Tamilnadu
11.60 இலட்சம் மக்களுக்காக... 7 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் தொடக்கம்! : திராவிட மாடலின் மற்றொரு சாதனை!
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் மொத்தம் ரூ.3,511.13 கோடி செலவிலான 183 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, ரூ.1267.62 கோடி மதிப்பீட்டிலான 10 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, சென்னை குடிநீர் வாரிய அலுவலகப் பயன்பாட்டிற்காக ரூ.47 இலட்சம் மதிப்பிலான 5 வாகனங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (5.2.2026) தலைமைச் செயலகத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் 2378.30 கோடி ரூபாய் செலவில் 9 முடிவுற்ற பணிகளையும், சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் 635.30 கோடி ரூபாய் செலவில் 22 முடிவுற்ற பணிகளையும்;
நகராட்சி நிருவாக இயக்குநரகத்தின் சார்பில் 237.04 கோடி ரூபாய் செலவில் 62 முடிவுற்ற பணிகளையும், பேரூராட்சிகள் இயக்குநரகத்தின் சார்பில் 174.45 கோடி ரூபாய் செலவில் 27 முடிவுற்ற பணிகளையும், பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் 86.04 கோடி ரூபாய் செலவில் முடிவுற்ற 63 பணிகளையும், திறந்து வைத்தார்.
மேலும், பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் 335.62 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 8 புதிய திட்டப் பணிகளுக்கும், சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் 932 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 2 புதிய திட்டப் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டி, சென்னை குடிநீர் வாரியத்தின் அலுவலகப் பயன்பாட்டிற்காக 47 இலட்சம் ரூபாய் மதிப்பிலான 5 வாகனங்களை அலுவலர்களுக்கு வழங்கினார்.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் முடிவுற்ற கூட்டுக் குடிநீர் திட்டங்களை திறந்து வைத்தல்
நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ், இராசிபுரம் நகராட்சி 8 பேரூராட்சிகள் மற்றும் இராசிபுரம், வெண்ணந்தூர், நாமகிரிப்பேட்டை, புதுச்சத்திரம், எலச்சிப்பாளையம், மல்லசமுத்திரம், பரமத்தி ஆகிய 7 ஒன்றியங்களுக்குட்பட்ட 1,070 ஊரகக் குடியிருப்புகள் மற்றும் 11 ஊராட்சிகளுக்கு 1,138.41 கோடி ரூபாய் செலவிலான 2 கூட்டுக் குடிநீர் திட்டங்கள்.
தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம், கயத்தார், கோவில்பட்டி, புதூர் மற்றும் விளாத்திகுளம் ஒன்றியங்களை சார்ந்த 363 ஊரகக் குடியிருப்புகளுக்கு 515.72 கோடி ரூபாய் செலவிலான கூட்டு குடிநீர் திட்டம், திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி மற்றும் ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள செருக்கனூர் மற்றும் 114 ஊரகக் குடியிருப்புகளுக்கு 44.58 கோடி ரூபாய் செலவிலான கூட்டுக் குடிநீர் திட்டம், செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியத்தைச் சார்ந்த கோவளம் மற்றும் 10 ஊரகக் குடியிருப்புகளுக்கு 13.62 கோடி ரூபாய் செலவிலான கூட்டுக் குடிநீர் திட்டம்.
கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை ஒன்றியத்தை சார்ந்த கடுக்கரை, காட்டுப்புதூர் மற்றும் திடல் ஊராட்சிகளில் உள்ள 24 ஊரகக் குடியிருப்புகளுக்கு 7.06 கோடி ரூபாய் செலவிலான கூட்டுக் குடிநீர் திட்டம், திருப்பத்தூர் மாவட்டம், மாதனூர் ஒன்றியத்தை சார்ந்த வடசேரி மற்றும் 17 குடியிருப்புகளுக்கு 4.95 கோடி ரூபாய் செலவிலான கூட்டுக் குடிநீர் திட்டம்;
என மொத்தம் 1,724 கோடியே 34 இலட்சம் ரூபாய் செலவில் 11 இலட்சத்து 60 ஆயிரம் மக்கள் பயன்பெறும் வகையிலான 7 கூட்டுக் குடிநீர் திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
முடிவுற்ற பாதாள சாக்கடைத் திட்டங்களை தொடங்கி வைத்தல்
மேலும், கோயம்புத்தூர் மாநகராட்சி குறிச்சி மற்றும் குனியமுத்தூர் பகுதிகளுக்கு 591.14 கோடி ரூபாய் செலவிலான பாதாள சாக்கடை திட்டம்
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நகராட்சிக்கு 62.82 கோடி ரூபாய் செலவிலான பாதாள சாக்கடை திட்டம்
என மொத்தம் 653 கோடியே 96 இலட்சம் ரூபாய் செலவில்
4 இலட்சத்து 49 ஆயிரம் மக்கள் பயன்பெறும் வகையிலான 2 பாதாள சாக்கடைத் திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்தல்
குடிநீர் வழங்கல் திட்டப்பணிகள்
வளசரவாக்கம், சோழிங்கநல்லூர் (செம்மஞ்சேரி மற்றும் நீலாங்கரை) ஆகிய பகுதிகளில் 74 கோடியே 74 இலட்சம் ரூபாய் செலவிலான குடிநீர் வழங்கல் திட்டப்பணிகள்
பாதாள சாக்கடை திட்டப்பணிகள்
சோழிங்கநல்லூர் மண்டலத்தில் 68 கோடியே 70 இலட்சம் ரூபாய் செலவில் சோழிங்கநல்லூரில் நாளொன்றுக்கு 36 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு திறன் கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்.
அண்ணாநகர் மண்டலம், வில்லிவாக்கத்தில் 17 கோடியே 97 இலட்சம் ரூபாய் செலவில் நாளொன்றுக்கு 5 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு திறன் கொண்ட புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்.
தண்டையார்பேட்டை மண்டலம், கொடுங்கையூரில் 45 கோடியே 7 இலட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட நாளொன்றுக்கு 110 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு திறன் கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்.
மணலி, ஆலந்தூர் (முகலிவாக்கம்), பெருங்குடி (பள்ளிக்கரணை), மற்றும் சோழிங்கநல்லூர் (உத்தண்டி, ஒக்கியம்-துரைப்பாக்கம்) ஆகிய மண்டலங்களில் 188 கோடியே 7 இலட்சம் ரூபாய் செலவில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள்.
மாதவரம், தண்டையார்பேட்டை, அம்பத்தூர் மற்றும் அண்ணாநகர் மண்டலங்களில் உள்ள நீர் நிலைகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்கும் பொருட்டு 106 கோடி 42 இலட்சம் செலவில், பாடி மேம்பாலத்திலிருந்து கொடுங்கையூர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் வரை மாற்றியமைக்கப்பட்ட பிரதான கழிவுநீர் உந்து குழாய்கள்.
தண்டையார்பேட்டை, தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையாறு மற்றும் ஆலந்தூர் மண்டலங்களில் 134 கோடி 33 இலட்சம் செலவில், கழிவுநீர் உந்து நிலையங்கள் மாற்றியமைக்கப்பட்ட பிரதான கழிவுநீர் உந்து குழாய்கள் உள்ளிட்ட கழிவுநீர் கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள்.
என மொத்தம் 635 கோடியே 31 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 22 முடிவுற்ற திட்டப் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
நகராட்சி நிருவாகத் துறை சார்பில் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தல்
தஞ்சாவூர், ஒசூர், நாமக்கல் ஆகிய மாநகராட்சிகளில், ரூ.15.02 கோடி செலவில், புதிய வகுப்பறைகள், ஆய்வு கூடங்கள், கழிவறைகள், சுற்றுசுவர் அமைக்கும் பணிகள், நுண்ணுயிர் செயலாக்க மையங்கள், அறிவியல் பூங்கா, புதிய வணிக வளாகம் உள்ளிட்ட பணிகள்
ரூ.222.02 கோடி செலவில், ஆம்பூர், கம்பம், குடியாத்தம், காங்கேயம், பவானி, வால்பாறை, எடப்பாடி, பண்ருட்டி, பல்லடம், மேட்டுபாளையம், சீர்காழி, ராணிப்பேட்டை, திருச்செந்தூர், விழுப்புரம், வாணியம்பாடி, இராசிபுரம், வானூர், அரக்கோணம், மன்னார்குடி, அரவக்குறிச்சி, குமாரபாளையம், போடிநாயக்கனூர்;
தருமபுரி ஆகிய நகராட்சிகளில் பூங்கா, குடிநீர் அபிவிருத்தி பணிகள், வணிக வளாகம் அமைத்தல், புதிய பேருந்து நிலையங்கள், பேருந்து நிலையங்களை புதுப்பித்தல், வார சந்தைகள், அறிவுசார் மையங்கள், தினசரி நாள் அங்காடி, புதிய வகுப்பறைகள், கூடுதல் வகுப்பறைகள், கழிப்பறைகள், இயற்கை உர ஆலைகள் அமைக்கும் பணிகள்.
