும் பெண் பரபரப்பு புகார்!
-
வாகனம் மோதியதால் ஏற்பட்ட தகராறு : இளைஞர் கத்தியால் குத்தி கொலை - சென்னையில் பரபரப்பு!
-
கரூர் துயரம் - விஜய் இதில் இருந்து தப்ப முடியாது ; இந்தப் பாவம் சும்மா விடாது : முரசொலி ஆவேசம்!
-
“It is grossly insensitive.. உங்களுக்கு தான் Class எடுக்கணும்...” - கீர்த்தனாவுக்கு உதயநிதி கண்டனம்!
-
‘திமுக திட்டங்களுக்கு ஸ்டிக்கர்..’ 50 நாள் தவெக ஆட்சியில் புது திட்டங்கள் இல்லை : தா.மோ.அன்பரசன் காட்டம்!