Tamilnadu
பா.ஜ.க-வையும் அ.தி.மு.க-வையும் விரட்டியடிப்போம் : காஞ்சிபுரத்தில் பிரச்சாரத்தை தொடங்கிய உதயநிதி ஸ்டாலின்!
காஞ்சிபுரத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா நினைவு இல்லத்தில், அவரது சிலைக்கு மரியாதை செலுத்திய பிறகு தனது தேர்தல் பிரச்சாரத்தைத் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கினார்.
பின்னர் காஞ்சிபுரம் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் நித்யா சுகுமாரை ஆதரித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "பேரறிஞர் அண்ணா பிறந்த மண்ணில் எனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்குகிறேன். காஞ்சிபுரத்தில் நமது வெற்றியை உறுதி செய்துவிட்டு, தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறேன்.
நான் பேரறிஞர் அண்ணா பிறந்த மண்ணில் பிரச்சாரத்தைத் தொடங்குகிறேன். நாளை நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், கலைஞர் பிறந்த மண்ணான திருவாரூரில் பிரச்சாரத்தைத் தொடங்குகிறார். ஆனால், எடப்பாடி பழனிசாமி எங்கிருந்து பிரச்சாரத்தைத் தொடங்கினார்? பா.ஜ.க. போட்டியிடும் மயிலாப்பூர் தொகுதியிலிருந்துதான் தனது பிரச்சாரத்தைத் தொடங்கினார். மோடியும் அமித்ஷாவும்தான் பழனிசாமியின் கொள்கைத் தலைவர்கள் என்பது இதிலிருந்து தெளிவாகத் தெரிகிறது.
தமிழ்நாட்டிற்கும் டெல்லிக்கும் நடக்கும் தேர்தல் இது. இந்த தேர்தலில் பா.ஜ.க-வையும், அ.தி.மு.க-வையும் விரட்டியடிப்போம். ஒன்றிய பா.ஜ.க. அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு எந்தத் திட்டமும் இல்லை; ஏன், 'தமிழ்நாடு' என்ற பெயர் கூட இல்லை! இப்படி நம்மை வஞ்சிக்கும் பா.ஜ.க-வைத்தான் அடிமை அ.தி.மு.க. தமிழ்நாட்டிற்குள் நுழைய விடப் பார்க்கிறது.
பா.ஜ.க-வுக்கு முரட்டு அடிமையாக இருக்கும் அ.தி.மு.க-வை விரட்டியடிக்க வேண்டிய தேர்தல் இது.டெல்லிக்குத் தமிழ்நாடு என்றுமே 'அவுட் ஆஃப் கண்ட்ரோல்' என்பதை நாம் மீண்டும் நிரூபிக்க வேண்டும்!
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ.2,000-ஆக உயர்த்தப்படும்; காலை உணவுத் திட்டம் 8-ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும்; புதுமைப் பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டங்களில் மாணவர்களுக்கு வழங்கப்படும் தொகை ரூ.1,500-ஆக உயர்த்தப்படும் என நமது தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளார்.”என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“சங்கரன்கோவில் டூ சுவீடன் - பட்டத்தை சமர்ப்பிக்கிறேன்...” : தென்காசி இளைஞருக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
-
பணியாளரை காலணியால் தாக்கிய DIG.. காவல்துறையினரின் அதிகார துஷ்பிரயோகம் : தவெக அரசு மீது சீறும் சண்முகம்!
-
நீட் மோசடி.. NTA அதிகாரிகளுக்கு நேரடி தொடர்பு ? - உச்ச நீதிமன்றத்தில் பகீர் கிளப்பு புதிய மனு!
-
ஓசூர் விமான ஆய்வு மையம் ஆந்திராவுக்கு மாற்றம் : இதனை நாம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது - டி.ஆர்.பி.ராஜா!
-
வீட்டு பால்கனியில் கஞ்சா செடி வளர்த்த தவெக ஆதரவாளர்: இதை வளர்ப்பதால் என்ன தப்பு?- போலீசாரிடம் வாக்குவாதம்