Tamilnadu
“எங்களுக்கு யாரைக் கண்டும் எந்த பயமும் கிடையாது” : கனிமொழி எம்.பி அதிரடி!
'வெல்லும் தமிழ் பெண்கள்' என்ற தலைப்பில் தி.மு.க மகளிர் அணியின் மேற்கு மண்டல மாநாடு டிச.29 ஆம் தேதி திருப்பூரில் நடைபெறுகிறது. இம்மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.
இந்நிலையில், இம்மாநாடு தொடர்பான ஆலோசனைக்கூட்டம் இன்று கழக துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி தலைமையில் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி எம்.பி,"இந்த மாநாட்டில் 1 முதல் 2 லட்சம் வரை பெண்கள் பங்கேற்பார்கள். அவர்கள் எவ்விதமான சிரமங்களும் இல்லாமல் பங்கேற்கும் வகையில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்படும். தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பாக உள்ளதால், மாநாட்டுக்கு என தனி பாதுகாப்பு ஏற்பாடுகள் தேவை இல்லை.
தமிழ்நாட்டை கடன் மாநிலமாக விட்டு சென்றார்கள் அ.தி.மு.க ஆட்சியாளர்கள். ஆனால், இன்றைக்கு இந்தியாவின் முதல் மாநிலமாக தமிழ்நாட்டை வளர்த்தெடுத்து இருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். உண்மை என்ன என்று பழனிசாமிக்கு தெரியும். தேர்தலுக்காக அவர் பேசி வருகிறார்.
மற்ற கட்சியினர்தான் கருப்புக் கொடிக்கு அஞ்சுவார்கள். நாங்கள் கருப்பில் இருந்து வந்தவர்கள். எங்களுக்கு யாரைக் கண்டும் எந்த பயமும் கிடையாது” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“எந்த பாசிச சக்திகளாலும் ஒன்றும் செய்ய முடியாது” : கிறிஸ்துமஸ் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“திராவிட மாடலின் சாதனைகள் தொடரும்; உழவர் வாழ்வு செழிக்கும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உங்களை ஒரு பொருட்டாகவே டெல்லி மதிக்கவில்லை : பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி!
-
“தமிழ்நாடு மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு வேண்டும்!” : ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் கடிதம்!
-
“தமிழ்நாடு அரசின் முடிவால் செவிலியர்கள் மகிழ்ச்சி!” : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!