Tamilnadu
பொள்ளாச்சி ரயில் நிலையங்களை சேலம் கோட்டத்திற்கு மாற்றுவது எப்போது : திமுக MP ஈஸ்வரசாமி கேள்வி!
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கிணத்துக்கடவு மற்றும் பொள்ளாச்சி ரயில் நிலையங்களை பாலக்காடு கோட்டத்திலிருந்து சேலம் கோட்டத்திற்கு மாற்றுவது தொடர்பாக வைத்த கோரிக்கைகளின்மீது ஒன்றிய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகல் குறித்து பொள்ளாச்சி திமுக எம்.பி. கே. ஈஸ்வரசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
அதில்,தற்போதைய கோட்ட ஏற்பாடு உள்கட்டமைப்பு மேம்பாடுகள் மற்றும் பயணிகள் வசதிகளில் தாமதத்தை ஏற்படுத்துகிறது என்பதை பலமுறை வலியுறுத்தியுள்ளதை சுட்டிக்காட்டி அது குறித்து ஒன்றிய அரசு தமிழ்நாடு மாநில அரசுடன் நடத்திய ஆய்வு மற்றும் ஆலோசனைகள் என்ன? கோயம்புத்தூர் மற்றும் பொள்ளாச்சி பகுதிகளில் பயணிகளுக்கு சமமான வளர்ச்சியை உறுதி செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்கள் குறித்தும் அவர் கேட்டுள்ளார்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி செய்யும் மாநிலங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கிடுக
நாட்டில் உபரியாக உள்ள புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி செய்யும் மாநிலங்களுக்கு அரசாங்கம் ஊக்கத்தொகை அளிக்க வேண்டி நாடாளுமன்றத்தில் திமுக மக்களவை உறுப்பினர் முரசொலி கோரிக்கை வைத்துள்ளார்.
மேலும் அதில், நாடு முழுவதும் நிறுவப்பட்டு உருவாக்கப்பட்ட புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன் பற்றிய விவரங்கள் என்ன? கடந்த ஐந்து ஆண்டுகளில், பல்வேறு புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மின் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட மற்றும் வழங்கப்பட்ட நிதிகள் என்ன என்பது குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளார்.
Also Read
-
“உலகத்திலேயே முதன்முறையாக உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரம்!” : உதயநிதி பெருமிதம்!
-
தமிழ்நாட்டில் சூரிய மின்சக்தி பூங்காக்கள் அமைக்க வேண்டும் : நாடாளுமன்றத்தில் ஆ.மணி MP வலியுறுத்தல்!
-
ஆதவ் அர்ஜுனாவின் கிளி ஜோசியத்திற்கு பதில் சொல்ல முடியாது : அமைச்சர் ரகுபதி பதிலடி!
-
வாடகை வீட்டில் பெண்களுக்கு Scan.. கருவின் பாலினம் குறித்து கூறி வந்த பெண் உள்பட 3 பேர் சேலத்தில் கைது!
-
தூயமல்லி அரிசி மற்றும் கவுந்தபாடி நாட்டு சர்க்கரைக்கு புவிசார் குறியீடு அறிவிப்பு!