Tamilnadu
”நெல் கொள்முதலில் தமிழ்நாடு அரசு சாதணை” : பெருமையுடன் சொன்ன அமைச்சர் சக்கரபாணி!
திண்டுக்கல்லில் 72 வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய அமைச்சர் சக்கரபாணி "தமிழ்நாட்டில் 38,000 நியாய விலை கடைகள் உள்ளது. இதில் 27,000 முழு நேர நியாயவிலைக் கடைகளுக்கு முனைய இயந்திரம் உள்ளது. பகுதிநேர நியாய விலை கடைகளுக்கு பொருட்கள் விநியோகம் செய்யும் போது விற்பனை முனைய இயந்திரத்தை எடுத்துச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இது பணியாளர்களுக்கு மிகவும் சிரமமாக உள்ள காரணத்தினால் ரூ.53 கோடி மதிப்பீட்டில் 6,800 விற்பனை முனைய இயந்திரங்கள் புதிதாக வாங்கப்பட்டுள்ளது. பகுதி நேர கடைகளில் தற்போது இந்த இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
கடந்த அதிமுக ஆட்சியில் 376 அரிசி ஆலைகள் மட்டுமே இருந்தது. ஆனால் தி.மு.க ஆட்சியில் 700 அரிசி ஆலைகள் செயல்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படக்கூடிய அரிசி, கோதுமை, பருப்பு, சர்க்கரை போன்ற பொருட்கள் தரமாக உள்ளதாக என ஆய்வு செய்ய மாவட்ட வழங்கள் அலுவலர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2023 - 24 ஆண்டுகளில் தமிழ்நாட்டிலே இதுவரை இல்லாத அளவில் 4000 இடங்களில் நேரடி கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டு நெல்கள் கொள்முதல் செய்யப்பட்டது.
10 ஆண்டுகால அ.தி.மு.க ஆட்சியில் 1.79 கோடி மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால் திராவிட மாடல் ஆட்சி அமைந்து 54 மாதத்திலேயே 1.98 கோடி மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்து சாதனைப் படைத்துள்ளோம்.
தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து கூட்டுறவுத்துறை மட்டுமல்ல அனைத்து துறைகளிலும் இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு சிறந்து விளங்கி வருகிறது” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
”விவசாயிகளின் கண்ணீரை பற்றி கவலைப்படாத பிரதமர் மோடி” : செல்வப்பெருந்தகை ஆவேசம்!
-
சென்னையில் ரூ.89.70 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 584 குடியிருப்புகள் திறப்பு! : முழு விவரம் உள்ளே!
-
”தமிழ்நாடு விவசாயிகளை வஞ்சித்துள்ள ஒன்றிய பா.ஜ.க அரசு” : மு.வீரபாண்டியன் கண்டனம்!
-
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு எதிராக போடப்படும் தடைக்கற்களை தகர்த்தெறிவோம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி
-
சமூக வலைதளங்களில் இளையராஜாவின் புகைப்படத்தை பயன்படுத்த இடைக்கால தடை - காரணம் என்ன ?