Tamilnadu

தமிழ்நாடு அரசின் 7 ஆண்டுகளுக்கான திரைப்பட விருதுகள் மற்றும் சின்னத்திரை விருதுகள்! : முழு விவரம் உள்ளே!

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று (13.2.2026) சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற தமிழ்நாடு அரசின் திரைப்பட விருது மற்றும் சின்னத்திரை விருதுகள் வழங்கும் விழாவில் 2016-ஆம் ஆண்டு முதல் 2022-ஆம் ஆண்டு வரையிலான 7 ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள், 2014-ஆம் ஆண்டு முதல் 2022-ஆம் ஆண்டு வரையிலான 9 ஆண்டுகளுக்கான சின்னத்திரை விருதுகள், 2015 – 2016 ஆம் கல்வியாண்டு முதல் 2021 – 2022 ஆம் கல்வியாண்டு வரையிலான 6 கல்வியாண்டுகளுக்கான தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தின் மாணவர் விருதுகளை வழங்கினார். 

சமுதாயச் சிந்தனைகளுடன் கூடிய மனித நல்லுணர்வுகளைப் பிரதிபலிக்கும் திரைப்படங்களை ஊக்கப்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில்,  சிறந்த தமிழ்த் திரைப்படங்கள், சிறந்த நடிகர், சிறந்த நடிகையர், சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆகியோருக்கு திரைப்பட விருதுகளும், மக்களின் அன்றாட வாழ்க்கையில் மிகப்பெரும் பங்கு வகிக்கும் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சிறந்த நெடுந்தொடர்கள்;

நெடுந்தொடர்களில்  நடித்த சிறந்த கதாநாயகன், சிறந்த கதாநாயகி, ஆண்டின் சிறந்த சாதனையாளர், ஆண்டின் வாழ்நாள் சாதனையாளர், சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆகியோருக்குச் சின்னத்திரை விருதுகளும், தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் மாணவர்கள் தயாரிக்கும் சிறந்த குறும்படங்களுக்கு மாணவர் விருதுகளும் தொடர்ந்து வழங்கிச் சிறப்பிக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இடைப்பட்ட ஆண்டுகளில் வழங்கப்படாமல் இருந்த விருதுகள் அனைத்தையும் வழங்கிட ஆணையிட்டுள்ளார்கள்.

அதனை தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி 2016-ஆம் ஆண்டு முதல் 2022-ஆம் ஆண்டு வரையிலான 7 ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகளுக்கான சிறந்த தமிழ்த் திரைப்படங்கள், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள், 2014-ஆம் ஆண்டு முதல் 2022-ஆம் ஆண்டு வரையிலான 9 ஆண்டுகளுக்கான சின்னத்திரை விருதுகளுக்கான சிறந்த நெடுந்தொடர்கள்;

கதாநாயகன், கதாநாயகி, ஆண்டின் சிறந்த சாதனையாளர், ஆண்டின் வாழ்நாள் சாதனையாளர் , சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள், 2015 – 2016 ஆம் கல்வியாண்டு முதல் 2021 – 2022 ஆம் கல்வியாண்டு வரையிலான 6 கல்வியாண்டுகளுக்கான தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தின் மாணவர் விருதுகளுக்கான விருதாளர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.

தமிழ்நாடு அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சிறந்த திரைப்படங்களுக்கு முதல் பரிசாக 2 இலட்சம் ரூபாயும், இரண்டாம் பரிசாக 1 இலட்சம் ரூபாயும், மூன்றாம் பரிசாக 75 ஆயிரம் ரூபாயும், சிறப்புப் பரிசாக 75 ஆயிரம் ரூபாயும், பெண்களைப்பற்றி உயர்வாகச் சித்தரிக்கும் படத்திற்குச் சிறப்புப் பரிசு 1.25 இலட்சம் ரூபாயும் வழங்கப்படுத்துடன், சிறந்த நடிகர், நடிகையர், சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு தலா 1 பவுன் தங்கப்பதக்கம், நினைவுப் பரிசு மற்றும் சான்றிதழும் வழங்கப்படுகின்றன.

தமிழ்நாடு அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சின்னத்திரை சிறந்த நெடுந்தொடர்களுக்கு முதல் பரிசாக 2 இலட்சம் ரூபாயும், இரண்டாம் பரிசாக 1 இலட்சம் ரூபாயும், ஆண்டின் சிறந்த சாதனையாளர் பரிசாக 1 இலட்சம் ரூபாயும், ஆண்டின் வாழ்நாள் சாதனையாளர் பரிசாக 1 இலட்சம் ரூபாயும் வழங்கப்படுத்துடன், சிறந்த கதாநாயகன், கதாநாயகி, சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு தலா 1 பவுன் தங்கப்பதக்கம், நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழும் வழங்கப்படுகின்றன.

தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவன மாணவர் விருதிற்குத் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் ரொக்கம், நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழும் வழங்கப்படுகின்றன.

2016-ஆம் ஆண்டுக்கான திரைப்பட விருது பெறும் விருதாளர்கள் பட்டியல்

2016-ஆம் ஆண்டுக்கான சிறந்த படத்திற்கான முதல் பரிசு மாநகரம் திரைப்படத்திற்கும், சிறந்த படத்திற்கான இரண்டாம் பரிசு புரியாத புதிர் திரைப்படத்திற்கும், சிறந்த படத்திற்கான மூன்றாம் பரிசு மாவீரன் கிட்டு திரைப்படத்திற்கும், சிறந்த படத்திற்கான (சிறப்பு பரிசு) மனுசங்கடா திரைப்படத்திற்கும், பெண்களைப் பற்றி உயர்வாக சித்தரிக்கும் படத்திற்கான (சிறப்பு பரிசு) அருவி திரைப்படத்திற்கும்;

சிறந்த  நடிகருக்கான  விருது  திரு.விஜய் சேதுபதி (புரியாத புதிர் திரைப்படத்திற்காக), சிறந்த  நடிகைக்கான விருது  திருமதி கீர்த்தி சுரேஷ் (பாம்பு சட்டை திரைப்படத்திற்காக), சிறந்த  நடிகருக்கான விருது (சிறப்பு பரிசு) திரு.எஸ்.குரு சோமசுந்தரம் (ஜோக்கர் திரைப்படத்திற்காக), சிறந்த  நடிகைக்கான விருது (சிறப்பு பரிசு) அதிதி பாலன் (அருவி திரைப்படத்திற்காக), சிறந்த  வில்லன் நடிகருக்கான  விருது திரு.ரகுமான் (ஒரு முகத்திரை திரைப்படத்திற்காக), 

 சிறந்த நகைச்சுவை  நடிகைக்கான விருது  திருமதி மதுமிதா (காஸ்மோரா திரைப்படத்திற்காக), சிறந்த  குணச்சித்திர நடிகருக்கான விருது திரு.ஆர்.பார்த்திபன்  (மாவீரன் கிட்டு திரைப்படத்திற்காக), சிறந்த குணச்சித்திர நடிகைக்கான விருது மனிஷா  யாதவ்  (ஒரு குப்பைக் கதை திரைப்படத்திற்காக), சிறந்த  இயக்குநருக்கான விருது திரு.லோகேஷ் கனகராஜ் (மாநகரம் திரைப்படத்திற்காக), சிறந்த கதையாசிரியருக்கான விருது திரு.அம்ஷன் குமார்  (மனுசங்கடா திரைப்படத்திற்காக);

சிறந்த உரையாடல் ஆசிரியருக்கான  விருது திரு.ராஜு முருகன் (ஜோக்கர் திரைப்படத்திற்காக), சிறந்த இசையமைப்பாளாருக்கான விருது திரு.ஷாம் C.S  (புரியாத புதிர் திரைப்படத்திற்காக), சிறந்த பாடலாசிரியருக்கான விருது திரு.மதன் கார்கி (நான் உன் அழகினிலே/ 24 திரைப்படங்களுக்காக),  சிறந்த பின்னணிப் பாடகருக்கான விருது திரு.வேல்முருகன் (ஒரு குப்பைக் கதை திரைப்படத்திற்காக), சிறந்த பின்னணிப் பாடகிக்கான விருது திருமதி வைக்கம் விஜயலட்சுமி (வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் திரைப்படத்திற்காக);

சிறந்த  ஒளிப்பதிவாளருக்கான விருது திரு.பாலசுப்ரமணியம் (கதகளி திரைப்படத்திற்காக), சிறந்த  ஒலிப்பதிவாளருக்கான விருது திரு.A.S. லஷ்மி நாராயணன் (24 திரைப்படத்திற்காக), சிறந்த  திரைப்படத் தொகுப்பாளருக்கான விருது (எடிட்டர்) திரு.மு.காசி விஸ்வநாதன் (மாவீரன் கிட்டு திரைப்படத்திற்காக),  சிறந்த கலை இயக்குநருக்கான விருது (ஆர்ட் டைரக்டர்) திரு.A.ஜான் பிரிட்டோ  (இளமி திரைப்படத்திற்காக), சிறந்த சண்டைப் பயிற்சியாளருக்கான விருது திரு.அன்பறிவ் (காஷ்மோரா/ 24 திரைப்படங்களுக்காக);

சிறந்த நடன ஆசிரியருக்கான விருது திரு.தினேஷ் (24/ ஒரு குப்பைக் கதை திரைப்படங்களுக்காக),  சிறந்த ஒப்பனைக் கலைஞருக்கான விருது திரு.மூவேந்தர் (பாம்பு சட்டை திரைப்படத்திற்காக), சிறந்த தையற் கலைஞருக்கான விருது திரு.பி.செல்வம் (மாநகரம் திரைப்படத்திற்காக), சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருது பேபி ஸ்மிர்தி (காஷ்மோரா திரைப்படத்திற்காக), சிறந்த பின்னணிக்குரல் கொடுப்பவருக்கான விருது (ஆண்) திரு.அசுரன் வெங்கட் (ஒரு கனவு போல திரைப்படத்திற்காக), சிறந்த பின்னணிக் குரல்  கொடுப்பவருக்கான  விருது (பெண்) திருமதி தீபா வெங்கட் (காஷ்மோரா திரைப்படத்திற்காக)   ஆகிய விருதாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.      

