Tamilnadu
2026 திமுக தேர்தல் அறிக்கையில் மக்கள் கருத்து... உங்கள் கருத்துகளை தெரிவிப்பது எப்படி? - விவரம் உள்ளே!
எல்லார்க்கும் எல்லாம் என்ற சீரிய சிந்தனையோடு ஆட்சி செய்து வரும் கழகத்தலைவர் அவர்கள், வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்கான கழகத்தின் தேர்தல் அறிக்கையைத் தயாரிக்கும் பொருட்டு , கழகத் துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி., அவர்களின் தலைமையில் அமைச்சர்கள் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், டி.ஆர்.பி.ராஜா, கோவி செழியன், சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழரசி, டாக்டர் எழிலன், முன்னாள் எம்.பி டிகேஎஸ் இளங்கோவன், அப்துல்லா, கார்த்திகேய சிவசேனாபதி, கான்ஸ்டண்டைன் ரவீந்திரன், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஜி. சந்தானம், தொழிலதிபர் சுரேஷ் சம்பந்தம் ஆகிய 12 பேர் அடங்கிய தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவை அமைத்திருந்தார்.
இக்குழுவினர் பொதுமக்கள், வணிகர்கள், விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களையும் நேரடியாக சந்தித்து பரிந்துரைகளை பெரும் பொருட்டு தமிழ்நாடு முழுக்க பயணம் செய்ய உள்ளனர்.
துவக்க நிகழ்வாக அண்ணா அறிவாலயத்தில் இன்று (03.01.2026 சனிக்கிழமை) கழகத் தலைவர் அவர்கள் பொதுமக்களின் கருத்துக்களையும் பரிந்துரைகளையும் பெறும் வகையிலான அலைபேசி எண், வலைதள விவரம், சமூக வலைதள தொடர்புகள், செயற்கை நுண்ணறிவு வலைவாசல் (portal) ஆகியவற்றை அறிமுகம் செய்து வைத்தார்.
பொது மக்கள் கீழ்கண்ட தளங்களின் மூலம் கருத்துக்களையும் பரிந்துரைகளையும் கழகத்திற்கு வழங்கலாம்...
* தொலைபேசி : 08069446900
* வாட்ஸ்அப் (WhatsApp) : 9384001724
* மின்னஞ்சல் : dmkmanifesto2026@dmk.in
* இணையதளம் : http://www.dmk.in/ta/manifesto2026
* சமூக வலைத்தளங்கள் : dmkmanifesto26
* செயற்கை நுண்ணறிவுத் தளம் : tnmanifesto.ai
Also Read
-
ஜனவரிக்குள் 1 கிலோ அரிசி விலை ரூ.120-ஆக உயரும் அபாயம்! - த.வெ.க.வின் தோல்வியால் தவிக்கும் மக்கள்!
-
த.வெ.க எம்.எல்.ஏ. சரவணன் மீது பணமோசடி புகார் : “இதுதான் தூய ஆட்சியின் லட்சணமா?” - கனிமொழி எம்.பி. சாடல்!
-
“பாலுக்கு காவல், பூனைக்கு தோழனா?” : விஜய்யின் Double Action-க்கு தயாநிதி மாறன் கண்டனம்!
-
தேசிய விருதுகள் முதல் பத்ம ஸ்ரீ விருதுகள் வரை.. காலா பட நடிகர் நானா படேகர் காலமானார்!
-
குடிநீர் தொட்டியில் மலம்.. மூடி மறைத்த அரசுப் பள்ளி நிர்வாகம்.. 2 நாட்களாக அவலம்!