Tamilnadu
“வீடியோலாம் எடுக்க கூடாது...” - தேர்தல் அலுவலரை தடுத்த தஞ்சை பாஜக நிர்வாகி... அதிரடி காட்டிய போலீஸ்!
தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் நிலையில், அரசியல் கட்சிகள் பணப்பட்டுவாடா, பொருட்கள் உள்ளிட்டவற்றை பொதுமக்களுக்கு விநியோகம் செய்யாமல் தடுப்பதற்கு கண்காணிப்பு குழு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அண்மையில் கூட விஜய் கட்சியின் சின்னம் பொரித்த தண்ணீர் பாட்டில்கள் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது. இப்படி தொடர்ந்து அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்ததாக, தஞ்சை தெற்கு மாவட்ட பாஜக பொதுச்செயலாளர் வீரா என்ற வீரசிங்கம் கைது செய்யப்பட்டுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று (மார்ச் 21, சனிக்கிழமை) அன்று மாலை பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதனை தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த, சேதுபாவாசத்திரம் வேளாண் அலுவலரும், வீடியோ கண்காணிப்புக் குழு அலுவலருமான ராஜ்குமார் தலைமையிலான குழுவினர் வீடியோ எடுக்க சென்றுள்ளனர்.
அப்போது உள்ளரங்க கூட்டத்தில் நடைபெறுவதை வீடியோ எடுக்கக் கூடாது என்று கூறி, தஞ்சை தெற்கு மாவட்ட பாஜக பொதுச்செயலாளர் வீரா என்ற வீரசிங்கம் தடுத்து வாக்குவாதம் செய்துள்ளார். தேர்தல் அதிகாரிகள் எடுத்துக்கூறியும் அவர்களை மரியாதையின்றி பேசியும், பணியை செய்ய விடாமலும் தொடுத்துள்ளார்.
இதையடுத்து இது குறித்து வீடியோ கண்காணிப்புக்குழு அலுவலர் ராஜ்குமார், அரசு அலுவலரான தன்னை தேர்தல் பணி செய்ய விடாமல் தடுத்ததாக பேராவூரணி காவல்துறையில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் 126/2, 132 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து வீரா என்ற வீரசிங்கத்தை இன்று (மார்ச் 22) கைது செய்து, பேராவூரணி அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Also Read
-
“அறிவாலயத்தின் அறிவாயுதமான முரசொலியின் பயணம் நூறாண்டுகள் கடந்தும் தொடர்க!” : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு முதலில் விதை போட்டது கலைஞர் : பேரவையில் கோவி.செழியன் எம்.எல்.ஏ பேச்சு!
-
“Delimitation-ன் தொடக்கத்தில் கோலம் போட்டு விளையாடிக் கொண்டு இருந்தவர்தான் விஜய்!” : முரசொலி விமர்சனம்!
-
“நீட் தேர்வு எனும் உயிர்க் கொல்லியை ரத்து செய்ய வேண்டும்!” : தி.மு.க மாணவர் அணிச் செயலாளர் வீரமணி!
-
சூழ்ந்த மக்கள்.. செய்தி சேகரித்த பத்திரிகையாளர்.. மிரட்டிய தவெக அமைச்சரின் ஆதரவாளர்.. வைரலாகும் வீடியோ!