Tamilnadu

ஆவின் பச்சை நிற பால் விலை உயர்வா?.. : அவதூறு பரப்பும் தவெக.. - உண்மையை விளக்கிய TN Fact Check!

தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி அமைந்த பிறகு, தமிழ்நாட்டு மக்களுக்கு தேவையான நல்ல விஷயங்கள் பார்த்து பார்த்து அரசு செய்து வருகிறது. சொன்னதையும் தாண்டி சொல்லாத விஷயங்களையும் செய்து வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இப்படியான சூழலில் திராவிட மாடல் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்று பலரும் வேண்டுமென்றே அவதூறு செய்திகளை பரப்பி வருகின்றனர்.

ஆரம்பத்தில் இதனை பாஜக செய்து வந்த நிலையில், பிறகு அதிமுகவும் பொய் செய்தியை பரப்பி வந்தது. ஒவ்வொரு பொய்க்கும் அரசை தாண்டி மக்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர். தற்போது அந்த வரிசையில் விஜயின் தவெக கட்சியும் இணைந்துள்ளது. விஜய் தனது பரப்புரையின்போது கூட அவதூறுகளை அள்ளி வீசிய நிலையில், அதற்கு அரசு தரப்பில் ஆதாரங்களுடன் பதிலடி கொடுக்கப்பட்டது.

இந்த சூழலில் அவர் வழியில் அவரது ரசிகர்களும் போலி செய்தியை பரப்பி வருகின்றனர். அந்த வகையில் தற்போது ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் விலை அதிகரித்துவிட்டதாக தமிழக வெற்றிக் கழகத்தின் தகவல் தொழில்நுட்ப அணியின் அதிகாரபூர்வ சமூக வலைதள பக்கத்தில் வதந்தி பரப்பி வருகின்றனர்.

இந்த நிலையில், அது முற்றிலும் தவறு என்று TN Fact Check விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து TN Fact Check வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவு வருமாறு :-

ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் விலை உயர்த்தப்பட்டதாகப் பரப்பப்படும் வதந்தி !

கடந்த 2021-ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்றவுடன் ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டது.

தற்போது ஆவின் நிறுவனம் அறிமுகப்படுத்தியிருப்பது கிரீன் மேஜிக் பிளஸ் என்ற புதிய வகை பால் பாக்கெட்டாகும். இதில் கூடுதலாக வைட்டமின் ஏ மற்றும் டி செறிவூட்டப்பட்டு உள்ளதுடன் கொழுப்புச் சத்து: 4.5% இதரச் சத்துக்கள்: 9% S.N.F. உயர்த்தப்பட்டு உள்ளது.

கொழுப்புச் சத்து: 4.5% மற்றும் இதரச் சத்துக்கள்: 8.5% S.N.F கொண்ட பழைய ஆவின் கிரீன் மேஜிக் நிலைப்படுத்தப்பட்ட பால் பாக்கெட் தற்போதும் அதே விலையில் கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் உற்பத்தியும் நிறுத்தப்படவில்லை. தவறான தகவலைப் பரப்பாதீர்!

Also Read: விறுவிறுப்பாக தயாராகும் தி.மு.க தேர்தல் அறிக்கை! : 4 நாட்களில் 52,080 பரிந்துரைகள் தெரிவித்த பொதுமக்கள்!