Tamilnadu
மாதவிடாய் சுகாதாரத் திட்டம் பயன் தருகிறதா? : ஒன்றிய அரசுக்கு தி.மு.க MP கேள்வி!
இந்திய அளவில் S.I.R, வாக்குத் திருட்டு, மாநிலங்களுக்கான ஒன்றிய அரசின் நிதி மறுப்பு உள்ளிட்ட வஞ்சிப்பு நடவடிக்கைகள் தொடரும் நிலையில், டிச.1 அன்று நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது.
அதன் தொடர்ச்சியாக,நாடாளுமன்றக் கூட்டத்தில் தி.மு.க எம்.பி.க்கள் எழுப்பிய கேள்விகள் பின்வருமாறு:-
விவசாயம் மற்றும் அது சார்ந்த துறைகளில் விவசாயிகளிடையே திறன் மேம்பாடு, திறனை வளர்த்தல் மற்றும் பயிற்சி ஆகியவற்றை ஊக்குவிப்பதற்காக அரசாங்கத்தால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளின் விவரங்களை மக்களவையில் திமுக உறுப்பினர் அ. மணி கேட்டுள்ளார்.
அவை,கடந்த ஐந்து ஆண்டுகளில் தருமபுரி மாவட்டத்தில் நடத்தப்பட்ட குறிப்பிட்ட முன்முயற்சிகள், பயிற்சித் தொகுதிகள், வெளிப்பாட்டுப் பயணங்கள், விவசாயப் பண்ணைப் பள்ளிகள் மற்றும் டிஜிட்டல் வேளாண் திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் யாவை? இந்தத் திறன் மேம்பாட்டுத் திட்டங்களால் தருமபுரி மாவட்டத்தில் பயனடைந்த விவசாயிகளின் எண்ணிக்கை என்ன?
தருமபுரி மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்காக, குறிப்பாக நவீன விவசாய நுட்பங்கள், உழவர் உற்பத்தியாளர் அமைப்பு மேம்பாடு மற்றும் அது சார்ந்த துறை பல்வகைப்படுத்தல் ஆகியவற்றில் திறன் மேம்பாட்டை மேம்படுத்துவதற்காக அரசாங்கம் முன்மொழியும் புதிய திட்டங்கள் என்ன? என கேள்வி எழுப்பியுள்ளார்.
மாதவிடாய் சுகாதாரத் திட்டம் – பயன் தருகிறதா அவுஷிதி சுவிதா திட்டம்?
கடந்த ஐந்து ஆண்டுகளில் மாதவிடாய் சுகாதாரத் திட்டத்திற்காக மாநில வாரியாக ஒதுக்கீடு செய்யப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட நிதிகள் குறித்த விவரங்கள் வேண்டும் மற்றும் தமிழ்நாட்டில் மாதவிடாய் சுகாதா ரத் திட்டம், சுகாதார நாப்கின்கள் கொள்முதல், விநியோகம் மற்றும் ஜன் அவுஷதி சுவிதா பேட்களின் பயன்பாட்டு விகிதம் குறித்த விவரங்கள் கேட்டு மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் ராஜாத்தி சல்மா கேள்வி எழுப்பியுள்ளார்.
கேரள வேர் வாடல் நோயால் பாதிக்கப்பட்ட தென்னைத் தோட்டங்கள்
தமிழ்நாட்டின் சில பகுதிகளில் தென்னைத் தோட்டங்களைப் பாதிக்கும் கேரள வேர் வாடல் நோயின் கடுமையான பாதிப்புக்குள்ளான பகுதியின் அளவு மற்றும் மதிப்பிடப்பட்ட இழப்புகள் என்ன என பொள்ளாச்சி எம்.பி. கே. ஈஸ்வரசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
தென்னை மரத்தை காக்க காப்பீட்டுத் திட்டம் அல்லது வேறு ஏதேனும் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறதா? கடந்த ஐந்து ஆண்டுகளில் தென்னை மரக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயனடைந்தவர்களின் எண்ணிக்கை, தீர்க்கப்பட்ட கோரிக்கைகள் மற்றும் விநியோகிக்கப்பட்ட மொத்த நிதி எவ்வளவு? பாதிக்கப்பட்ட பகுதிகளில் நோய் கண்காணிப்பை வலுப்படுத்தவும், நிதி நிவாரணம் வழங்கவும் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட தென்னை வகைகளை ஊக்குவிக்கவும் அரசால் பரிசீலிக்கப்படும் திட்டங்கள் என்ன? என்றும் அவர் கேட்டுள்ளார்.
Also Read
-
பீகாரில் மகளிர் திட்டத்தில் முறைகேடு : ஆண்களின் வங்கி கணக்தில் வரவு வைக்கப்பட்ட பணம்!
-
விவசாய நிலங்கள் கையகப்படுத்துவதை தடுக்க நடவடிக்கை என்ன? : நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய திமுக எம்.பி!
-
“GST நஷ்டத்திற்கு இழப்பீடு வேண்டும்” : நாடாளுமன்றத்தில் ராஜேஷ்குமார் MP வலியுறுத்தல்!
-
காந்தி பெயரை நீக்கதான் முடியும், இதை உங்களால் சிதைக்க முடியாது : முரசொலி தலையங்கம்!
-
“74,168 விவசாயிகளுக்கு குறைந்தபட்ச மானிய விலை (MSP) நிதி வழங்காதது ஏன்?” : திருச்சி சிவா எம்.பி கேள்வி!