Tamilnadu
அறிவாலயத்தில் நடந்த நெகிழ்ச்சி நிகழ்வு! - கழக உடன்பிறப்பின் கோரிக்கையை உடனே நிறைவேற்றிய முதலமைச்சர்!
சென்னை, அண்ணா அறிவாலயத்தில், “உடன்பிறப்பே வா” என்ற தலைப்பில் சட்டமன்றத் தொகுதி வாரியாக பகுதி-நகர-ஒன்றிய-பேரூர் கழகச் செயலாளர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக கழகத் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் அவர்கள் சந்திக்கும் நிகழ்வு 13.6.2025 அன்று தொடங்கப்பட்டது.
அந்த சந்திப்பு நிகழ்வின்போது, மக்களின் கோரிக்கைகளைக் கேட்பதுடன், கழகத்தினரின் விருப்பங்களையும் அறிந்து கொள்வதற்காகத்தான் அறிவாலயத்தில், ‘உடன்பிறப்பே வா’ எனும் தொகுதிவாரியான நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் நடைபெற்று வருகிறது என கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் குறிப்பிட்டிருந்தார்.
கடந்த 1.6.2025 அன்று மதுரையில் நடைபெற்ற கழகப் பொதுக்குழுவில் இந்தச் சந்திப்பு குறித்து கழகத் தலைவர் அவர்கள் உரையாற்றும்போது அறிவித்தார். அதன்படியே, கழக நிர்வாகிகளை ‘ஒன் டூ ஒன்’-ஆக தலைவர் அவர்கள் நேரடியாக சந்தித்து அவர்கள் மனதில் உள்ளதை கேட்டறிந்து வருகிறார்.
கழகத் தலைவர் அவர்கள், கழக நிர்வாகிகளிடம் அந்தந்த சட்டமன்றத் தொகுதிகளில் கழக ஆட்சியின் மீது ஆண்கள், பெண்கள், இளைஞர்கள் ஆகியோரது ஆதரவு நிலை குறித்தும், மக்களின் எதிர்பார்ப்புகள் குறித்தும் கேட்டறிகிறார்.
திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வரும் சிறப்பான திட்டங்களையும், சலுகைகளையும், சாதனைகளையும், மாணவ- மாணவிகள், பெண்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் என அனைத்துத் தரப்பினரும் அறிந்திடும் வகையில் எடுத்துரைக்க வேண்டும் எனவும் அறிவுரைகள் வழங்கி வருகிறார்கள்.
இன்று (19.11.2025) 93ஆவது தொகுதியாக திருநெல்வேலி மேற்கு மாவட்டம் ஆலங்குளம் தொகுதி நிலவரம் குறித்து தெற்கு ஒன்றிய செயலாளர் திரு. சிவகுமார் அவர்களிடம் கேட்டறிந்தபோது, தனது தந்தையான கழக மூத்த உறுப்பினர், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள விருப்பப்படுவதாக தெரிவித்தார்.
முதலமைச்சர் அவர்கள் உடனடியாக தொலைபேசி வாயிலாக சிவகுமார் அவர்களின் தந்தையாரை தொடர்பு கொண்டு அவர் உடல்நலம் குறித்து விசாரித்தார். அத்துடன், “தாங்கள் புகைப்படம் எடுத்துக் கொள்ள விரும்புவதாக தெரிவித்தீர்களாம்”, நாளை அறிவாலயத்திற்கு வரமுடியுமா, வந்தால் தங்கள் விருப்பப்படி புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம்” என்று கூறினார்.
முதலமைச்சர் அவர்கள் தம் தந்தையாரிடம் பரிவுடன் பேசியதைக் கேட்டவுடன் சிவகுமார் கண்ணீர் மல்க முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது முதலமைச்சர் அவர்கள், சிவகுமாரிடம் நாளையே, தங்கள் தந்தையாரை அழைத்து வருமாறு கூறினார்.
மேலும், விபத்தில் சிக்கி காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர்
சரவணகுமார் அவர்களை முதலமைச்சர் அவர்கள் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு உடல்நலம் குறித்து விசாரித்தார்.
முதலமைச்சர் அவர்கள் தொகுதி நிலவரம் குறித்து கேட்டறியும் போதே கழக நிர்வாகிகளின் குடும்பத்தார் நலனையும் கேட்டறிவதுடன், அவர்கள் தெரிவிக்கும் குறைகளையும் உடனடியாக நிவர்த்தி செய்து வருகிறார் என்பதற்கு இந்த நிகழ்ச்சியே ஒரு முக்கியமான சாட்சியாகும்.
இதன் மூலம் கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் தம்முடைய குடும்பத்தின் மீது கழகத் தலைவராகிய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் செலுத்தி வரும் அக்கறையை நினைத்து பெருமிதம் அடைகிறார்கள்.
Also Read
-
“முதலமைச்சர் கோப்பை போட்டி நடத்த காரணம் இதுதான்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
ரூ.7 கோடியுடன் ATM வாகனத்தை கடத்திச் சென்ற கும்பல் : பெங்களூருவில் நடந்த துணிகரம்!
-
17 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் : பா.ஜ.க ஆட்சி நடக்கும் உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!
-
மூளையை தின்னும் அமீபா வைரஸ் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்ன முக்கிய தகவல்!
-
வேளாண் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு என்ன தகுதி இருக்கிறது ? : செல்வப்பெருந்தகை கேள்வி!