2017-ஆம் ஆண்டுக்கான திரைப்பட விருது பெறும் விருதாளர்கள் பட்டியல்

2017-ஆம் ஆண்டுக்கான  சிறந்த படத்திற்கான முதல் பரிசு அறம் திரைப்படத்திற்கும், சிறந்த படத்திற்கான  இரண்டாம் பரிசு விக்ரம் வேதா திரைப்படத்திற்கும், சிறந்த படத்திற்கான மூன்றாம் பரிசு தரமணி  திரைப்படத்திற்கும், சிறந்த படத்திற்கான (சிறப்பு பரிசு) டு லெட் திரைப்படத்திற்கும், பெண்களைப் பற்றி உயர்வாக சித்தரிக்கும் படத்திற்கான (சிறப்பு பரிசு) தர்மதுரை திரைப்படத்திற்கும், சிறந்த  நடிகருக்கான விருது திரு.கார்த்தி (தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்திற்காக), சிறந்த  நடிகைக்கான விருது திருமதி நயன் தாரா (அறம் திரைப்படத்திற்காக);

சிறந்த  நடிகருக்கான (சிறப்பு பரிசு) விருது திரு.சந்தோஷ் ஸ்ரீராம் (டு லெட் திரைப்படத்திற்காக), சிறந்த  நடிகைக்கான (சிறப்பு பரிசு) விருது ஆண்ட்ரியா ஜெர்மையா (தரமணி திரைப்படத்திற்காக), சிறந்த  வில்லன் நடிகருக்கான விருது திரு.பிரசன்னா  (திருட்டு பயலே-2 திரைப்படத்திற்காக), சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது திரு.பால சரவணன் (என் ஆளோட செருப்பக் காணோம் திரைப்படத்திற்காக), சிறந்த நகைச்சுவை  நடிகைக்கான   விருது திருமதி ஊர்வசி  (மகளிர் மட்டும் திரைப்படத்திற்காக);

சிறந்த  குணச்சித்திர நடிகருக்கான விருது திரு.போஸ் வெங்கட் (கவண்/ தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படங்களுக்காக), சிறந்த  குணச்சித்திர நடிகைக்கான  விருது சுனு லஷ்மி (அறம் திரைப்படத்திற்காக), சிறந்த  இயக்குநருக்கான விருது திருமதி புஷ்கர் காயத்ரி (விக்ரம் வேதா திரைப்படத்திற்காக), சிறந்த கதையாசிரியருக்கான விருது திரு.எச்.வினோத்குமார் (தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்திற்காக), சிறந்த உரையாடல் ஆசிரியருக்கான விருது திரு.ராம் (தரமணி திரைப்படத்திற்காக), சிறந்த இசையமைப்பாளாருக்கான விருது திரு.ஹிப் ஹாப் தமிழா (கவண் திரைப்படத்திற்காக);

சிறந்த பாடலாசிரியருக்கான விருது திரு.விவேக் – (தீரன்டா பாடல் - தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்திற்காக), சிறந்த பின்னணிப் பாடகருக்கான விருது திரு.சத்யபிரகாஷ் (திருட்டு பயலே -2  திரைப்படத்திற்காக), சிறந்த பின்னணிப் பாடகிக்கான விருது திருமதி ஷக்தி ஸ்ரீ  (விக்ரம் வேதா திரைப்படத்திற்காக), சிறந்த  ஒளிப்பதிவாளருக்கான விருது திரு.பி.செல்லதுரை (திருட்டு பயலே -2 திரைப்படத்திற்காக), சிறந்த  ஒலிப்பதிவாளருக்கான விருது திரு.ராதா கிருஷ்ணன் (அறம் திரைப்படத்திற்காக);

சிறந்த  திரைப்படத் தொகுப்பாளருக்கான விருது (எடிட்டர்) திரு.A.ராஜா முகம்மது (திருட்டு பயலே -2/ வீரையன் திரைப்படங்களுக்காக), சிறந்த கலை இயக்குநருக்கான  (ஆர்ட் டைரக்டர்) விருது திரு.A.K.முத்து (அண்டாவ காணோம் திரைப்படத்திற்காக), சிறந்த சண்டைப் பயிற்சியாளருக்கான விருது திரு.திலிப் சுப்ராயன் (விக்ரம் வேதா/ தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படங்களுக்காக), சிறந்த நடன ஆசிரியருக்கான விருது திரு.R.S.பாஸ்கர் (திருட்டு பயலே -2/ கவண் திரைப்படங்களுக்காக), சிறந்த ஒப்பனைக் கலைஞருக்கான விருது திரு.கிரி (விக்ரம் வேதா திரைப்படத்திற்காக);

சிறந்த தையற் கலைஞருக்கான விருது திரு.சீனிவாசன் (எ) சீனு  (கடுகு திரைப்படத்திற்காக), சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருது வி.சி.சாதன்யா (நிசப்தம் திரைப்படத்திற்காக), சிறந்த பின்னணிக்குரல் கொடுப்பவருக்கான விருது (ஆண்) திரு.ராஜ கோபால் (அறம் திரைப்படத்திற்காக), சிறந்த பின்னணிக்குரல்  கொடுப்பவருக்கான விருது (பெண்) திருமதி.உமா மகேஸ்வரி (அறம் திரைப்படத்திற்காக) ஆகிய விருதாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.      

2018-ஆம் ஆண்டுக்கான திரைப்பட விருது பெறும் விருதாளர்கள் பட்டியல்

சிறந்த படத்திற்கான முதல் பரிசு பரியேறும் பெருமாள் திரைப்படத்திற்கும், சிறந்த படத்திற்கான இரண்டாம் பரிசு கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்திற்கும், சிறந்த படத்திற்கான மூன்றாம் பரிசு 96 திரைப்படத்திற்கும், சிறந்த படத்திற்கான (சிறப்பு பரிசு) சீதக்காதி திரைப்படத்திற்கும், பெண்களைப் பற்றி உயர்வாக சித்தரிக்கும் படத்திற்கான (சிறப்பு பரிசு) கனா திரைப்படத்திற்கும், சிறந்த நடிகருக்கான விருது  திரு.தனுஷ் (வடசென்னை திரைப்படத்திற்காக);

சிறந்த  நடிகைக்கான விருது திருமதி ஜோதிகா (செக்கச் சிவந்த வானம் திரைப்படத்திற்காக), சிறந்த  நடிகருக்கான விருது (சிறப்பு பரிசு) திரு.விஷ்ணு விஷால் (ராட்சசன் திரைப்படத்திற்காக), சிறந்த  நடிகைக்கான விருது (சிறப்பு பரிசு) ஐஸ்வர்யா ராஜேஷ் (கனா/ வட சென்னை திரைப்படங்களுக்காக), சிறந்த  வில்லன் நடிகருக்கான விருது திரு.சமுத்திரகனி (வட சென்னை திரைப்படத்திற்காக), சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது திரு.யோகி பாபு (மோகினி திரைப்படத்திற்காக), சிறந்த நகைச்சுவை  நடிகைக்கான விருது  திருமதி தேவதர்ஷினி (96 திரைப்படத்திற்காக), சிறந்த  குணச்சித்திர நடிகருக்கான விருது திரு.அமீர் (வட சென்னை திரைப்படத்திற்காக);

சிறந்த  குணச்சித்திர நடிகைக்கான  விருது திருமதி.விஜி சந்திரசேகர் (கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்திற்காக), சிறந்த  இயக்குநருக்கான விருது திரு.மாரி செல்வராஜ் (பரியேறும் பெருமாள் திரைப்படத்திற்காக), சிறந்த கதையாசிரியருக்கான விருது திரு.சி.பிரேம்குமார்  (96 திரைப்படத்திற்காக), சிறந்த உரையாடல் ஆசிரியருக்கான விருது திரு.அருண் ராஜா காமராஜ் (கனா திரைப்படத்திற்காக), சிறந்த இசையமைப்பாளருக்கான விருது திரு.சந்தோஷ் நாராயணன் (வட சென்னை திரைப்படத்திற்காக), சிறந்த பாடலாசிரியருக்கான விருது திரு.தியாகராஜன் குமார ராஜா (சீதக்காதி திரைப்படத்திற்காக), சிறந்த பின்னணிப் பாடகருக்கான விருது திரு.சித் ஸ்ரீராம் (பல திரைப்படங்களுக்காக);

