Tamilnadu
போக்குவரத்து பணியாளர்களுக்கு பொங்கல் பரிசு : சாதனை ஊக்கத்தொகை அறிவிப்பு!
பொங்கல் திருநாளை முன்னிட்டு அனைத்து அரசு போக்குவரத்து கழகங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு சாதனை ஊக்கத்தொகை வழங்கப்படும் என போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.
அதன் விவரம் வருமாறு:-
தமிழ்நாட்டில் சிறப்பான மற்றும் திறமையான போக்குவரத்து சேவையை பொதுமக்களுக்கு அளிப்பதில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. இந்தியாவிலேயே தமிழகத்தில் இயங்கும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தான் பயணிகள் அடர்வு, பேருந்து பயன்பாடு, எரிபொருள் செயல்திறன் ஆகியவற்றில் உயர்ந்து விளங்குகின்றன.
குக்கிராமம் முதல் மாநகரங்கள் உட்பட மக்கள் குடியிருக்கும் அனைத்துப் பகுதிகளுக்கும் தங்குதடையின்றி, போக்குவரத்து சேவை அளிக்கப்பட்டு வருகின்றது. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம், பல்லவன் போக்குவரத்து அறிவுரைப் பணிக்குழு ஆகிய அனைத்து நிறுவனங்களிலும் தற்போது சுமார் ஒரு இலட்சம் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றார்கள்.
பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம், பல்லவன் போக்குவரத்து அறிவுரைப் பணிக்குழு ஆகியவற்றில் பணிபுரியும், போக்குவரத்து கழகங்களின் பணியாளர்களில், 2025-ஆம் ஆண்டில் 91 நாட்கள் மற்றும் அதற்கு மேலும், ஆனால் 151 நாட்களுக்கும் குறைவாக பணிபுரிந்த ஊழியர்களுக்கு 85 ரூபாய் வீதமும்; 151 நாட்கள் மற்றும் அதற்கு மேலும் ஆனால் 200 நாட்களுக்கும் குறைவாக பணிபுரிந்த ஊழியர்களுக்கு 195 ரூபாய் வீதமும், 200 நாட்கள் மற்றும் அதற்கு மேலும் பணிபுரிந்த ஊழியர்களுக்கு 625 ரூபாய் வீதமும் பொங்கல் “சாதனை ஊக்கத் தொகை” வழங்கப்படும்.
இந்த உத்தரவின்படி, அனைத்து அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் ஒரு இலட்சத்து மூன்றாயிரத்து நூற்று இருபத்து மூன்று போக்குவரத்துக் கழகப் பணியாளர்களுக்கு ரூபாய் ஆறு கோடியே பதினான்கு இலட்சத்து தொண்ணூற்று இரண்டாயிரம் சாதனை ஊக்கத்தொகை வழங்கப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
50 திருநங்கையர்களுக்கு ஊர்க்காவல்படை உறுப்பினர் நியமன ஆணை! : முதலமைச்சர் வழங்கினார்!
-
முதலமைச்சருக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்த விவசாய பெருமக்கள்! : முழு விவரம் உள்ளே!
-
தொடரும் இலங்கைக் கடற்படையின் அராஜகம் : ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
2025 ஆம் ஆண்டுக்கான இலக்கிய மாமணி விருதுகள் 3 பேருக்கு அறிவிப்பு : யார் அவர்கள்?
-
“அண்ணா பற்ற வைத்த அந்த ’தீ’யை யாராலும் அணைக்க முடியாது” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!