Tamilnadu
“பழனிசாமி ஒரு நன்றிகெட்ட அரசியல்வாதி” : ஓ.பன்னீர்செல்வம் கடும் தாக்கு!
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் மாபெரும் வெற்றியை உறுதி செய்யும் வகையில் , கழகத்தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின் பேரில் ஓ.பன்னீர் செல்வம் , தென் மாவட்டம் முழுதும் "தமிழ்நாடு தலைகுனியாது" தேர்தல் பரப்புரையை மேற்கொண்டுள்ளார்.
அதன்படி ஆண்டிப்பட்டி, ஸ்ரீவில்லிப்புத்தூர், ராஜபாளையம் தொகுதிகளில் பரப்புரை மேற்கொண்ட ஓ.பன்னீர்செல்வம் திராவிட மாடல் அரசின் நலத்திட்டங்கள், பொருளாதார வளர்ச்சியில் No 1 தமிழ்நாடு, தென் மாவட்டங்களில் தொடங்கப்பட்ட தொழில்கள் மற்றும் வேலை வாய்ப்பு ஆகியவற்றை சுட்டிக்காட்டினார்.
மேலும், "வாழ்க்கையில் நான் செய்த பெரிய தவறு, அவரை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்று சொன்னபோது அதை நான் ஏற்கவில்லை; நான் பழனிசாமிக்கு ஆதரவு தந்தேன், ஆனால் அந்த நன்றி இல்லாமல் என்னை அரசியலிலிருந்து விலக்க முயன்றார்” என பழனிசாமியை கடுமையாய் சாடினார்.
அதோடு "பழனிசாமி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்வராகவில்லை" எனக் கூறிவர் "பழனிசாமி ஒரு நன்றிக்கெட்ட அரசியல்வாதி; டெல்லிக்கு அடிமையாக இருக்கிறார்" எனவும் விமர்சித்தார்.
234/234 என்ற மாபெரும் வெற்றியை மக்கள் வழங்க வேண்டும்; மீண்டும் முதலமைச்சராக கழகத்தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வர வேண்டும் என மக்களிடம் ஆதரவு திரட்டினார். இன்றைய பரப்புரைக் கூட்டத்தில் எதிர்பார்த்ததை விட அதிகளவு மக்கள் கூடி ஆதரவு தெரிவித்தனர்.
Also Read
-
“சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க வாஷ்அவுட் ஆகும்” - எல்.கே. சுதீஷ் எம்.பி பேட்டி!
-
7 முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீது வழக்கு.. அதிமுக ஆட்சி ஊழல் நாற்றம் எடுத்த ஆட்சி: முரசொலி கடும் தாக்கு!
-
திராவிட மாடல் நாடு முழுவதும் பின்பற்றப்பட்டால் இந்தியா விரைவாக வளர்வது உறுதி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
”பவளவிழா கண்ட தி.மு.க பால்வாடி இயக்கத்திற்கு பாடம் புகட்டும்” : அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
-
”தமிழ்நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்”: அமைச்சர் தா.மோ.அன்பரசன் புகழாரம்!