சிறந்த பின்னணிப் பாடகிக்கான விருது ஆராதனா சிவகார்த்திகேயன் (கனா திரைப்படத்திற்காக), சிறந்த  ஒளிப்பதிவாளருக்கான விருது திரு.ஆர்.வேல்ராஜ் (கடைக்குட்டி சிங்கம்/வட சென்னை திரைப்படத்திற்காக), சிறந்த  ஒலிப்பதிவாளருக்கான விருது திரு.T.உதயகுமார் (வட சென்னை திரைப்படத்திற்காக),  சிறந்த  திரைப்படத் தொகுப்பாளருக்கான (எடிட்டர்)  விருது திரு.ஷான் லோகேஷ்  (ராட்சசன் திரைப்படத்திற்காக), சிறந்த கலை இயக்குநருக்கான (ஆர்ட் டைரக்டர்)  விருது திரு.வினோத் ராஜ்குமார் (சீதக்காதி திரைப்படத்திற்காக);

சிறந்த சண்டைப் பயிற்சியாளருக்கான  விருது திரு.சுப்ரீம் சுந்தர்  (கோலி கோடா – 2 திரைப்படத்திற்காக), சிறந்த நடன ஆசிரியருக்கான விருது திரு.பாபா பாஸ்கர் (கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்திற்காக), சிறந்த ஒப்பனைக் கலைஞருக்கான விருது திரு.P.மாரியப்பன் (96/ மோகினி திரைப்படங்களுக்காக), சிறந்த தையற் கலைஞருக்கான விருது திருமதி பிரியங்கா (சீதக்காதி திரைப்படத்திற்காக), சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான  விருது கௌதம்  (சீதக்காதி திரைப்படத்திற்காக), சிறந்த பின்னணிக்குரல் கொடுப்பவருக்கான விருது (ஆண்) திரு.ஆதித்யா பாஸ்கர்  (96 திரைப்படத்திற்காக), சிறந்த பின்னணிக் குரல் கொடுப்பவருக்கான விருது (பெண்) திருமதி எம்.எம்.மானசி (மோகினி திரைப்படத்திற்காக) ஆகிய விருதாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.      

2019-ஆம் ஆண்டுக்கான திரைப்பட விருது பெறும் விருதாளர்கள் பட்டியல்

சிறந்த படத்திற்கான முதல் பரிசு அசுரன் திரைப்படத்திற்கும், சிறந்த படத்திற்கான இரண்டாம் பரிசு ஒத்த செருப்பு –சைஸ் 7 திரைப்படத்திற்கும், சிறந்த படத்திற்கான மூன்றாம் பரிசு கோமாளி திரைப்படத்திற்கும், சிறந்த படத்திற்கான (சிறப்பு பரிசு) கேடி என்ற கருப்பு துரை திரைப்படத்திற்கும், பெண்களைப் பற்றி உயர்வாக சித்தரிக்கும் படத்திற்கான (சிறப்பு பரிசு) பொன் மகள் வந்தாள் திரைப்படத்திற்கும், சிறந்த நடிகருக்கான விருது திரு.R.பார்த்திபன் (ஒத்த செருப்பு – சைஸ் 7 திரைப்படத்திற்காக);

சிறந்த நடிகைக்கான விருது  மஞ்சு வாரியர் (அசுரன் திரைப்படத்திற்காக), சிறந்த நடிகருக்கான (சிறப்பு பரிசு) திரு.கார்த்தி (கைதி திரைப்படத்திற்காக), சிறந்த நடிகைக்கான (சிறப்பு பரிசு) இந்துஜா  (மகாமுனி திரைப்படத்திற்காக), சிறந்த வில்லன் நடிகருக்கான விருது திரு.அர்ஜுன் தாஸ் (கைதி திரைப்படத்திற்காக), சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது திரு.கருணாகரன் (மான்ஸ்டர் திரைப்படத்திற்காக), சிறந்த நகைச்சுவை  நடிகைக்கான விருது   கோவை சரளா (காஞ்சனா -3 திரைப்படத்திற்காக), சிறந்த குணச்சித்திர நடிகருக்கான விருது திரு.பிரகாஷ் ராஜ்  (அசுரன் திரைப்படத்திற்காக);

சிறந்த குணச்சித்திர நடிகைக்கான  விருது திருமதி.ஸ்ரீ ரஞ்சினி (ஹவுஸ் ஓனர் திரைப்படத்திற்காக), சிறந்த இயக்குநருக்கான விருது திரு.R.பார்த்திபன் (ஒத்த செருப்பு –சைஸ் 7 திரைப்படத்திற்காக), சிறந்த கதையாசிரியருக்கான விருது திரு.பூமணி (அசுரன் திரைப்படத்திற்காக), சிறந்த உரையாடல் ஆசிரியருக்கான விருது திரு.வெற்றிமாறன (அசுரன் திரைப்படத்திற்காக), சிறந்த இசையமைப்பாளாருக்கான விருது திரு.தமன் (மகாமுனி திரைப்படத்திற்காக);

சிறந்த பாடலாசிரியருக்கான விருது திரு. கபிலன் (NGK திரைப்படத்திற்காக), சிறந்த பின்னணிப் பாடகருக்கான விருது திரு.ஹரிச்சரண் (பல படங்களுக்காக), சிறந்த பின்னணிப் பாடகிக்கான விருது திருமதி சைந்தவி (அசுரன் திரைப்படத்திற்காக), சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது திரு.தேனி ஈஸ்வர் (பேரன்பு திரைப்படத்திற்காக), சிறந்த ஒலிப்பதிவாளருக்கான விருது திரு.தபஸ் நாயக் (ஹவுஸ் ஓனர் திரைப்படத்திற்காக), சிறந்த திரைப்படத் தொகுப்பாளருக்கான விருது (எடிட்டர்) திரு.ரா.சுதர்சன் (ஒத்த செருப்பு – சைஸ் 7 திரைப்படத்திற்காக);

சிறந்த கலை இயக்குநருக்கான விருது (ஆர்ட் டைரக்டர்) திரு.C.S.பாலச்சந்திரன் (தர்ம பிரபு திரைப்படத்திற்காக), சிறந்த சண்டைப் பயிற்சியாளருக்கான விருது திரு.அன்பறிவ்  (கைதி திரைப்படத்திற்காக), சிறந்த நடன ஆசிரியருக்கான விருது திரு.ராகவா லாரன்ஸ் (காஞ்சனா -3 திரைப்படத்திற்காக), சிறந்த ஒப்பனைக் கலைஞருக்கான விருது திரு.கே.கணேசன் (காஞ்சனா -3 திரைப்படத்திற்காக);

சிறந்த தையற் கலைஞருக்கான விருது திரு.முருகன் (தர்மபிரபு திரைப்படத்திற்காக), சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான  விருது திரு.நாகவிஷால் (கேடி என்ற கருப்பு துரை திரைப்படத்திற்காக), சிறந்த பின்னணிக்குரல் கொடுப்பவருக்கான (ஆண்) விருது திரு.கதிர் (உற்றான் திரைப்படத்திற்காக), சிறந்த பின்னணிக் குரல் கொடுப்பவருக்கான (பெண்) விருது ஐஸ்வர்யா பாஸ்கர் (பல படங்களுக்காக) ஆகிய விருதாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.      

2020-ஆம் ஆண்டுக்கான திரைப்பட விருது பெறும் விருதாளர்கள் பட்டியல்

சிறந்த படத்திற்கான முதல் பரிசு கூழாங்கல் திரைப்படத்திற்கும், சிறந்த படத்திற்கான இரண்டாம் பரிசு சூரரைப் போற்று திரைப்படத்திற்கும், சிறந்த படத்திற்கான மூன்றாம் பரிசு சண்டகாரி திரைப்படத்திற்கும், சிறந்த படத்திற்கான (சிறப்பு பரிசு) தேன் திரைப்படத்திற்கும், பெண்களைப் பற்றி உயர்வாக சித்தரிக்கும் படத்திற்கான (சிறப்பு பரிசு) கமலி From நடுக்காவேரி திரைப்படத்திற்கும், சிறந்த  நடிகருக்கான விருது திரு.சூர்யா (சூரரைப்போற்று திரைப்படத்திற்காக);

சிறந்த  நடிகைக்கான விருது  திருமதி அபர்ணா பாலமுரளி (சூரரைப்போற்று திரைப்படத்திற்காக), சிறந்த  நடிகருக்கான (சிறப்பு பரிசு) திரு.தருண் குமார் (தேன் திரைப்படத்திற்காக), சிறந்த  நடிகைக்கான (சிறப்பு பரிசு) அபர்நதி (தேன் திரைப்படத்திற்காக), சிறந்த  வில்லன் நடிகருக்கான விருது திரு.நந்தா (வானம் கொட்டட்டும் திரைப்படத்திற்காக), சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது திரு.ரக்சன் (கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்திற்காக);

சிறந்த  குணச்சித்திர நடிகருக்கான விருது திரு.கருணாஸ் (சூரரைப்போற்று திரைப்படத்திற்காக), சிறந்த  குணச்சித்திர நடிகைக்கான விருது திருமதி.வடிவுக்கரசி (ஜன நாயகம் விற்பனைக்கு அல்ல திரைப்படத்திற்காக), சிறந்த இயக்குநருக்கான விருது திருமதி சுதா கொங்கரா (சூரரைப்போற்று திரைப்படத்திற்காக), சிறந்த கதையாசிரியருக்கான விருது திரு.கு.கணேசன் (மனிதம் திரைப்படத்திற்காக), சிறந்த உரையாடல் ஆசிரியருக்கான விருது திரு.ராசி தங்கதுரை (தேன் திரைப்படத்திற்காக);

