Tamilnadu
“டபுள் இன்ஜின் காலாவதியான; தோல்வியடைந்த ஒன்று” : தி.மு.க மகளிர் மாநாட்டில் கனிமொழி எம்.பி பேச்சு!
‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ - தி.மு.க டெல்டா மண்டல மகளிர் மாநாடு தஞ்சையில் நடைபெற்றது. இம்மாநாட்டிற்கு கழக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி தலைமை தாங்கினார்.
இம்மாநாட்டில் பேசிய கனிமொழி எம்.பி,“திராவிட இன்ஜினிற்கு முன்னால், இந்த டபுள் இன்ஜின் எல்லாம் காலாவதியான, தோல்வியடைந்த, விரக்தியடைந்த இன்ஜின்தான் என ஒவ்வொரு நாளும் நிரூபித்துக்கொண்டிருக்கிறார் திராவிட நாயகர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இது தளபதியின் படை! முதலமைச்சரின் படை! இது வேறு எந்த பக்கமும் திரும்பாது .
பெண்களுக்கு இருசக்கர வாகனம் தருகிறேன் என்றார்கள்.. ஆனால், வரவில்லை. அதுபோல, இப்போது சொல்லும் ‘குலவிளக்கு திட்டம்’ என எந்த திட்டமும் வராது. அதற்கு மாறாக சொன்னதை செய்யும் திராவிட மாடல் ஆட்சியில், மகளிர் உரிமைத் தொகை ஒவ்வொரு மாதமும் வீடுகளின் கதவுகளைத் தட்டி வரும்.
கொரோனா காலத்தில் பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் மக்கள் சாலைகளில் அவதிப்பட்டு வந்தனர். ஆனால், அப்போது மருத்துவமனைகளில் 1 லட்சம் படுக்கை வசதிகளை அமைத்து மக்கள் நலனை உறுதிசெய்து சாதித்துக் காட்டிய ஆட்சி, திராவிட இன்ஜின் ஆட்சி" என தெரித்துள்ளார்.
Also Read
-
“பா.ஜ.க.வின் முரட்டு அடிமையாக எடப்பாடி பழனிசாமி செயல்படுகிறார்!”: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரை!
-
“பா.ஜ.க எந்த கெட்டப்பில் வந்தாலும் உங்களுக்கு “கெட் அவுட்”-தான்!”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!
-
கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்தில் 23 தங்க பதக்கங்கள் பெற்ற மாணவர் : பாராட்டிய அமைச்சர் இராஜேந்திரன்!
-
“இந்தியைத் திணிக்கிற பாசிஸ்டுகளுக்கு என்றைக்கும் தி.மு.க ஆபத்தான கட்சிதான்” : துணை முதலமைச்சர் உதயநிதி !
-
தமிழ்நாட்டில் 77வது குடியரசு தின விழா கொண்டாட்டம்! பல்வேறு துறை சாதனைகளுடன் வலம் வந்த அணிவகுப்பு ஊர்தி!