Tamilnadu
10 தொகுதிகளில் போட்டியிடும் தே.மு.தி.க : வெளியானது தொகுதிகளில் பட்டியல்!
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், மேற்குவங்கம், அசாம் ஆகிய 5 மாநில தேர்தல் தேதி அண்மையில் அறிவிக்கப்பட்டது. 3 கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தலில், தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதோடு 5 மாநிலங்களுக்கும் ஒரே கட்டமாக மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
இதனை முன்னிட்டு 5 மாநிலங்களை சேர்ந்த அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதோடு, தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த சூழலில் கடந்த 2021-ம் ஆண்டில் திமுக கூட்டணியில் இணைந்த கட்சிகள் இந்த முறையும் திமுக கூட்டணியில் இணைந்துள்ளதோடு, புதிய கட்சிகளும் கூட்டணியில் இணைந்துள்ளது.
இதையடுத்து பேச்சுவார்த்தைகள் முடிந்ததை அடுத்து தி.மு.க கூட்டணியில் இடம் பெற்றுள்ள கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி தே.மு.தி.க போட்டியிடும் 10 தொகுதிகள் விவரம் வருமாறு:-
1. விருத்தாசலம்
2. விருதுநகர்
3. தருமபுரி
4. குடியாத்தம் (தனி)
5. சேலம் மேற்கு
6. போளூர்
7. பல்லாவரம்
8. திருத்தணி
9. ஓமலூர்
10. மைலம்
Also Read
-
“கண்ணுக்குத் தெரியாத இடத்தில் கமிஷன்.. தவெக அரசின் தாரக மந்திரம்” : முன்னாள் அமைச்சர் ரகுபதி கண்டனம்!
-
முதல்வர் விஜய் புதுக்கோட்டை வருகை.. ஆட்சி நடத்த Astrologer எதற்கு CM Bro? : திமுக எம்.எல்.ஏ முத்துராஜா!
-
“தனிநபர்களின் Ego-வுக்கு காவு கொடுக்கப்படும் தமிழ்நாடு” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் சாடல்!
-
சென்னைக்கு ஆபத்தா? : முரசு புயல் எங்கே கரையை கடக்க உள்ளது தெரியுமா?
-
தவெக ஆட்சியில் தொடர்ந்து சரிவைச் சந்திக்கும் GST வரி வருவாய் : முக்கிய ஆலோசனை வழங்கிய தங்கம் தென்னரசு!