சிறந்த இசையமைப்பாளாருக்கான விருது திரு.ஜி.வி.பிரகாஷ் குமார் (சூரரைப்போற்று திரைப்படத்திற்காக), சிறந்த பாடலாசிரியருக்கான விருது கவிஞர் தாமரை  (தாய்நிலம் திரைப்படத்திற்காக), சிறந்த பின்னணிப் பாடகருக்கான விருது திரு.அம்ரிஷ் (சண்டகாரி திரைப்படத்திற்காக), சிறந்த பின்னணிப் பாடகிக்கான விருது திருமதி வர்ஷா ரஞ்சித் (தாய்நிலம் திரைப்படத்திற்காக), சிறந்த  ஒளிப்பதிவாளருக்கான  விருது திரு.என்.கே.ஏகாம்பரம் (க/பெ. ரணசிங்கம் திரைப்படத்திற்காக);

சிறந்த  ஒலிப்பதிவாளருக்கான விருது திரு.விஷ்ணு கோவிந்த் (சூரரைப்போற்று திரைப்படத்திற்காக), சிறந்த  திரைப்படத் தொகுப்பாளருக்கான விருது (எடிட்டர்) திரு.லாரன்ஸ் கிஷோர்  (தேன் திரைப்படத்திற்காக), சிறந்த கலை இயக்குநருக்கான விருது (ஆர்ட் டைரக்டர்) திரு.ஐய்யப்பன்  (சண்டகாரி திரைப்படத்திற்காக), சிறந்த சண்டைப் பயிற்சியாளருக்கான விருது திரு. சூப்பர் சுப்பராயன்  (சேசிங் திரைப்படத்திற்காக),  சிறந்த நடன ஆசிரியருக்கான விருது திரு.சாண்டி (ராஜவம்சம் திரைப்படத்திற்காக);

சிறந்த ஒப்பனைக் கலைஞருக்கான விருது திருமதி வினிதா (ஃபில்டர் கோல்டு திரைப்படத்திற்காக), சிறந்த தையற் கலைஞருக்கான விருது திரு.விஜயபாஸ்கர்  (ஃபில்டர் கோல்டு திரைப்படத்திற்காக), சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருது செல்லப்பாண்டி (கூழாங்கல் திரைப்படத்திற்காக), சிறந்த பின்னணிக்குரல் கொடுப்பவருக்கான (ஆண்) விருது திரு.தேவன் முத்துக்குமார் (ஜனநாயகம் விற்பனைக்கு அல்ல திரைப்படத்திற்காக),  சிறந்த பின்னணிக் குரல் கொடுப்பவருக்கான (பெண்) விருது திருமதி கீர்த்திகா நெல்சன் (வானம் கொட்டட்டும் திரைப்படத்திற்காக) ஆகிய விருதாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.      

2021-ஆம் ஆண்டுக்கான திரைப்பட விருது பெறும் விருதாளர்கள் பட்டியல்

சிறந்த படத்திற்கான முதல் பரிசு ஜெய் பீம் திரைப்படத்திற்கும், சிறந்த படத்திற்கான இரண்டாம் பரிசு கடைசி விவசாயி  திரைப்படத்திற்கும், சிறந்த படத்திற்கான மூன்றாம் பரிசு கர்ணன்  திரைப்படத்திற்கும், சிறந்த படத்திற்கான (சிறப்பு பரிசு) ரூபாய் 2000 திரைப்படத்திற்கும், பெண்களைப் பற்றி உயர்வாக சித்தரிக்கும் படத்திற்கான (சிறப்பு பரிசு) நெற்றிக்கண் திரைப்படத்திற்கும், சிறந்த  நடிகருக்கான விருது திரு.ஆர்யா (சார்பட்டா பரம்பரை திரைப்படத்திற்காக);

சிறந்த  நடிகைக்கான விருது லிஜோ மோல் ஜோஸ்  (ஜெய் பீம் திரைப்படத்திற்காக), சிறந்த நடிகருக்கான (சிறப்பு பரிசு) திரு.பசுபதி (சார்பட்டா பரம்பரை திரைப்படத்திற்காக), சிறந்த  நடிகைக்கான (சிறப்பு பரிசு) அம்ருதா சீனிவாசன் (இறுதி பக்கம் திரைப்படத்திற்காக), சிறந்த  வில்லன் நடிகருக்கான விருது திரு.தமிழ் (ஜெய் பீம் திரைப்படத்திற்காக), சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது திரு.யோகி பாபு (டாக்டர் திரைப்படத்திற்காக);

சிறந்த நகைச்சுவை  நடிகைக்கான விருது  திருமதி மதுமிதா  (வரிசி திரைப்படத்திற்காக), சிறந்த  குணச்சித்திர நடிகருக்கான விருது திரு.கே.மணிகண்டன் (ஜெய் பீம் திரைப்படத்திற்காக), சிறந்த  குணச்சித்திர நடிகைக்கான விருது  டாக்டர் ரெய்ச்சல் ரபேக்கா  (கடைசி விவசாயி திரைப்படத்திற்காக), சிறந்த  இயக்குநருக்கான விருது திரு.தா.செ.ஞானவேல் (ஜெய் பீம் திரைப்படத்திற்காக), சிறந்த கதையாசிரியருக்கான விருது திரு.எம்.மணிகண்டன் (கடைசி விவசாயி திரைப்படத்திற்காக), சிறந்த உரையாடல் ஆசிரியருக்கான விருது திரு. மாரி செல்வராஜ் (கர்ணன் திரைப்படத்திற்காக);

சிறந்த இசையமைப்பாளாருக்கான விருது திரு.ஷான் ரோல்டன் (ஜெய்  பீம் திரைப்படத்திற்காக), சிறந்த பாடலாசிரியருக்கான விருது கவிஞர் தாமரை (மாறா திரைப்படத்திற்காக), சிறந்த பின்னணிப் பாடகருக்கான விருது திரு.அறிவு (ஜெய் பீம் திரைப்படத்திற்காக), சிறந்த பின்னணிப் பாடகிக்கான விருது திருமதி பவதாரணி (மா மனிதன் திரைப்படத்திற்காக), சிறந்த  ஒளிப்பதிவாளருக்கான விருது திரு.ரிச்சர்ட் எம் நாதன் (மாநாடு திரைப்படத்திற்காக);

சிறந்த  ஒலிப்பதிவாளர் விருது திரு.ராஜா கிருஷ்ணன் (கடைசி விவசாயி திரைப்படத்திற்காக), சிறந்த  திரைப்படத் தொகுப்பாளருக்கான விருது (எடிட்டர்) திரு.பிரவீன்  (மாநாடு திரைப்படத்திற்காக), சிறந்த கலை இயக்குநருக்கான விருது (ஆர்ட் டைரக்டர்) திரு.T.ராமலிங்கம் (கர்ணன் திரைப்படத்திற்காக), சிறந்த சண்டைப் பயிற்சியாளருக்கான விருது திரு.மகேஷ் மேத்யூ (கோடியில் ஒருவன் திரைப்படத்திற்காக);

சிறந்த நடன ஆசிரியருக்கான விருது திருமதி ராதிகா (பல்வேறு படங்களுக்காக), சிறந்த ஒப்பனைக் கலைஞருக்கான விருது திவ்யா (இறுதி பக்கம் திரைப்படத்திற்காக), சிறந்த தையற் கலைஞருக்கான விருது திருமதி பல்லவி சிங்  (சுல்தான் திரைப்படத்திற்காக), சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருது அர்ணவ் விஜய் (ஓ மை டாக் திரைப்படத்திற்காக), சிறந்த பின்னணிக்குரல் கொடுப்பவருக்கான (ஆண்) விருது திரு.அமித் (ரூபாய் 2000 திரைப்படத்திற்காக), சிறந்த பின்னணிக் குரல் கொடுப்பவருக்கான (பெண்) விருது திருமதி கீர்த்தி உதயா (மீண்டும் திரைப்படத்திற்காக) ஆகிய விருதாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.      

