Tamilnadu
பணம் வாங்கச் சொன்ன விஜய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் : தேர்தல் ஆணையத்திற்கு சிபிஐ வலியுறுத்தல்!
வாக்காளர்களை பணம் வாங்கச் சொன்ன விஜய் மீது, தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சி.பி.ஐ மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
தேர்தல் காலத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதும், வாங்குவதும் கடுமையான விதிமீறலாகும். ஆனால், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தனது கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் பேசும் போது, “ஆயிரம், 2 ஆயிரம்,5 ஆயிரம் என்று கொடுப்பார்கள். அது உங்கள் பணம். பணத்தை வாங்கிக் கொண்டு, அவர்கள் காதில் விசிலை ஊதி அனுப்புங்கள்.” என்று பேசியுள்ளார். இந்தச் செய்தி அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களில் விரிவாக வெளியாகியுள்ளது.
விஜய், பேச்சு “தேர்தல் மாதிரி நடத்தை விதிமுறைகள் அனைத்தையும் அப்பட்டமாக மீறியுள்ளது. இது நியாயமான மற்றும் சுதந்திரமான தேர்தல் முறைகளை தகர்க்கும் செயலாகும். இந்த விதிமுறை மீறல் தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு செல்லாதது வியப்பளிக்கிறது. ஆணையம் அமைத்துள்ள கண்காணிப்புக் குழுக்களின் செயல்பாடுகள் மீது ஆழ்ந்த சந்தேகம் எழுகிறது.
தேர்தல் ஆணையம் சந்தேகத்தின் நிழல் படியாமல், தனது பணிகளை வெளிப்படையாக இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். இதன் அடிப்படையில் மாதிரி விதிமுறைகளை மீறியுள்ள திரு விஜய் மீது, தேர்தல் ஆணையம் தானே முன் வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
Also Read
-
சமூகநீதிப் பிரச்சினையில் கை வைப்பது, சமூக விரோதச் செயலே : த.வெ.க அரசுக்கு கி.வீரமணி கடும் கண்டனம்!
-
தவெக அரசைக் கண்டித்து தஞ்சாவூரில் ஆகஸ்ட் 3-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
-
“முதுகெலும்பில்லா ஆட்சி தமிழ்நாட்டில் தொடர வேண்டுமா CM sir?” : அப்பாவு கடும் கண்டனம்!
-
குறுகிய காலத்தில் அதிக பணம் சம்பாதிக்கும் ஆசையால் வந்த வினை : கல்லூரி மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்!
-
‘ஊரான் வீட்டு நெய்யில உங்க வீட்டுக்கு ஸ்வீட் செய்யாதீங்க!’ : த.வெ.க.வை விமர்சித்த முரசொலி தலையங்கம்!