Tamilnadu
14 ஆண்டுகால துயரம் : சிறுமிக்கு வாழ்க்கை கொடுத்த ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை - முதலமைச்சர் பாராட்டு!
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமிக்கு, பிறந்ததில் இருந்தே சிறுநீரை தன்னிச்சையாக கட்டுப்படுத்தமுடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார்.
சமீபத்தில் தனியார் மருத்துவமனையில் சிறுமிக்கு பரிசோதனை செய்தபோது அவருக்கு சிறுநீர் கட்டுப்பாட்டு செயலிழப்பு பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டது. பின்னர் சாக்ரல் நியூரோ மோடுலேஷன் என்ற நவீன அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என அவரது பெற்றோரிடம் கூறியுள்ளனர்.
மேலும் ரூ.25 லட்சம் வரை செலவாகும் எனவும் வலியுறுத்தினர். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் இது குறித்து தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்றனர்.
பிறகு சிறுமியை சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதையடுத்து சிறுமிக்கு 2 கட்டமாக நவீன முறையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் சிறுமியின் 14 ஆண்டுகால துயரத்தில் இருந்து அரசு மருத்துவமனை அவரை மீட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக் குழுவினரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளார். மேலும் திராவிட மாடல் 2.0 ஆட்சியில் உயர்தர சிகிச்சை தொடரும் என முதலமைச்சர் உறுதியுன்ன தெரிவித்துள்ளார்.
இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், சிறுநீர்க் கட்டுப்பாட்டுச் செயலிழப்பால் பாதிக்கப்பட்ட சிறுமிக்குத் தென்னிந்தியாவிலேயே முதல்முறையாக 25 லட்ச ரூபாய் சிகிச்சையை அளித்துள்ள நம் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக் குழுவினரைப் பாராட்டுகிறேன்!
இத்தகைய சாதனைகள் தொடர, கடைக்கோடி மக்களுக்கும் உயர்தர சிகிச்சையை உறுதிசெய்ய, அமையவுள்ள #DravidianModel 2.0 ஆட்சியில்,
🩺மருத்துவக் காப்பீட்டுத் தொகை 10 லட்சம் ரூபாயாக உயர்வு
🩺சென்னை, காஞ்சிபுரம் போன்று, பிற வட்டாரங்களிலும் அரசு மருத்துவமனைகளில் புற்றுநோய்க்கான நவீன சிகிச்சை வசதிகள்
🩺தஞ்சாவூர், தருமபுரி, விழுப்புரத்தில் உயர்சிறப்பு மருத்துவமனைகள்
🩺மண்டல அளவில் கருத்தரிப்பு மையங்கள்
🩺மாவட்ட & வட்ட அளவிலான மருத்துவமனைகளில் டயாலிசிஸ் கருவிகளின் எண்ணிக்கை இருமடங்காக்கப்படும் உள்ளிட்ட பல வாக்குறுதிகளை Stalin Statement என வழங்கியிருக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த த.வெ.க மருத்துவ அணி நிர்வாகி : வலுக்கும் கண்டனங்கள்!
-
த.வெ.க ஆட்சியில் டெண்டர் ஊழல் அம்பலம் : நடந்தது என்ன?
-
”கோயபல்ஸ் உத்தியை பின்பற்றும் தவெக.. பொய் மேல் பொய்.. போலிக்கே போலி.. தவெக-வின் முரட்டு உருட்டுகள்”
-
கரூர் விவகாரம் - உண்மை வெளிவந்துவிடும் என்பதால் காவல்துறை அதிகாரிகளை மாற்றிய விஜய் : டி.கே.எஸ் இளங்கோவன்!
-
கலைஞரின் 103 ஆம் பிறந்த நாள் - 4 மாநிலங்களில் 103 பரப்புரைக் கூட்டங்கள் : ஆசிரியர் கி.வீரமணி அறிவிப்பு!