2022-ஆம் ஆண்டுக்கான திரைப்பட விருது பெறும் விருதாளர்கள் பட்டியல்

சிறந்த படத்திற்கான முதல் பரிசு கார்கி திரைப்படத்திற்கும், சிறந்த படத்திற்கான இரண்டாம் பரிசு டாணாக்காரன் திரைப்படத்திற்கும், சிறந்த படத்திற்கான மூன்றாம் பரிசு விட்னஸ் திரைப்படத்திற்கும், சிறந்த படத்திற்கான (சிறப்பு பரிசு) இரவின் நிழல் திரைப்படத்திற்கும், பெண்களைப் பற்றி உயர்வாக சித்தரிக்கும் படத்திற்கான (சிறப்பு பரிசு) அவள் அப்படித்தான் -2 திரைப்படத்திற்கும், சிறந்த நடிகருக்கான விருது திரு.விக்ரம் பிரபு (டாணாக்காரன் திரைப்படத்திற்காக) சிறந்த  நடிகைக்கான விருது சாய் பல்லவி  (கார்கி திரைப்படத்திற்காக);

சிறந்த  நடிகருக்கான (சிறப்பு பரிசு) திரு.அப்புக்குட்டி (வாழ்க விவசாயி திரைப்படத்திற்காக), சிறந்த  நடிகைக்கான (சிறப்பு பரிசு) துஷாரா விஜயன் ( நட்சத்திரம் நகர்கிறது திரைப்படத்திற்காக), சிறந்த  வில்லன் நடிகருக்கான விருது திரு.பிரகாஷ் ராஜ் (விருமன் திரைப்படத்திற்காக), சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது திரு.ரோபோ சங்கர் (மறைவு) (இரவின் நிழல் திரைப்படத்திற்காக), சிறந்த நகைச்சுவை  நடிகைக்கான விருது  திருமதி இந்திரஜா சங்கர் (விருமன் திரைப்படத்திற்காக), சிறந்த  குணச்சித்திர நடிகருக்கான விருது திரு.போஸ் வெங்கட் (டாணாக்காரன் திரைப்படத்திற்காக);

சிறந்த குணச்சித்திர நடிகைக்கான விருது  வசுந்தரா (வாழ்க விவசாயி திரைப்படத்திற்காக), சிறந்த  இயக்குநருக்கான விருது திரு.கௌதம் ராமச்சந்திரன் (கார்கி திரைப்படத்திற்காக), சிறந்த கதையாசிரியருக்கான விருது திரு.பிரதீப் ரங்கநாதன் (லவ் டுடே திரைப்படத்திற்காக), சிறந்த உரையாடல் ஆசிரியருக்கான விருது திரு. தமிழரசன் பச்சமுத்து (நெஞ்சுக்கு நீதி திரைப்படத்திற்காக), சிறந்த இசையமைப்பாளாருக்கான விருது திரு.ஏ.ஆர்.ரகுமான் (பொன்னியின் செல்வன்-1 திரைப்படத்திற்காக), சிறந்த பாடலாசிரியருக்கான விருது திரு.இளங்கோ கிருஷ்ணன்  (பொன்னியின் செல்வன் -1 திரைப்படத்திற்காக), சிறந்த பின்னணிப் பாடகருக்கான விருது திரு.ஹரிச்சரண் (இரவின் நிழல் திரைப்படத்திற்காக), சிறந்த பின்னணிப் பாடகிக்கான விருது கதீஜா ரஹ்மான் (இரவின் நிழல் திரைப்படத்திற்காக);

சிறந்த  ஒளிப்பதிவாளருக்கான விருது திரு.ஆ.ஆர்தர் வில்சன் (இரவின் நிழல் திரைப்படத்திற்காக), சிறந்த  ஒலிப்பதிவாளருக்கான விருது திரு.ஆனந்த் கிருஷ்ண மூர்த்தி (பொன்னியின் செல்வன்-1 திரைப்படத்திற்காக), சிறந்த  திரைப்படத் தொகுப்பாளருக்கான  (எடிட்டர்) விருது திரு.சுரேஷ் அர்ஸ் (உலகம்மை திரைப்படத்திற்காக), சிறந்த கலை இயக்குநருக்கான  (ஆர்ட் டைரக்டர்) விருது திரு.தோட்டா தரணி  (பொன்னியின் செல்வன்-1 திரைப்படத்திற்காக), சிறந்த சண்டைப் பயிற்சியாளருக்கான விருது திரு.அனல் அரசு (விருமன் திரைப்படத்திற்காக);

சிறந்த நடன ஆசிரியருக்கான விருது திருமதி பிருந்தா (பொன்னியின் செல்வன் -1 திரைப்படத்திற்காக), சிறந்த ஒப்பனைக் கலைஞருக்கான விருது திரு.விக்ரம் கெய்க்வாட் (பொன்னியின் செல்வன் -1 திரைப்படத்திற்காக), சிறந்த தையற் கலைஞருக்கான விருது ஏகா லகானி  (பொன்னியின் செல்வன் -1 திரைப்படத்திற்காக), சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான  விருது பேபி டாவியா (அக்கா குருவி திரைப்படத்திற்காக), சிறந்த பின்னணிக்குரல் கொடுப்பவருக்கான விருது (ஆண்) திரு.விமல்  (அமைச்சர் திரைப்படத்திற்காக), சிறந்த பின்னணிக் குரல் கொடுப்பவருக்கான  விருது (பெண்) திருமதி மகாலட்சுமி (டைரி திரைப்படத்திற்காக) ஆகிய விருதாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.      

2014-ஆம் ஆண்டுக்கான சின்னத்திரை விருது பெறும் விருதாளர்கள் பட்டியல்

2014-ஆம் ஆண்டுக்கான சிறந்த நெடுந்தொடருக்கான விருது – முதல் பரிசு அழகி, சிறந்த நெடுந்தொடருக்கான விருது – இரண்டாம் பரிசு வள்ளி, 2014-ஆம் ஆண்டின் சிறந்த சாதனையாளருக்கான விருது திருமதி நளினி, 2014-ஆம் ஆண்டின் வாழ்நாள் சாதனையாளருக்கான விருது திரு.எஸ்.ராஜசேகரன், சிறந்த கதாநாயகனுக்கான விருது திரு.எம்.ராஜ்குமார் (வள்ளி தொடருக்காக), சிறந்த கதாநாயகிக்கான விருது திருமதி ஆர்.ராதிகா சரத்குமார் (ராணி கதாபாத்திரம் - வாணி ராணி தொடருக்காக), சிறந்த குணச்சித்திர நடிகருக்கான விருது திரு.வின்சென்ட்ராய் (அழகி தொடருக்காக);

சிறந்த குணச்சித்திர நடிகைக்கான விருது திருமதி சமிதா (பிள்ளை நிலா தொடருக்காக), சிறந்த வில்லன் நடிகருக்கான விருது திரு.OAK சுந்தர் (பிள்ளை நிலா தொடருக்காக), சிறந்த வில்லி நடிகைக்கான விருது திருமதி சங்கராபரணம் ராஜலட்சுமி (பிள்ளை நிலா தொடருக்காக),  சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருது ஆர்.நேகா (வாணி ராணி / பிள்ளை நிலா தொடர்களுக்காக),  சிறந்த இயக்குநருக்கான விருது திரு.என்.சுந்தரேஷ்வரன் (வள்ளி தொடருக்காக), சிறந்த கதையாசிரியருக்கான விருது திரு.கே.சண்முகம் (வள்ளி தொடருக்காக);

சிறந்த திரைக்கதையாசிரியருக்கான விருது திரு.சி.யூ. முத்துச்செல்வம்  (தென்றல் தொடருக்காக),  சிறந்த உரையாடல் ஆசிரியருக்கான விருது திரு.வசு பாரதி (தெய்வமகள் தொடருக்காக),  சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது திரு.சாய் பிரபாகரா (வைராக்கியம் தொடருக்காக), சிறந்த படத் தொகுப்பாளருக்கான விருது திரு.எஸ்.நீல்ஸ்டின் (தெய்வமகள் தொடருக்காக), சிறந்த பின்னணி இசையமைப்பாளருக்கான விருது திரு.ரமணி பரத்வாஜ் (வைராக்கியம் தொடருக்காக),  சிறந்த பின்னணிக் குரல் கொடுப்பவருக்கான விருது (ஆண்) திரு.டி.ரவிசங்கர் (பிள்ளை நிலா, இளவரசி தொடருக்காக), சிறந்த பின்னணிக் குரல் கொடுப்பவருக்கான விருது (பெண்) திருமதி ஜி.ஜி (தென்றல் தொடருக்காக) ஆகிய விருதாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.     

2015-ஆம் ஆண்டுக்கான சின்னத்திரை விருது பெறும் விருதாளர்கள் பட்டியல்

2015-ஆம் ஆண்டுக்கான சிறந்த நெடுந்தொடருக்கான விருது – முதல் பரிசு ரோமாபுரி பாண்டியன், சிறந்த நெடுந்தொடருக்கான விருது – இரண்டாம் பரிசு அன்னக்கொடியும் ஐந்து பெண்களும்,  2015-ஆம் ஆண்டின் சிறந்த சாதனையாளருக்கான விருது  வெண்ணிற ஆடை நிர்மலா, 2015-ஆம் ஆண்டின் வாழ்நாள்  சாதனையாளருக்கான விருது திரு.எஸ்.வி.சேகர், சிறந்த  கதாநாயகனுக்கான விருது திரு.ஆர்.பாண்டியராஜன் (என் தங்கை தொடருக்காக), சிறந்த கதாநாயகிக்கான விருது திருமதி.வாணி போஜன் (தெய்வமகள் தொடருக்காக);

சிறந்த குணச்சித்திர நடிகருக்கான விருது திரு.டி.வி.வரதராஜன் (தாமரை தொடருக்காக), சிறந்த குணச்சித்திர நடிகை திருமதி கனகா (என் தங்கை தொடருக்காக),  சிறந்த வில்லன் நடிகருக்கான விருது திரு.பாலா சிங் (ஆதிரா தொடருக்காக),  சிறந்த வில்லி நடிகை திருமதி R.நாகலட்சுமி (அழகி தொடருக்காக), சிறந்த குழந்தை நட்சத்திரம் திரு.ஷாஹில் (ஆதிரா தொடருக்காக),  சிறந்த இயக்குநருக்கான விருது திரு.எஸ்.என்.சக்திவேல்  (சின்ன பாப்பா பெரிய பாப்பா தொடருக்காக);

சிறந்த கதையாசிரியருக்கான விருது கலைஞர் மு.கருணாநிதி  (ரோமாபுரி பாண்டியன் தொடருக்காக), சிறந்த திரைக்கதையாசிரியருக்கான விருது கலைஞர் மு.கருணாநிதி (ரோமாபுரி பாண்டியன் தொடருக்காக), சிறந்த உரையாடல் ஆசிரியருக்கான விருது கலைஞர் மு.கருணாநிதி (ரோமாபுரி பாண்டியன் தொடருக்காக),  சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது திரு.K.விக்ரமன் (தாமரை தொடருக்காக);

சிறந்த படத் தொகுப்பாளருக்கான விருது திரு.உமா சங்கர் பாபு (என் தங்கை தொடருக்காக),  சிறந்த பின்னணி இசையமைப்பாளருக்கான விருது திரு.S.P.பூபதி (என் தங்கை தொடருக்காக), சிறந்த பின்னணிக் குரல் கொடுப்பவருக்கான விருது (ஆண்) திரு.சத்யராஜ் (அழகி தொடருக்காக),  சிறந்த பின்னணிக் குரல் கொடுப்பவருக்கான விருது (பெண்) திருமதி.கல்யாணி (கேளடி கண்மணி தொடருக்காக) ஆகிய விருதாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.      