என மொத்தம் 237 கோடியே 04 இலட்சம் ரூபாய் செலவில் 62 முடிவுற்ற பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.
பேரூராட்சிகளின் இயக்குநரகத்தில் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தல்
கேத்தி, ஏரல், திருவைகுண்டம், உத்திரமேரூர், கிருஷ்ணராயபுரம், சூலூர், திருமயம், பாலக்கோடு, அரூர், ஸ்ரீவில்லிபுத்தூர், அந்தியூர், கோபி, பவானிசாகர், மொடக்குறிச்சி, பெருந்துறை ஆகிய பேரூராட்சிகளில் உள்ள ஆரம்ப சுகாதார துணை நிலையங்கள், புதிய அலுவலகக் கட்டடங்கள், புதிய பேருந்து நிலையங்கள், குடிநீர் அபிவிருத்தி பணிகள், கூடுதல் வகுப்பறை கட்டடங்கள், பொது சுகாதார வளாகங்கள், புதிய சமுதாய கூடங்கள்;
என மொத்தம் 174.45 கோடி ரூபாய் செலவில் 27 முடிவுற்ற திட்டப்பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.
பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தல்
அண்ணாநகர் மண்டலம், சூளைமேடு, விருகம்பாக்கம் கால்வாயின் குறுக்கே இரயில்வே காலனி 3-வது தெருவையும், மாதா கோயில் தெருவையும் இணைக்கும் வகையில் 1.60 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய பாலம், மாதவரம் மண்டலம், விநாயகபுரத்தில் 1.47 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையம், எம்.ஆர்.எச். சாலையில் 2.27 கோடி ரூபாய் செலவில் விரிவாக்கம் செய்யப்பட்ட மாதவரம் பேருந்து நிலையம், தேனாம்பேட்டை மண்டலம், காதர் நவாஸ் கான் சாலையோரத்தில் 19.81 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள பாதசாரிகளுக்கான நடைபாதை வளாகம்.
மணலி மண்டலம், புது நாப்பாளையம், பாடசாலை தெரு, அம்பத்தூர் மண்டலம், சாரதா நகர், வாசுகி தெரு, மாதவரம் மண்டலம், மாதவரம் பால் பண்ணை 5வது யூனிட், தண்டையார்பேட்டை மண்டலம், காமராஜ் சாலை, கண்ணதாசன் நகர், சின்னாண்டி மடம், அண்ணாசாலை, இராயபுரம் மண்டலம், ஓ.எஸ்.எச். சாலை, கோடம்பாக்கம் மண்டலம், தியாகராயநகர் புதிய போக் சாலை, பெருங்குடி மண்டலம், நாராயணபுரம் ஆகிய இடங்களில் உள்ள தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலை பள்ளி என 12 பள்ளிகளில் ரூ.19.56 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 12 பள்ளிக் கட்டடங்கள்.
மணலி, மாதவரம், அம்பத்தூர் ஆகிய மண்டலங்களில் ரூ.2.64 கோடி செலவில் புதிய 3 வார்டு அலுவலகங்கள், மணலி மண்டலம், மணலி புதுநகர், 35வது தெருவில் 1.20 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம். மாதவரம் மண்டலம், திருவீதியம்மன் கோயில் தெரு, சீதாபதி பிரதான தெரு மற்றும் திருவள்ளுவர் சாலை, வளசரவாக்கம் மண்டலம், சின்னப் போரூர்-பஜனை கோயில் தெரு ஆகிய இடங்களில் 1.57 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 4 குழந்தைகள் மையக் கட்டடங்கள்.
மாதவரம் மண்டலம், சி.எம்.டி.ஏ. டிரக் டெர்மினல் வளாகத்தில்
1.82 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள நாய் இனக்கட்டுப்பாட்டு மையம்.
மணலி, தண்டையார்பேட்டை, இராயபுரம், அம்பத்தூர் மண்டலங்களில் ரூ.6.29 கோடி செலவில் 10 புதிய மகளிர் உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் 2 புதிய நவீன உடற்பயிற்சிக் கூடங்கள்.
