Tamilnadu
“தமிழ்நாட்டின் வளர்ச்சியே முதன்மையானது” : தி.மு.க தேர்தல் அறிக்கை குறித்து கனிமொழி எம்.பி பேட்டி!
தமிழ்நாட்டில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கியதை அடுத்து அனைத்து கட்சிகளுமே தேர்தல் பணிகளை தொடங்கி விட்டன. இந்த நிலையில் கடந்த வாரம் கனிமொழி எம்.பி தலைமையில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்காக தி.மு.க தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழுவை கழக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, இன்று அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க தேர்தல் அறிக்கை குழுவின் முதல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பின்னர் இக்குழுவினர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி எம்.பி," தி.மு.க தேர்தல் அறிக்கைக்குழுவின் முதல் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எந்தெந்த மாவட்டத்தில் எப்படி பணிகளை தொடங்குவது என்றும் விவசாயிகள், தொழிலாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட யாரை எல்லாம் சந்திக்க உள்ளோம் என்பது குறித்து ஆலோசனையில் ஈடுபட்டோம்.
வேலைவாய்ப்புகள், மகளிருக்கான உரிமை, விவசாயிகளின் பாதுகாப்பு என்று ஒன்றிய பாஜக அரசு, மக்களிடம் இருந்து அனைத்தையும் பறிப்பதையே ஒரு வேலையாக வைத்துக்கொண்டிருக்கிறது. இந்த சூழலில் வேலைவாய்ப்பை அதிகரிப்பது, மாநில உரிமைக்கு போராடுவது உள்ளிட்டவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு தேர்தல் அறிக்கை வெளியிடப்படும்.
ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டின் வளர்ச்சியை கருத்தில் கொண்டே இந்த தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆலோசனையை பெற்ற பிறகே தேர்தல் அறிக்கை வெளியிடப்படும்” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
சென்னை மக்களே கொண்டாட்டத்திற்கு தயாராகுங்கள் : ஜன.14 ஆம் தேதி தொடங்கிறது சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா
-
சென்னை மெட்ரோ ரயில் Phase II : அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!
-
வேளாங்கண்ணி TO இலங்கை... ரூ.6 கோடி மதிப்பிலான போதைப்பொருள்.. இந்து மக்கள் கட்சி நிர்வாகி கைது!
-
“ரூ.86.40 இலட்சம் மதிப்பீட்டில் வீடற்றோருக்கான இரவுநேர காப்பகம் திறப்பு!” : முழு விவரம் உள்ளே!
-
‘இந்தி எதிர்ப்புப் போராட்டம் – முழுமையான அரசு ஆவணங்கள்’ நூல் வெளியீடு! : முழு விவரம் உள்ளே!