2016-ஆம் ஆண்டுக்கான சின்னத்திரை விருது பெறும் விருதாளர்கள் பட்டியல்

2016-ஆம் ஆண்டுக்கான சிறந்த நெடுந்தொடருக்கான விருது – முதல் பரிசு ராமானுஜர், சிறந்த நெடுந்தொடருக்கான விருது –  இரண்டாம் பரிசு கல்யாண பரிசு, 2016-ஆம் ஆண்டின் சிறந்த  சாதனையாளருக்கான விருது  திருமதி T.R.லதா,  ஆண்டின் வாழ்நாள்  சாதனையாளருக்கான விருது திரு.அழகன் தமிழ்மணி, சிறந்த  கதாநாயகனுக்கான விருது திரு.கௌசிக் (ராமானுஜர் தொடருக்காக),  சிறந்த கதாநாயகிக்கான விருது திருமதி நீலிமா ராணி (தாமரை தொடருக்காக);

சிறந்த குணச்சித்திர நடிகருக்கான விருது திரு.S.V.S.குமார் (தெய்வமகள் தொடருக்காக), சிறந்த குணச்சித்திர நடிகைக்கான விருது திருமதி பாலாம்பிகா (பிரியமானவள் தொடருக்காக),  சிறந்த வில்லன் நடிகருக்கான விருது திரு.அப்ஸர்  (தாமரை தொடருக்காக),  சிறந்த வில்லி நடிகைக்கான விருது திருமதி உஷா எலிசபெத் சுராஜ் (பிரியமானவள் தொடருக்காக), சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருது ஸ்ரீஜா (தெய்வமகள் தொடருக்காக),  சிறந்த இயக்குநர் திரு.தனுஷ் (ராமானுஜர் தொடருக்காக);

சிறந்த கதையாசிரியருக்கான விருது கலைஞர் மு.கருணாநிதி (ராமானுஜர் தொடருக்காக),  சிறந்த திரைக்கதையாசிரியருக்கான விருது கலைஞர் மு.கருணாநிதி (ராமானுஜர் தொடருக்காக),  சிறந்த உரையாடல் ஆசிரியருக்கான விருது கலைஞர் மு.கருணாநிதி (ராமானுஜர் தொடருக்காக), சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது திரு.சீனுவாசன் (பிரியமானவள் தொடருக்காக);

சிறந்த படத் தொகுப்பாளருக்கான விருது திரு.M.S.தியாகராஜன் (கல்யாண பரிசு தொடருக்காக),  சிறந்த பின்னணி இசையமைப்பாளருக்கான விருது திரு.ஹரி (கல்யாண பரிசு தொடருக்காக),  சிறந்த பின்னணிக் குரல் கொடுப்பவருக்கான விருது (ஆண்) திரு.அச்சமில்லை கோபி (பிரியமானவள் தொடருக்காக),  சிறந்த பின்னணிக் குரல் கொடுப்பவருக்கான விருது (பெண்) திருமதி சக்தி (பிரியமானவள் தொடருக்காக) ஆகிய விருதாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.      

2017-ஆம் ஆண்டுக்கான சின்னத்திரை விருது பெறும் விருதாளர்கள் பட்டியல்

2017-ஆம் ஆண்டுக்கான சிறந்த நெடுந்தொடருக்கான விருது – முதல் பரிசு நந்தினி, சிறந்த நெடுந்தொடருக்கான விருது – இரண்டாம் பரிசு தாய் வீடு, 2017-ஆம் ஆண்டின் சிறந்த சாதனையாளருக்கான விருது திரு.கே.எஸ்.ஜி.வெங்கடேஷ், ஆண்டின் வாழ்நாள்  சாதனையாளருக்கான விருது திருமதி.P.R.வரலட்சுமி, சிறந்த  கதாநாயகனுக்கான  விருது திரு.கிருஷ்ணா  (தெய்வமகள் தொடருக்காக);

சிறந்த கதாநாயகிக்கான விருது திருமதி சங்கவி (தாய் வீடு தொடருக்காக),  சிறந்த குணச்சித்திர நடிகருக்கான விருது திரு.விச்சுவிசுவநாத் (எ) C.விஸ்வநாதன் (நந்தினி தொடருக்காக),  சிறந்த குணச்சித்திர நடிகை திருமதி நிரோஷா (தாமரை தொடருக்காக),  சிறந்த வில்லன் நடிகருக்கான விருது திரு.விஜயகுமார் (நந்தினி தொடருக்காக);

சிறந்த வில்லி நடிகைக்கான விருது திருமதி சாய்லதா (தாமரை தொடருக்காக),  சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருது நரேன் பொன்னுசாமி (தாய் வீடு தொடருக்காக),  சிறந்த இயக்குநருக்கான விருது திரு.R.ராஜ் கபூர் (நந்தினி தொடருக்காக), சிறந்த கதையாசிரியருக்கான விருது கலைஞர் மு.கருணாநிதி (தென் பாண்டி சிங்கம் தொடருக்காக), சிறந்த திரைக் கதையாசிரியருக்கான விருது திரு.இந்திரா சௌந்தர்ராஜன் (கங்கா தொடருக்காக), சிறந்த உரையாடல் ஆசிரியருக்கான விருது திரு.C.பாலமுருகன் (தாய் வீடு தொடருக்காக);

சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது திரு.S.பார்த்திபன் சுப்ரமணியன் (தாய்வீடு தொடருக்காக),  சிறந்த படத் தொகுப்பாளருக்கான விருது திரு.சந்துரு (தெய்வமகள் தொடருக்காக),  சிறந்த பின்னணி இசையமைப்பாளருக்கான விருது திரு.ஜே.வி. (யாரடி நீ மோகினி தொடருக்காக),  சிறந்த பின்னணிக் குரல் கொடுப்பவருக்கான விருது (ஆண்) திரு.பிரதீப் (தாய் வீடு தொடருக்காக), சிறந்த பின்னணிக் குரல் கொடுப்பவருக்கான விருது (பெண்) திருமதி மேகலா (தாய் வீடு தொடருக்காக) ஆகிய விருதாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.      

2018-ஆம் ஆண்டுக்கான சின்னத்திரை விருது பெறும் விருதாளர்கள் பட்டியல்

2018-ஆம் ஆண்டுக்கான சிறந்த நெடுந்தொடருக்கான விருது – முதல் பரிசு பூவே பூச்சூடவா, சிறந்த நெடுந்தொடருக்கான விருது –  இரண்டாம் பரிசு சுப்பிரமணியபுரம், 2018-ஆம் ஆண்டின் சிறந்த சாதனையாளருக்கான விருது திரு.அழகு, ஆண்டின் வாழ்நாள்  சாதனையாளருக்கான விருது திருமதி கே.ஆர்.விஜயா, சிறந்த  கதாநாயகனுக்கான விருது தலைவாசல் விஜய் (அழகு தொடருக்காக), சிறந்த கதாநாயகிக்கான விருது திருமதி ரேவதி (அழகு தொடருக்காக), சிறந்த குணச்சித்திர நடிகருக்கான விருது திரு.கதிர் (செம்பருத்தி தொடருக்காக);

சிறந்த குணச்சித்திர நடிகைக்கான விருது திருமதி கௌசல்யா செந்தாமரை (பூவே பூச்சூடவா தொடருக்காக),  சிறந்த வில்லன் நடிகருக்கான விருது திரு.பரத் (யாரடி நீ மோகினி தொடருக்காக), சிறந்த வில்லி நடிகைக்கான விருது திருமதி யுவராணி (பூவே பூச்சூடவா தொடருக்காக), சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருது அதித்ரி குருவாயூரப்பன் (நந்தினி தொடருக்காக), சிறந்த இயக்குநருக்கான விருது திரு.நக்கீரன் (மின்னலே தொடருக்காக);

சிறந்த கதையாசிரியருக்கான விருது திரு. தமிழரசன் (செம்பருத்தி தொடருக்காக), சிறந்த திரைக்கதையாசிரியருக்கான விருது திரு.குமரேசன் (கல்யாணபரிசு தொடருக்காக),  சிறந்த உரையாடல் ஆசிரியருக்கான விருது திரு.பத்ரி (எ) பத்ரிநாராயணன் (நந்தினி தொடருக்காக),  சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது திரு.U.K.செந்தில் குமார் (நந்தினி தொடருக்காக),  சிறந்த படத் தொகுப்பாளருக்கான விருது திரு.S.அருள் (பூவே பூச்சூடவா தொடருக்காக), 

சிறந்த பின்னணி இசையமைப்பாளருக்கான விருது திரு.M.ரித்தீஷ் (சுப்பிரமணியபுரம் தொடருக்காக), சிறந்த பின்னணிக் குரல் கொடுப்பவருக்கான விருது (ஆண்) திரு.பெருமாள் (தாமரை தொடருக்காக),  சிறந்த பின்னணிக் குரல் கொடுப்பவருக்கான விருது (பெண்) திருமதி D.சுமதி (சுப்பிரமணியபுரம் தொடருக்காக) ஆகிய விருதாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.      

