Tamilnadu
இந்தியாவில் 67% பட்டதாரி இளைஞர்களுக்கு வேலை கிடைப்பதில் சிக்கல் : வெளியான அதிர்ச்சி அறிக்கை!
2004ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 50 லட்சம் இளைஞர்கள் பட்டதாரிகளாக உருவெடுத்தனர். ஆனால், அவர்களில் சுமார் 28 லட்சம் பேருக்கு மட்டுமே வேலை கிடைத்தது.
இந்நிலையில், அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் ‘இந்தியாவின் உழைக்கும் நிலை - 2026’ என்ற ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதில், இந்தியாவில் 2023ம் ஆண்டில் 20 முதல் 29 வயதுக்கு உட்பட்ட வேலையில்லாத இளைஞர்களில் 67 சதவீதம் பேர் பட்டதாரிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 25 வயதுக்கு உட்பட்ட இளம் பட்டதாரிகளிடையே வேலையில்லா திண்டாட்டம் 40 சதவீதமாகவும், 25 முதல் 29 வயதுடையவர்களிடம் 20 சதவீதமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட்டம் முடித்த ஓராண்டிற்குள் நிரந்தரமான சம்பளத்துடன் கூடிய வேலை கிடைப்பது வெறும் 7 சதவீதம் பேருக்கு மட்டுமே சாத்தியமாகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்டதாரிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருதால், வேலையில்லா திண்டாட்டம் பிரச்சினை மேலும் தீவிரமடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தகுதிக்கேற்ற வேலை கிடைக்காததால், பல பட்டதாரிகள் டெலிவரி பாய் அல்லது உடல் உழைப்பு சார்ந்த பணிகளுக்கோ செல்லும் சூழல் உள்ளது கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவில் 20 முதல் 29 வயதுக்குட்பட்ட பட்டதாரிகளில் ஒரு கோடிக்கும் அதிகமானோர் வேலையின்றி தவிப்பதாக கூறியுள்ளார். இவர்களில் மிகச்சிறிய பகுதியினர் மட்டுமே பட்டம் பெற்ற ஒரு ஆண்டுக்குள் நிலையான ஊதியத்துடன் கூடிய வேலைகளைப் பெறுவதாக குறிப்பிட்டுள்ளார். வேலையில்லா திண்டாட்டத்தின் பெரும் நெருக்கடிக்கு பிரதமரிடம் எந்தத் தீர்வும் இல்லை என்றும் காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
Also Read
-
நாடாளுமன்றத்தின் அலுவல் தொடர்பிற்கு ஏன் இந்தி மொழி ஆதிக்கம்? : துரை வைகோ எம்.பி கண்டனம்!
-
ஜவுளி ஏற்றுமதி : குஜராத்தை பின்னுக்குத் தள்ளி தமிழ்நாடு முதலிடம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
-
“தமிழ் மறவர்கள் வீழ்ந்துபோனால்; தாய்த்தமிழ் எங்ஙனம் வாழும் எனச் சிந்தியுங்கள்!” - முதல்வர் மு.க.ஸ்டாலின்!
-
‘கொடநாடு’ என்று சொன்னாலே குலை நடுக்கம் ஏற்படும் பழனிசாமிக்கு! : முரசொலி தலையங்கம் விமர்சனம்!
-
ச்சீ... பெண்களை இழிவு செய்யும் அதிமுக நிர்வாகிகள்.. வேடிக்கை பார்க்கும் அதிமுக - பாஜக பெண் உறுப்பினர்கள்!