Tamilnadu
உலக தரத்தில் ரூ.20 கோடியில் ஆர்.கே.நகர் விளையாட்டு வளாகம் திறப்பு! : முழு விவரம் உள்ளே!
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று (2.3.2026) வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் மாதவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புழல் மகாலஷ்மி நகரில் 12.39 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள சென்னை நடுநிலைப் பள்ளிக் கட்டடம், ஆர்.கே. நகர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தண்டையார்பேட்டையில் 21.95 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தண்டையார்பேட்டை பேருந்து நிலையம், புது வண்ணாரப்பேட்டையில் 19.70 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஆர்.கே. நகர் விளையாட்டு வளாகம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.
சென்னை நடுநிலைப் பள்ளிக் கட்டடம்:
மாதவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புழல் மகாலஷ்மி நகரில் அமைந்துள்ள மாதவரம் ஊராட்சி ஒன்றிய பள்ளியானது 1967 ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது திறந்து வைக்கப்பட்டது.
தற்போது வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் 12.39 கோடி ரூபாய் செலவில் 43,560 சதுர அடி மொத்த பரப்பளவில் 37,342 சதுர அடி கட்டடப் பரப்பளவில் தரை தளம் மற்றும் மூன்று தளங்களுடன் சென்னை நடுநிலைப் பள்ளி கட்டடம் கட்டப்பட்டுள்ளது.
இந்த பள்ளிக் கட்டடத்தில் 27 எண்ணிக்கையிலான வகுப்பறைகள், தலைமை ஆசிரியர் அறை, ஆசிரியர்கள் அறை, பதிவு அறை, 2 ஆய்வகங்கள் (அறிவியல் மற்றும் கணினி) உடற்கல்வி கூடம், நூலகம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, சேமிப்பு அறை, ஆண்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பறைகள், 45,500 லிட்டர் கொள்ளவு கொண்ட கீழ்நிலை நீர்த் தொட்டி, 31,590 லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலை தொட்டி, 13,260 லிட்டர் கொள்ளவு கொண்ட தீயணைப்பு மேல்நிலை தொட்டிகள், 93,100 லிட்டர் கொள்ளவு கொண்ட கழிவு நீர்த் தொட்டி உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.
தண்டையார்பேட்டை பேருந்து நிலையம்
ஆர்.கே. நகர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள தண்டையார்பேட்டை பேருந்து நிலையமானது வடசென்னை மக்களின் முக்கிய போக்குவரத்து வசதியாக இருந்து வருகிறது. இந்த பேருந்து நிலையம் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் 21.95 கோடி ரூபாய் செலவில் தரைதளம் மற்றும் இரண்டு தளங்களுடன் கட்டப்பட்டுள்ளது.
இப்பேருந்து நிலையத்தில் 15 பேருந்துகள் நிறுத்தும் வசதி, 25 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வசதி, 157 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வசதி, மின் தூக்கி, 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்சேமிப்பு தொட்டி, 20 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் சேமிப்பு தொட்டி என நவீன உட்கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.
இப்பேருந்து நிலையத்தில் உணவகங்கள், ஏடிஎம் மையம், 3 கடைகள், மாதாந்திர பயண சீட்டுகள் வழங்கும் அறை, தாய்மார்கள் பாலூட்டும் அறை, பயணிகளுக்கு இருக்கை வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், நவீன கழிப்பிடங்கள், பணிமனை அலுவலகம், பயிற்சி கூடம், கட்டுபாட்டு அறை, கணினி பிரிவு, காத்திருப்பு கூடம், பொது மேலாளர் அறை, பேருந்து நிலைய மேலாளர் அறை, சிசிடிவி கண்காணிப்பு வசதி, ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கான குளிரூட்டப்பட்ட தங்குமிடங்கள், பாதுகாப்பு பெட்டகம், குளியல் மற்றும் ஒப்பனை அறை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.
ஆர்.கே. நகர் விளையாட்டு வளாகம்
ஆர்.கே. நகர் விளையாட்டு வளாகமானது 37,157 சதுர அடி கட்டடப் பரப்பளவில் தரைதளம் மற்றும் முதல் தளத்துடன் கட்டப்பட்டுள்ளது. இவ்விளையாட்டு வளாகத்தில் 60 எண்ணிக்கை 4 சக்கர வாகனங்கள் நிறுத்தும் இடம், 50 எண்ணிக்கை 2 சக்கரம் வாகனங்கள் நிறுத்தும் இடம், 30,000 லிட்டர் கொள்ளவு கொண்ட நீர் சேமிப்பு தொட்டி, 33,000 லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலைத் தொட்டி, வெளிப்புற உடற்பயிற்சி கூடம் மற்றும் திறந்தவெளி அரங்கத்துடன் நவீன உட்கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.
தரை தளத்தில் உள்ள பல்நோக்கு கூடத்தில் ஒரு கூடைப்பந்து விளையாட்டு மைதானம், 2 எண்ணிக்கையிலான டேபிள் டென்னிஸ் விளையாட்டு பகுதி, உடற்பயிற்சி கூடம், முதலுதவி அறை, நிர்வாக அறை, உணவு கூடம், மின்சார அறை, மின்தூக்கி வசதி, உபகரணங்கள் அறை, ஆண்கள் மற்றும் பெண்களுக்கான பாதுகாப்பு பெட்டக அறை, குளியல் மற்றும் ஒப்பனை அறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
முதல் தளத்தில் உள்ள பல்நோக்கு கூடத்தில் 2 குத்துச்சண்டை மைதானங்கள், குளியல் மற்றும் ஒப்பனை அறை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. மேலும் வளாகத்தின் மேற்பகுதியில் 10 KV திறன் கொண்ட சூரிய மின்சக்தி உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
Also Read
-
பள்ளி கட்டடம் முதல் பேருந்து நிலையம் வரை : சென்னையில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்த துணை முதலமைச்சர்!
-
“இது எண்ணிக்கைக்கான கூட்டணி அல்ல! எண்ணத்தால் உருவாக்கப்பட்டுள்ள கூட்டணி!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“அனைவருக்கும் ஒரு இன்ஸ்பிரேஷன்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பாராட்டிய ரோஜா!
-
தெற்கு தேயவே தேயாது தேயவும் விடமாட்டோம்: ’மக்கள் முதல்வரின் மனிதநேய விழாவில்’ கமல்ஹாசன் எம்.பி பேச்சு!
-
பிப்ரவரி மாதத்தில் 96.40 லட்சம் பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் : ஒரேநாளில் மட்டும் இவ்வளவு பேர் பயணமா?