2019-ஆம் ஆண்டுக்கான சின்னத்திரை விருது பெறும் விருதாளர்கள் பட்டியல்

2019-ஆம் ஆண்டுக்கான சிறந்த நெடுந்தொடருக்கான விருது – முதல் பரிசு செம்பருத்தி, சிறந்த நெடுந்தொடருக்கான விருது – இரண்டாம் பரிசு பாண்டவர் இல்லம், 2019-ஆம் ஆண்டின் சிறந்த சாதனையாளருக்கான விருது  திரு.ராஜேந்திர பிரசாத், ஆண்டின் வாழ்நாள் சாதனையாளருக்கான விருது திரு.காரைக்குடி நாராயணன், சிறந்த  கதாநாயகனுக்கான விருது திரு.வ.சஞ்சிவ் (கண்மணி தொடருக்காக), சிறந்த கதாநாயகிக்கான விருது திருமதி ரேஷ்மா (பூவே பூச்சூடவா தொடருக்காக);

சிறந்த குணச்சித்திர நடிகருக்கான விருது திரு.செந்தில் நாதன் (நாயகி தொடருக்காக),  சிறந்த குணச்சித்திர நடிகை திருமதி.பூர்ணிமா பாக்யராஜ் (கண்மணி தொடருக்காக),  சிறந்த வில்லன் நடிகருக்கான விருது திரு.பிரகாஷ்ராஜன் (மின்னலே தொடருக்காக), சிறந்த வில்லி நடிகை திருமதி சுதா சந்திரன்  (லட்சுமி ஸ்டோர்ஸ் தொடருக்காக),  சிறந்த குழந்தை நட்சத்திரம் ஆரண்யவேந்தன் (கண்மணி தொடருக்காக), சிறந்த இயக்குநருக்கான விருது திரு.சதாசிவம் பெருமாள் (கண்மணி தொடருக்காக), சிறந்த கதையாசிரியருக்கான விருது திரு.அசோகன் (யாரடி நீ மோகினி தொடருக்காக);

சிறந்த திரைக்கதையாசிரியருக்கான விருது திரு.ராஜ் பிரபு (லட்சுமி ஸ்டோர்ஸ் தொடருக்காக),  சிறந்த உரையாடல் ஆசிரியருக்கான விருது திரு.கார்த்திக் (இரட்டை ரோஜா தொடருக்காக), சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது திரு.மா.போ.ஆனந்த் (யாரடி நீ மோகினி தொடருக்காக),  சிறந்த படத் தொகுப்பாளருக்கான விருது திரு.N.B.ஸ்ரீ காந்த் (லட்சுமி ஸ்டோர்ஸ் தொடருக்காக);

சிறந்த பின்னணி இசையமைப்பாளருக்கான விருது திரு.C.S.ஜெய்கிஷன்  (பாண்டவர் இல்லம் தொடருக்காக), சிறந்த பின்னணிக் குரல் கொடுப்பவருக்கான விருது (ஆண்) திரு.வினோத் (மின்னலே தொடருக்காக), சிறந்த பின்னணிக் குரல் கொடுப்பவருக்கான விருது (பெண்) திருமதி ஜெயகீதா (செம்பருத்தி தொடருக்காக) ஆகிய விருதாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.      

2020-ஆம் ஆண்டுக்கான சின்னத்திரை விருது பெறும் விருதாளர்கள் பட்டியல்

2020-ஆம் ஆண்டுக்கான சிறந்த நெடுந்தொடருக்கான விருது – முதல் பரிசு ராசாத்தி, சிறந்த நெடுந்தொடருக்கான விருது – இரண்டாம் பரிசு பாரதி கண்ணம்மா, 2020-ஆம் ஆண்டுக்கான சிறந்த  சாதனையாளருக்கான விருது சுமதி ஸ்ரீ, 2020-ஆம் ஆண்டுக்கான வாழ்நாள் சாதனையாளருக்கான விருது திரு.கோபி பீம்சிங்,  சிறந்த  கதாநாயகனுக்கான விருது திரு.ஜெய் ஆகாஷ்  (நீ தானே என் பொன் வசந்தம் தொடருக்காக);

சிறந்த கதாநாயகிக்கான விருது திருமதி சபானா ஷாஜகான் (செம்பருத்தி தொடருக்காக), சிறந்த குணச்சித்திர நடிகருக்கான விருது திரு.சாய்ராம் (நீ தானே என் பொன் வசந்தம் தொடருக்காக),  சிறந்த குணச்சித்திர நடிகைக்கான விருது திருமதி சோனியா (நீ தானே என் பொன் வசந்தம் தொடருக்காக), சிறந்த வில்லன் நடிகருக்கான விருது திரு.வெற்றி (நீ தானே என் பொன் வசந்தம் தொடருக்காக),  சிறந்த வில்லி நடிகைக்கான விருது திருமதி சில்பா மேரி தெரேசா (சித்தி-2 தொடருக்காக);

சிறந்த குழந்தை நட்சத்திரம் மாஸ்டர் சஞ்சய் (செம்பருத்தி தொடருக்காக), சிறந்த இயக்குநருக்கான விருது திரு.ரத்தினம் வாசுதேவன் (பூவே பூச்சூடவா தொடருக்காக), சிறந்த கதையாசிரியருக்கான விருது திரு.D.அழகு சந்திரன் (பாரதி கண்ணம்மா தொடருக்காக),  சிறந்த திரைக்கதையாசிரியருக்கான விருது திரு.சற்குணம் புங்கராஜ் (பூவே பூச்சூடவா தொடருக்காக),  சிறந்த உரையாடல் ஆசிரியருக்கான விருது திரு.பா.ராகவன் (சித்தி-2 தொடருக்காக);

சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது திரு.R.சரவணன் (பாரதி கண்ணம்மா தொடருக்காக), சிறந்த படத் தொகுப்பாளருக்கான விருது திரு.முரளி கிருஷ்ணன்  (பாண்டவர் இல்லம் தொடருக்காக),  சிறந்த பின்னணி இசையமைப்பாளருக்கான விருது திரு.கிளமண்ட் (சித்தி-2 மற்றும் ராசாத்தி தொடருக்காக),  சிறந்த பின்னணிக் குரல் கொடுப்பவருக்கான விருது (ஆண்) திரு.விக்னேஷ் (பூவே பூச்சூடவா தொடருக்காக), சிறந்த பின்னணிக் குரல் கொடுப்பவருக்கான விருது (பெண்) திருமதி ஸ்ரீதேவி (பூவே பூச்சூடவா தொடருக்காக) ஆகிய விருதாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.      

2021-ஆம் ஆண்டுக்கான சின்னத்திரை விருது பெறும் விருதாளர்கள் பட்டியல்

2021-ஆம் ஆண்டுக்கான சிறந்த நெடுந்தொடருக்கான விருது – முதல் பரிசு சுந்தரி, சிறந்த நெடுந்தொடருக்கான விருது – இரண்டாம் பரிசு ஒரு ஊர்ல இரண்டு ராஜகுமாரி, 2021-ஆம் ஆண்டுக்கான சிறந்த சாதனையாளருக்கான விருது சோழா பொன்னுரங்கம், ஆண்டின் வாழ்நாள் சாதனையாளருக்கான விருது திருமதி லதா  சேதுபதி,  சிறந்த  கதாநாயகனுக்கான விருது திரு.கார்த்திக் ராஜ் (செம்பருத்தி தொடருக்காக);

சிறந்த கதாநாயகிக்கான விருது திருமதி கெபரல்லா  செல்லஸ் (சுந்தரி தொடருக்காக),  சிறந்த குணச்சித்திர நடிகருக்கான விருது திரு.சிவாஜி மனோகர் (சித்தி-2 தொடருக்காக), சிறந்த குணச்சித்திர நடிகைக்கான விருது திருமதி உமா பத்மநாபன் (சித்தி-2 தொடருக்காக),  சிறந்த வில்லன் நடிகருக்கான விருது திரு.பொள்ளாச்சி பாபு (எ) செந்தில்குமார் (தாலாட்டு தொடருக்காக); 

சிறந்த வில்லி நடிகைக்கான விருது திருமதி கே.தாரணி (தாலாட்டு தொடருக்காக), சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருது எஸ்.லிதன்யா (சுந்தரி தொடருக்காக),  சிறந்த இயக்குநருக்கான விருது திரு.பி.அழகர் சாமி (சுந்தரி தொடருக்காக),  சிறந்த கதையாசிரியருக்கான விருது திரு.உதய சங்கர் (வானத்தைப் போல தொடருக்காக), சிறந்த திரைக்கதையாசிரியருக்கான விருது ஜி.ராதாகிருஷ்ணன் (சுந்தரி தொடருக்காக);

சிறந்த உரையாடல் ஆசிரியருக்கான விருது திரு.கார்த்திக் யுவராஜ்  (அபியும் நானும்/ பூவே உனக்காக தொடருக்காக),  சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது திரு.சலீம் பிலால் (சித்திரம் பேசுதடி தொடருக்காக),  சிறந்த படத் தொகுப்பாளருக்கான விருது திரு.கேசவன் (சுந்தரி தொடருக்காக), சிறந்த பின்னணி இசையமைப்பாளருக்கான விருது திரு.பி.ஜி.ராகேஷ் (ராஜா ராணி -2 தொடருக்காக), சிறந்த பின்னணிக் குரல் கொடுப்பவருக்கான விருது (ஆண்) திரு.மகா ஆதித்யா (பூவே உனக்காக தொடருக்காக),  சிறந்த பின்னணிக் குரல் கொடுப்பவருக்கான விருது (பெண்) திருமதி லக்சனா (பூவே உனக்காக தொடருக்காக) ஆகிய விருதாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.      