அம்பத்தூர் மற்றும் பெருங்குடி மண்டலங்களில் ரூ.1.37 கோடி செலவில் 5 புதிய பூங்காக்கள், ரூ. 13.43 கோடி செலவில், அம்பத்தூர் மற்றும் பெருங்குடி மண்டலங்களில் 9 புதிய குளங்கள். மேலும், ரூ.2.64 கோடி செலவில் தண்டையார்பேட்டை மற்றும் பெருங்குடி மண்டலத்தில் 3 விளையாட்டு திடல்கள், ரூ. 1.24 கோடி செலவில், அம்பத்தூர் மற்றும் தண்டையார்பேட்டை மண்டலங்களில் இறகுப்பந்து மற்றும் டென்னிஸ் மைதானங்கள், ரூ.9.13 கோடி ரூபாய் செலவில், மணலி, அம்பத்தூர், வளசரவாக்கம், பெருங்குடி ஆகிய மண்டலங்களில் 6 எரிவாயு தகன மேடைகள்.
என மொத்தம் 86.04 கோடி ரூபாய் செலவில் முடிவுற்ற
63 திட்டப்பணிகளை மக்களின் பயன்பாட்டிற்காக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.
பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல்
சர்தார் பட்டேல் சாலை-வேளச்சேரி பிரதான சாலை சந்திப்பிலிருந்து குருநானக் கல்லூரி சந்திப்பு வரை 200 அடி சாலையில் 310 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய மேம்பாலம், மணலி மண்டலம், செட்டிமேடு பகுதியில் 6.75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உள்ளரங்க கபடி மைதானம் மற்றும் திறந்தவெளி கால்பந்து மைதானம், மாதவரம் மண்டலம், சி.எம்.டி.ஏ. டிரக் டெர்மினல் பகுதியில் 4.63 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய விளையாட்டு வளாகம், மாதவரம் மண்டலம், திருவள்ளுவர் தெரு, புத்தகரத்தில் 4.70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள முதல்வர் படைப்பகங்கள்.
ரூ.9.54 கோடி மதிப்பீட்டில், மாதவரம், தண்டையார்பேட்டை, கோடம்பாக்கம் மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலங்களில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான பிரத்யேக வசதிகளுடன் கூடிய 2 பூங்காக்கள் என 4 பூங்கா மேம்பாட்டு பணிகள்
என மொத்தம் 335.62 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 8 புதிய திட்டப்பணிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.
சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் புதிய திட்டப் பணிக்கு அடிக்கல் நாட்டுதல்.
குடிநீர் வழங்கல் திட்டப் பணிகள்
புழலில் செயல்பட்டு வரும் நாளொன்றுக்கு 300 MLD கொள்ளளவு கொண்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை 555 கோடியே 88 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 310 MLD கொள்ளளவு கொண்ட நிலையமாக மறுசீரமைத்து மேம்படுத்தும் பணிகள்
376 கோடியே 12 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில், அடையாறு மண்டலம், பள்ளிப்பட்டு மற்றும் திருவான்மியூர் பகுதிகளில் தொடர்ச்சியான குடிநீர் விநியோகம் செயல்படுத்தும் பணிகள்
என மொத்தம் 932 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 2 புதிய திட்டப் பணிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.
அதனைத் தொடர்ந்து, சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் அலுவலகப் பயன்பாட்டிற்காக 47 இலட்சம் ரூபாய் மதிப்பிலான 5 புதிய வாகனங்களை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கிடும் வகையில் அவ்வாகனங்களுக்கான சாவிகளை ஓட்டுநர்களிடம் வழங்கினார்.
Also Read
-
ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் ‘கலைவாணர்’ என்.எஸ்.கிருஷ்ணன் திருவுருவச் சிலை திறப்பு! - முழு விவரம் உள்ளே!
-
சென்னையில் கைவினைப் பொருட்களின் கண்காட்சி... தொடங்கி வைத்த முதலமைச்சர் - முழு விவரம்!
-
U19 உலகக்கோப்பை : இறுதிப்போட்டிக்குள் Entry கொடுத்த இந்திய இளம் அணி.. துவம்சம் செய்யப்பட்ட ஆப்கானிஸ்தான்!
-
மத்திய பிரதேசத்தில் 5 ஆண்டுகளில் 7 ஆயிரம் அரசுப் பள்ளிகள் மூடல்! : ஒன்றிய அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
-
“பிரதமர் மோடி மிகவும் ஆபத்தானவர்” : நடிகர் கிஷோர் விமர்சனம்!