Tamilnadu
"விஜய் ஒரு மாய பிம்பம்": திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் விமர்சனம்!
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. திமுக மற்றும் அதிமுக கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வேட்புமனுத் தாக்கல் மற்றும் தேர்தல் பிரச்சாரம் என வேட்பாளர்கள் மக்களைச் சந்தித்து வாக்கு சேகரிக்கத் தொடங்கிவிட்டனர்.
இந்நிலையில், திருச்சி கிழக்குத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக, திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது.
இதில் பங்கேற்று காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளிடம் ஆதரவு கோரிய இனிகோ இருதயராஜ், பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”"இந்தத் தேர்தலில் தமிழ்நாடு அணிக்கும் டெல்லி அணிக்கும் தான் போட்டி. மற்றவர்களை எல்லாம் 'சைடுல போய் விளையாடுங்கள்' என்பது போலத்தான் நாம் பார்க்க வேண்டும்.
விஜயைப் பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை; அவரைப் பேசிப் பெரிதாக்க வேண்டாம். அவர் ஒரு மாய பிம்பம், வெறும் சினிமா மோகம் மட்டுமே.
கடந்த 2021 தேர்தலில் வெற்றி பெற்று, ஐந்து ஆண்டுகள் இந்தத் தொகுதிக்கு உண்மையாக உழைத்துப் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளேன். எனவே, மக்கள் மீண்டும் எனக்கு வாய்ப்பளிக்க வேண்டும்," என்றார்.
Also Read
-
“நிஜமான கேள்விகளைக் கண்டால் இப்படிப் பயந்து ஓடத்தான் முடியும்” : அமைச்சர் ஆனந்துக்கு DMK IT WING கண்டனம்!
-
“மின்கட்டண குளறுபடிகளை சரிசெய்ய வக்கற்ற த.வெ.க அமைச்சர்” : அனிதா ராதாகிருஷ்ணன் கடும் விமர்சனம்!
-
“தமிழ்நாட்டின் உயிர்ப் பிரச்சினை காவிரி.. முன்பே கணித்துதான் எச்சரித்தோம்” : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
‘வந்தே மாதரம்’ பாடலை கட்டாயமாக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது! : ஓய்வுபெற்ற நீதியரசர் அரிபரந்தாமன்!
-
கொள்கைத் தலைவர் பெரியார்.. ஆனால் பெரியார் திடலில் போலீஸ் குவிப்பு.. விஜய்க்கு ஏன் பதற்றம்? : முரசொலி!