2022-ஆம் ஆண்டுக்கான சின்னத்திரை விருது பெறும் விருதாளர்கள் பட்டியல்

2022-ஆம் ஆண்டுக்கான சிறந்த நெடுந்தொடருக்கான விருது  முதல் பரிசு எதிர்நீச்சல், சிறந்த நெடுந்தொடருக்கான விருது இரண்டாம் பரிசு கண்ணெதிரே தோன்றினாள், 2022-ஆம் ஆண்டுக்கான சிறந்த சாதனையாளருக்கான விருது திருமதி சீதா, ஆண்டின் வாழ்நாள் சாதனையாளருக்கான விருது பெருமாள் நெர், சிறந்த  கதாநாயகனுக்கான விருது திரு.சஞ்சீவ் (கயல் தொடருக்காக),  சிறந்த கதாநாயகிக்கான விருது சைத்ரா (கயல் தொடருக்காக), சிறந்த குணச்சித்திர நடிகருக்கான விருது திரு.ராஜேஷ் (கார்த்திகை தீபம் தொடருக்காக);

சிறந்த குணச்சித்திர நடிகைக்கான விருது திருமதி கனிகா (எதிர்நீச்சல் தொடருக்காக),  சிறந்த வில்லன் நடிகருக்கான விருது திரு.ஜி.மாரிமுத்து (எதிர்நீச்சல் தொடருக்காக), சிறந்த வில்லி நடிகைக்கான விருது திருமதி கவிதா (கண்ணெதிரே தோன்றினாள் தொடருக்காக), சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருது R.M. மேக்னா (மாரி தொடருக்காக);

சிறந்த இயக்குநருக்கான விருது திரு.ஆர்.கார்த்திகேயன் (கண்ணெதிரே தோன்றினாள் தொடருக்காக),  சிறந்த கதையாசிரியருக்கான விருது திரு.கவிதா பாரதி (சித்திரம் பேசுதடி தொடருக்காக), சிறந்த திரைக்கதையாசிரியருக்கான விருது திருமதி வே.பத்மாவதி (கண்ணெதிரே தோன்றினாள் தொடருக்காக),  சிறந்த உரையாடல் ஆசிரியருக்கான விருது திருமதி A.ஸ்ரீவித்யா (எதிர்நீச்சல் தொடருக்காக);

சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது திரு.கேசவன் (மாரி தொடருக்காக), சிறந்த படத்தொகுப்பாளருக்கான விருது திரு.D.பிரபாகரன் (கண்ணெதிரே தோன்றினாள் தொடருக்காக), சிறந்த பின்னணி இசையமைப்பாளருக்கான விருது திரு.R.ஜோ சுகந்த் (திருமகள் தொடருக்காக), சிறந்த பின்னணிக் குரல் கொடுப்பவருக்கான விருது (ஆண்) திரு.மகாராஜா (பிரியமான தோழி தொடருக்காக), சிறந்த பின்னணிக் குரல் கொடுப்பவருக்கான விருது (பெண்) திருமதி R.ஐஸ்வர்யா (பொன்னி C/O ராணி, கார்த்திகை தீபம் தொடர்களுக்காக) ஆகிய விருதாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.      

2015-2016-ஆம் கல்வியாண்டிற்கான தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர் விருதுகள்

சிறந்த இயக்குநருக்கான விருது திரு.P.ராம் குமார் (ஷீப்ஸ் வேனிஸ்டு இன் தி ஹேர்டு), சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது திரு.R.உதயகுமார்  (ஃபேட் ஆஃப் கலர்ஸ்), சிறந்த ஒலிப்பதிவாளருக்கான விருது  திரு.ராகவ் ரமேஷ்  (தி ஸ்வார்ம்), சிறந்த படத்தொகுப்பாளருக்கான விருது திரு.A.கவின் ராஜா (தி லாஸ்ட் லீஃப்), சிறந்த படம் பதனிடுபவருக்கான விருது திரு.அஜித் வேதி பாஸ்கரன் (தி குல்மாஸ் ஸ்டோரி) ஆகிய விருதாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.      

2016-2017 ஆம் கல்வியாண்டிற்கான தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர் விருதுகள்

சிறந்த இயக்குநருக்கான விருது திரு.S.கண்ணன் (நீயும் பொம்மை நானும் பொம்மை), சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது திரு.C.ராம்குமார் (அரமகள்), சிறந்த ஒலிப்பதிவாளருக்கான விருது திரு.ராஜு (மனிதி), சிறந்த படத்தொகுப்பாளருக்கான விருது திரு.J.ஹேமந்த்குமார் (இமயா), சிறந்த படம் பதனிடுபவருக்கான விருது அஸ்வினி மஹாலட்சுமி (கோடு) ஆகிய விருதாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.      

2017-2018 ஆம் கல்வியாண்டிற்கான தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர் விருதுகள்

சிறந்த இயக்குநருக்கான விருது திரு.A.K.கிராந்தி (அதர்மா), சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது திரு.பிரவீன் (நிருலா), சிறந்த ஒலிப்பதிவாளருக்கான விருது திரு.அவிக்கல் ஸ்ரீவத்சவா (மழையுதிர்க்காலம்), சிறந்த படத்தொகுப்பாளருக்கான விருது திரு.அஸ்வின் நாயர்  (இறைவனை தந்த இறைவியே), சிறந்த படம் பதனிடுபவருக்கான விருது திரு.V.விஷ்ணு (மழையுதிர்க்காலம்) ஆகிய விருதாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.      

2019-2020 ஆம் கல்வியாண்டிற்கான தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர் விருதுகள்

சிறந்த இயக்குநருக்கான விருது திரு.எஸ்.வருண் சுப்பையா (கரை), சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது திரு.பிரகதீஷ் ஜனனு  (ஏ மெசேஜ் ஃப்ரம் த பியூச்சர்), சிறந்த ஒலிப்பதிவாளருக்கான விருது திரு.எஸ்.ஸ்ரீகாந்த் (ரூஜ்), சிறந்த படத்தொகுப்பாளருக்கான விருது திரு.சஹாஹிப் அகமது ஷாகிர்  (ஜாகிர்ஸ் ரெசிபி), சிறந்த படம் பதனிடுபவருக்கான விருது திரு.எஸ்.ரகு (ஆயில்) ஆகிய விருதாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.      

2020-2021 ஆம் கல்வியாண்டிற்கான தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர்.  திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர் விருதுகள்

சிறந்த இயக்குநருக்கான விருது திரு.எஸ்.கருணாகரன் (ஒயின்ஷாப்), சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது திரு.எம்.சி.தருண் குமார் (அழகி), சிறந்த ஒலிப்பதிவாளருக்கான விருது திரு.வி.அஜித்குமார் (ஆடுபுலி ஆட்டம்), சிறந்த படத்தொகுப்பாளருக்கான விருது திரு.எஸ்.ரோகித் குமார் (மாயா), சிறந்த படம் பதனிடுபவருக்கான விருது திரு.ராமசுப்ரமணி (சிறை) ஆகிய விருதாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.      

2021-2022-ஆம் கல்வியாண்டிற்கான தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர்.  திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர் விருதுகள்

சிறந்த இயக்குநருக்கான விருது திரு.ரா.கிரிதரன் (மெட்ராஸ்), சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது திரு.அ.நித்தின் (மலர்), சிறந்த ஒலிப்பதிவாளருக்கான விருது திரு.V.A.செபாஸ்டியன் (ஐசா பாரடைஸ்), சிறந்த படத்தொகுப்பாளருக்கான விருது திரு.பி.தருண் (அயல்), சிறந்த படம் பதனிடுபவருக்கான விருது திரு.வெ.ஸ்ரீதர் (அண்டெட் கார்ப்செஸ்) ஆகிய விருதாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.      

இன்று, தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற தமிழ்நாடு அரசின் திரைப்பட விருது மற்றும் சின்னத்திரை விருதுகள் வழங்கும் விழாவில் சிறந்த திரைப்படங்கள், சிறந்த நடிகர், சிறந்த நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள், சின்னத்திரை விருதுகள், சிறந்த குறும்படங்களுக்கு மாணவர் விருதுகளை வழங்கினார்.

Also Read: “எடப்பாடி பழனிசாமியின் வாயை, நம் முதலமைச்சர் இன்றைக்குத் தைத்துவிட்டார்!” : அமைச்சர் ரகுபதி!